Saturday 24 December 2011

வந்த நாள் முதல்………


நல்ல பல தத்துவங்கள் நிறைந்த இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து, கேட்டு ரசியுங்களேன்.....


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


திரைப்படம்: பாவ மன்னிப்பு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1961




ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான்மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் 
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ



Tuesday 20 December 2011

தென்றல் வந்து என்னைத்தொடும்……….



இந்த பாடலில் இளையராஜா அவர்களின் இசை நம்மை மயக்கும். நீங்களும் இதை கேட்டு பார்த்து ரசியுங்களேன்.

மீண்டும் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

திரைப்படம்: தென்றலே என்னைத் தொடு  
பாடகர்கள்: ஜேசுதாஸ், எஸ். ஜானகி.
இசை: இளையராஜா
பாடல் வரிகள் - வாலி 





தென்றல் வந்து என்னைத்தொடும் 
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு
இரவே பாய் கொடு  
நிலவே...  பன்னீரைத் தூவி ஓய்வெடு  

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

தூறல் போடும் இந்நேரம் தோளில் சாய்ந்தால் போதும்  
சாரல் பாடும் சங்கீதம் கால்கள் தாளம்... போடும்  
தெரிந்த பிறகு, திரைகள் எதற்கு
நனைந்த பிறகு நாணம் எதற்கு  
மார்பில் சாயும் போது 

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு
இரவே பாய் கொடு  
நிலவே...  பன்னீரைத் தூவி ஓய்வெடு  

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  

தேகம் எங்கும் மின்சாரம் பாய்ந்ததேனோ அன்பே  
மோகம் வந்து என் மார்பில் வீழ்ந்ததேனோ கண்ணே  
மலர்ந்த கொடியோ... மயங்கி கிடக்கும்  
இதழின் ரசங்கள்.... எனக்குப் பிடிக்கும்....  
சாரம் ஊரும் நேரம்  


தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்  
பகலே போய் விடு
இரவே பாய் கொடு  
நிலவே...  பன்னீரைத் தூவி ஓய்வெடு....

தென்றல் வந்து என்னைத் தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்.... 


Tuesday 6 December 2011

ஓ பொன் மாங்குயில்………




எஸ்.பி.பியின் இனிமையான குரலில் ஒரு அருமையான பாடல். இதை கேட்கும் போதே ஒரு உற்சாகம் வரும். நீங்களும் இதை பார்த்து கேட்டு ரசியுங்களேன்....

அடுத்த பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம்:                      மனசுக்குள் மத்தாப்பு
பாடகர்:                    எஸ்.பி.பி
நடிகர்கள்:                 பிரபு, சரண்யா
இசை:                     எஸ்.ஏ ராஜ்குமார்
படம் வெளிவந்த வருடம்: 1986



ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்

வானைத் தொட்ட மேகமெங்கே
பூவைத் தொட்ட தாகம் என்ன
தேனைத் தொட்ட வண்டு எங்கே
காற்றில் விட்ட சேதி என்ன
தங்கமலை சாரல் எந்தன் ஊரோ
இங்கு என்னைக் கைது செய்வார் யாரோ
அன்பாய் ஒரு தெய்வம் வந்து தாலாட்டுதே
நெஞ்சில் நூறு சந்தம் வந்து நீரூற்றுதே
கண்ணில் ஒரு மின்னல் கண்டேன்
என்னை இன்று கண்டு கொண்டேன்.

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்

நானிருந்த கூண்டுக்குள்ளே ராகம் சொல்ல யாருமில்ல
ஞாபகத்தை விட்டு விட்டேன் கீதம் எங்கே காணவில்ல
ஊமை என்னை பேச வைத்தார் யாரோ
உள்ளத்துக்குள் உள்ளம் வைத்தார் யாரோ
சொந்தம் என்று தென்றல் என்னை தாலாட்டுதே
துள்ளும் நதி என்னைத் தொட்டுப் பாராட்டுதே
பச்சை நிற பாய் விரித்து
கச்சேரி தான் சோலைக்குள்ளே

ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே சங்கீதக்காரன் எந்தன்
காதல் பாதையில்
உல்லாச பூங்குயில்கள் ராஜ பார்வையில்.....
ஓஓஓஓஓ……… ஓ பொன்மாங்குயில் சிங்காரமாய்
பொன்மாங்குயில் சிங்காரமாய்
பண்பாடுதே


 

Saturday 3 December 2011

மனிதன் என்பவன்........


ஸ்ரீனிவாஸ் அவர்களின் இனிமையான குரலுக்காகவும், அருமையான கருத்துள்ள பாடல் வரிகளுக்காகவும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இதை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்……


படம் – சுமைதாங்கி
பாடியவர் – P.B.ஸ்ரீனிவாஸ்
நடித்தவர்கள் – ஜெமினி கணேசன், தேவிகா
படம் வெளி வந்த வருடம் – 1962
இசை – விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடல் வரிகள் - கண்ணதாசன்



மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்

ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
ஊருக்கு என்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள் ஆகலாம்
உறவுக்கென்று விரிந்த உள்ளம் மலர்கள் ஆகலாம்
யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்
மனம் மனம் அது கோவிலாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
மனமிருந்தால் பறவைக்கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்
துணிந்து விட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம் குணம் அது கோவிலாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம்
வாழை போல தன்னைத் தந்து தியாகி ஆகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் தெய்வமாகலாம்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்.

Monday 21 November 2011

தொடு தொடுவெனவே....

படம் – துள்ளாத மனமும் துள்ளும்
பாடல் வரிகள் – வைரமுத்து
இசையமைத்தவர் – எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்கள் – ஹரிஹரன், சித்ரா
வெளிவந்த வருடம் - 1999.

இந்த பாடலின் வரிகளுக்காகவும், ஹரிஹரனின் குரலுக்காகவும் நான் ரசித்த பாடல் இது.....  நீங்களும் ரசியுங்களேன்....

பாடலைப் பார்க்க:



பாடல் வரிகள்:

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்….

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசி தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகி போய் விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஹேய் ராஜா! இது மெய் தானா
ஹே பெண்ணே! தினம் நீ செல்லும் பாதையில்
முள் இருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை.

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்…

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சல் அடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லிராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றால்
ஹே ராணி! அந்த இந்திர லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம் உன் அன்பு அது போதும்

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்கனம் காப்பாய்

கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா…..