Tuesday 24 May 2011

போஜனம் செய்ய வாருங்கள்

கல்யாணப்பாடல்களில் ஒன்றாக முன்பு சம்பந்தி சாப்பிடவே மாட்டாள் என்ற பாடல் உங்களுடன் பகிர்ந்து கொண்டோம். மீனாக்ஷி சுந்தரேசர் கல்யாணத்தில் யார் யார் வந்திருந்தார்கள், என்ன சாப்பாடு பரிமாறினார்கள் என்ற பெரிய பட்டியலோடு ஒரு பாடல் இருக்கிறது அது தான் இந்த பகிர்வில். மாம்பலம் சகோதரிகள் குரலில் இந்த பாடல் இதோ உங்களுக்காய். பாடலைக் கேட்டு முடிக்கும்போது, இது எல்லாம் சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் உங்களுக்கு வருவதை நிச்சயமாய் தடுக்க முடியாது! திருப்தியாய் ஒரு கல்யாண போஜனம் செய்ய வாருங்கள்!

பாடல் கேட்க:


பாடல் வரிகள்:

போஜனம் செய்ய வாருங்கள்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்
நவ சித்ரமானதோர் கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கள்

வாழை மரத்துடன் வெட்டி வேர் கொழுந்து
மாவிலைத் தோரணம் பவழ ஸ்தம்பம்
நாட்டிய கூடம் பச்ச மரகதம்
பதித்த செவர்களும் பசும்பொன் தரையில்
பலவர்ண பொடியினால் பதித்த கோலத்தில்
நட்ட நடுவே குத்து விளக்கேற்றி
தூண்கள் தோறும் தூண்டா விளக்கும்
சுற்றிலும் தீபங்கள் மணிகளும் அசைய
பந்திபந்தியாய் பாயை விரித்து
உத்தரணியுடன் ஜலபாத்திரங்களும்
தலைவாழை இலை போட்டு தப்பாமல் இடம்பண்ணி
போஜனம் செய்ய வாருங்கள்

மும்மூர்த்திகளுடன் முனிவர்கள் தேவர்கள்
யக்ஷகின்னரர் கந்தர்வர்களும்
அஷ்டதிக்கு பாலகர்கள் சூழ
அந்தணர்களும் முன்பந்தியிலே
அணிஅணியாக அவரவர் இடத்தில்
அழகாய் இருந்தார்
அகல்யை திரௌபதி சீதை தாரை
மண்டோதரியுடன் பந்தடித்தார்போல் பட்டுகள் கட்டி
கெஜ்ஜை மெட்டிகள் கிலுகிலுங்கவே
முத்திரை மோதிரம் விரலில் கொண்டு
பசும்பொன் தூக்கில் பாயாசத்தை எடுத்து
பார்த்து பார்த்து பரிமாறவே வந்தார்
போஜனம் செய்ய வாருங்கள்
மாந்தயிர் பச்சடி தேங்காய்பூ கோசுமல்லி
இரங்கிக்காய் கிச்சடி பரங்கிக்காய் பச்சடி
விதம்விதமாகவே வற்றல் அப்பளம்
பாங்குள்ள கூட்டு டாங்கர் பகுத்தெடு
சிலாபிஞ்சு கறியும் பலாபிஞ்சு கறியும்
பாகற்காய் கசக்கல் கத்திரிக்காய் துவட்டல்
வாழைக்காய் வருவல் வாழைப்பூ துருவல்
குங்குருக்கு சுகமான சம்பா அரிசியென
மொத்த பருப்பும் புத்துருக்கு நெய்யும்
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிச்ச குழம்பு பூசணிக்காய் சாம்பார்
வெண்டைக்காய் மோர்க்கடி வெங்காய சாம்பார்
வாய்க்கு மிக ருசிக்கும் மிளகு ஜீரா ரசம்
மதுரமாய் இருக்கும் மைசூர் ரசமும்
பருப்புகள் சேர்த்த பன்னீர் ரசமும்
வேணுவோர்க்கெல்லாம் வேப்பம்பூ ரசமும்
குடிக்க மிக ருசிக்கும் கொட்டு ரசமும்
சூர்ய உதயம்போல் சீரும் அப்பளம்
சுக்ல உதயம் போல் ஜெவ்வரிசி கருவடாம்
அக்கார வடிசல் சக்கரைப் பொங்கல்
என்னென்ன சுண்டல் வகையான வடை
சுமசாலா வடை வெங்காய வடை
சொஜ்ஜி வடையுடன் நல்லெண்ணை வடை
தயிர் வடையும் பால் போளிகளும்
அனாரசம் அதிரசம் பதிர் பேணியுடன்
சேமியா ஹல்வா ஜிலேபி லட்டு
முத்து முத்தாய் இருக்கும் முந்திரி லாடு
ரம்மியமாய் இருக்கும் ரவா லாடு
பேஷா இருக்கும் பேசரி லாடு
குண்டுகுண்டாய் இருக்கும் குஞ்சா லாடு
பளபளவெனருக்கும் பயத்தமா லாடு
மைசூர் பாகுடன் பர்ஃபியும் சேர்த்து
போஜனம் செய்ய வாருங்கள்

பொரிகனி வர்கங்கள் பச்சை நாடாம்பழம்
தேன்கதளி பழம் செவ்வாழை பழம்
நேந்திரம் பழத்துடன் மாம்பழ தினுசுகள்
பலாப் பழத்துடன் வாடை பரிமளிக்கும்
ஆடைதயிர் வெண்ணை தங்காமல் சேர்த்து
பகாளாபாத், பல தினுசான சித்திரான்னங்களும்
ரஞ்சிதமாகிய இஞ்சி ஊறுகாய்
வெடுக்கென கடிக்கும் மாவடு ஊறுகாய்
பாவக்காய் ஊறுகாய் வேப்பிலைக்கட்டி
கொத்தமல்லிச் சட்னி மிளகாய்ப் பொடியுடன்
மிளகாய் பச்சடி
பந்தியில் பரிமாறினார்
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
பார்த்துப் பரிமாறினார்…


Sunday 8 May 2011

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே – இந்த பாடலை ரசிக்காதவர்களே என்று சொல்லலாம். யாருக்குத்தான் தனது அம்மாவினை பிடிக்காது. வாலி எழுதிய பல பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. ரஜினிக்காக கே.ஜே.யேசுதாஸ் குரல் கொடுத்த பாடல், இளையராஜாவின் இசையில், அன்னையர் தினமான இன்று உங்களது ரசனைக்கு.

பாடலின் விவரங்கள் கீழே.

படம்: மன்னன்
பாடகர்: கே.ஜே.யேசுதாஸ்.
நடிகர்கள்: ரஜினி.
பாடல் வரிகள்: வாலி
இசை: இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1992

பாடலைக் கேட்க:


Get Your Own Hindi Songs Player at Music Plugin

பாடலைக் காண:



பாடல் வரிகள்:

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே

Monday 2 May 2011

அக்கம் பக்கம் பாரடா….


இயக்குனர் சிகரம் திரு கே. பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம் உன்னால் முடியும் தம்பி. அவரது படங்களில் வந்த பல பாடல்களில் நான் ரசித்த பாடல்கள் ஏராளம். அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்குவதாக அறிவிப்பு வந்திருக்கும் இந்த சமயத்தில் நான் ரசித்த பாடலாய் இந்த பாடலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. தொடரட்டும் அவரது புகழ்…

பாடலின் விவரங்கள் கீழே.

படம்: உன்னால் முடியும் தம்பி
பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
நடிகர்கள்: கமல் ஹாசன், சீதா.
பாடல் வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1988

பாடலைக் கேட்க:


Akkam Pakkam Paarada | Musicians Available

பாடலைக் காண:



பாடல் வரிகள்:

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

அம்மா பசி என்றொரு கூக்குரல்
அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப் பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி ஹே..
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா

தேசமிது செஞ்சது உனக்கு
ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு
ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே
நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது ஹே..
நமக்கென்ன போடா போன்னு நழுவுற
நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா