Thursday 17 March 2011

தென்றல் என்னை முத்தமிட்டது…


படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடகர்: கிருஷ்ணசந்தர், பி.எஸ். சசிரேகா.
நடிகர்கள்: ரகுவரன், சுமலதா
இசை: இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1983.

கிருஷ்ணசந்தர் அவர்களின் வித்தியாசமான குரலில் அமைந்த இந்த பாடல் எனக்குப் பிடிக்கும். இந்த படத்தில் உள்ள பாடல்களில் மற்றொன்றான “தலையைக் குனியும் தாமரையே” என்ற பாடலும் நான் ரசித்த பாடல் தான். அதனை பிறிதொரு சமயம் பகிர்கிறேன். இதோ நான் ரசித்த இந்த பாடலின் காணொளி கீழே….


தென்றல் என்னை முத்தமிட்டது……
தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....

தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....
தென்றல் என்னை முத்தமிட்டது……

நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்….
தூரம் இன்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆ... ஆ... ஆ.... ஆ.... ஆஆஆ
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
காதல் மேளம் நானும் கேட்டேன்

தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....
தென்றல் என்னை முத்தமிட்டது……

காமன் தோட்டம் பூத்த நேரம்
நாணம் வந்து வேலி போடும்…
ஊடல் என்னை தீண்டச் சொல்லும்
வேலி உன்னை மேயச் சொல்லும்
காத்துக் கிடந்த சோலையோரம்
ஆ... ஆ... ஆ.... ஆ....ஆஆஆ
காத்துக் கிடந்த சோலையோரம்
கங்கை வந்து பாயும் நேரம்

தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....
தென்றல் என்னை தென்றல் என்னை
தென்றல் என்னை முத்தமிட்டது……

Wednesday 9 March 2011

பாட்டு ஒண்ணு பாடு தம்பி…



படம்: வறுமையின் நிறம் சிவப்பு
பாடகர்: எஸ்.பி.பி.
நடிகர்கள்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
படம் வெளிவந்த வருடம்: 1980.

விசில் ஒலியில் ஆரம்பிக்கும் இந்த பாடல், நல்ல இசையோடு பயணித்து இந்தியாவின் பெருகும் மக்கள்தொகையையும் அதனால் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் அழகாய்ச் சொல்லிப் போகும். கண்ணதாசன் அவர்களுக்கு பாட்டு எழுதச் சொல்லித் தரவா வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம் பற்றி அழகாய் சொல்லி இருப்பார் இந்த பாடலில். நான் ரசித்த இந்த பாடல் இதோ உங்கள் ரசனைக்காய்….




பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி…..
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பியோ….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

வந்தாரை வாழவச்சி அ.. சொந்தங்களை ஏங்கவச்சி
பூமி எங்கும் பேரெடுத்தோமே… தம்பியோ…..
ஊர் முழுதும் புத்தி சொன்னோமே.ஆஆஆஆ…
பட்டணத்து வீதியிலே பட்டம் பெற்ற ஆணும் பெண்ணும்
இட்டிலிக்கும் தோசைக்குமா சுத்தி சுத்தி வராரப்பா
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம்தான்னு சொல்லுங்கப்பா

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

வற்றாத கங்கையென்றும் வாகான பொன்னியென்றும்
கத்தாத ஆளில்லையப்பா ஆனாலும் கத்தாழை வெளையுதேயப்பா...
நான் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவமில்லே
நான் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவமில்லே
அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா…ஆ….
அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா
கங்கையிலே முழுகிவிட்டு காவிகட்டி போவோமப்பா….

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….

ஊரெல்லாம் பிள்ளையப்பா உள்வீடு நிறையுதப்பா
கூரையிலும் பொங்குதே யப்பா….
இனிமேல் கூப்பிடவே பேரில்லையப்பா
பள்ளியிலே இடமுமில்லே படிச்சி வந்தா வேலையில்லே
பள்ளியறை மட்டும் சும்மா பட்டு பட்டு தெறிக்குதப்பா
ஆண்டவன் மேல் பழியப்போட்டு அடிவயித்தை தடவுங்கப்பா!

பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசிய கொஞ்சம் மறந்திருப்போம்
பாரதத்து தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பியோ….
பாரதத்து பெருமை தன்னை பாடு பாடு சோறு எதுக்கு தம்பி….


Wednesday 2 March 2011

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ



இன்று மஹாசிவராத்திரி. சுதா ரகுநாதன் குரலில் இந்த பாடல் உங்கள் ரசனைக்காய் இதோ. எம்பார் கண்ணன் வயலின், நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன் மிருதங்கம். நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன் அவர்களின் தந்தை எனக்கு பள்ளியில் ஆங்கிலம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர். பாடலின் காணொளி கீழே…



[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

[G]கங்காதர ஷங்கர கருணாகர
மாமவ [B]பவ சாகர தாரக
[G]கங்காதர ஷங்கர கருணாகர
மாமவ [B]பவ சாகர தாரக

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

நிர்[g]குண பரப்ரஹ்ம ஸ்வரூப
[G]கம [G]கம [B]பூத ப்ரபஞ்ச ரஹித
நிர்[g]குண பரப்ரஹ்ம ஸ்வரூப
[G]கம [G]கம [B]பூத ப்ரபஞ்ச ரஹித

நிஜ [G]குஹ நிஹித நிதாந்தகனந்த
நிஜ [G]குஹ நிஹித நிதாந்தகனந்த
ஆனந்த அதிசய அக்ஷயலிங்க
ஆனந்த அதிசய அக்ஷயலிங்க
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட தகதோம்
[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட தகதோம்
மதங்க முனிவர வந்தித ஈஷா…..
[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட தகதோம்
மதங்க முனிவர வந்தித ஈஷா
சர்வ [D]திகம்பர வேஷ்டித வேஷா

மதங்க முனிவர வந்தித ஈஷா
சர்வ [D]திகம்பர வேஷ்டித வேஷா
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா
ஈஷா சபேஷா சர்வேஷா

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[D]திமித [D]திமித [D]திமி [D]திமிகிட தகதோம்
தோம் தோம் திமிகிட தரிகிட திகதோம்
மதங்க முனிவர வந்தித ஈஷா
சர்வ [D]திகம்பர வேஷ்டித வேஷா
நித்ய நிரஞ்சன நித்ய நடேஷா
ஈஷா சபேஷா சர்வேஷா

[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
[B]போ ஷம்[B]போ ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ

ஷிவ ஷம்[B]போ ஸ்வயம்[B]போ
ஷிவ ஷம்[B]போ….. ஸ்வயம்[B]போ……
ஷிவ ஷம்[B]போ….. ஸ்வயம்[B]போ……
ஸ்வயம்[B]போ…… ஸ்வயம்[B]போ…… ஸ்வயம்[B]போ……