Saturday 20 August 2011

கண்ணன் ஒரு கைக்குழந்தை

ரசித்த பாடல் வலைப்பூவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடலோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1976 ஆம் வருடம் வெளிவந்த பத்ரகாளி. இளையராஜா அவர்களின் இசையில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா அவர்களால் பாடப்பெற்ற இந்த நல்ல பாடலை எழுதியவர் வாலி. படத்தில் நடித்தவர்கள் சிவக்குமார் மற்றும் ராணி சந்திரா.

பாடலைக் கேட்க:


Kannan Oru Kaikkuzhandhai | Online Karaoke

பாடல் வரிகள்:

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ……
மைவிழியே தாலேலோ……
மாதவனே தாலேலோ…….

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை…..

உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது

காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக் கூடுமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா

கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ……
மைவிழியே தாலேலோ……
மாதவனே தாலேலோ…….
ஆராரிரோ……..ஆராரிரோ…….. ஆராரிரோ………. ஆராரிரோ……. ஆராரிரோ