Saturday 28 January 2012

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு




இளையராஜாவின் அற்புதமான இசையில் அழகான பாடல். தீபன் சக்கரவர்த்தி மற்றும் உமா ரமணனின் குரலில் இனிமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த பாடல். நீங்களும் கேட்டு பார்த்து ரசியுங்களேன்….

வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,


ஆதி வெங்கட்.
பின் குறிப்பு:  ரசித்த பாடல் வலைப்பூவினை தொடர்பவர்கள் எண்ணிக்கை தற்போது 50.  தொடர்பவர்கள் அனைவருக்கும் நன்றி.  

படம் – மெல்லப் பேசுங்கள்
பாடியவர்கள் – தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன்
இசை – இளையராஜா
படம் வெளிவந்த வருடம் – 1983


கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்
வானவில்லில் அமைப்போம் தோரணம்
வண்டு வந்து இசைக்கும் நாயனம்

தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து

காதல் மணம் காண்போம்
எண்ணம்போல் இன்பத்தின்
வண்ணங்கள்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்

அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
அந்தி வந்து மலரும் தாமரை
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி
நாளை வரும் காலம் என்றென்றும் எங்களின் கைகளில்

செவ்வந்தி பூக்களில் செய்த வீடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு

ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ
ஆரிராரோ ஆராரிராரிராரோ

Tuesday 24 January 2012

வா பொன்மயிலே…….

1979 ஆம் ஆண்டில் இளையராஜா அவர்களின் இசையில், எஸ்.பி.பியின் குரலில் மற்றுமொரு அருமையான பாடல். நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்கள்.

வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,
வெங்கட்.

படம் – பூந்தளிர்
இசை – இளையராஜா
பாடியவர் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடித்தவர்கள் – சிவக்குமார், சுஜாதா
படம் வெளிவந்த வருடம் – 1979
பாடல் வரிகள் – பஞ்சு அருணாசலம்

வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
கண்மணி…..
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க
வருவாய் சுவை பெருகப் பெருக
இளமையின் நளினமே
இனிமையின் உறவும் மலர

வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
கண்மணி…
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

மேனியின் மஞ்சள் நிறம்
வானளந்ததோ
பூமியின் நீல நிறம்
கண்ணளந்ததோ
அழகே சுகம் வளர வளர
நினைவே தினம் பழகப் பழக
உரிமையில் அழைக்கிறேன்
உயிரிலே கலந்து மகிழ

வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை
நானின்றி நீயில்லை.
கண்மணி….
வா பொன்மயிலே
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது




Saturday 21 January 2012

பருவமே புதிய பாடல் பாடு….



இளைராஜாவின் இனிமையான இசையும் எஸ்.பி.பி அவர்களின் மயக்கும் குரலும், ஜானகி அவர்களின் தேனான குரலும் பாட்டுக்கு பலம் சேர்ப்பவை. காலை நேர வேளையில் இருவர் ஓடும் சத்தத்தை உண்டு பண்ணுவதற்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து கடைசியில் தொடையில் கையால் தட்டி தட்டியே கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்களும் இந்த அருமையான பாடலை பார்த்து, கேட்டு ரசியுங்களேன்……..

வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் – நெஞ்சத்தை கிள்ளாதே
பாடியவர்கள் – எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
நடித்தவர்கள் – மோகன், சுஹாசினி
இசை – இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1980


பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோய்…. காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோய்…. காதல் கண்ணம்மா
சிரிக்கிறாய் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே புதிய பாடல் பாடு

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அழைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்

பருவமே புதிய பாடல் பாடு
இளமையின் பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு



Wednesday 18 January 2012

நான் தேடும் செவ்வந்திப் பூவிது......


இளையராஜாவின் நிகழ்ச்சியில் அவர் பாடிய இந்த பாடலை நெடுநாட்களுக்குப் பிறகு கேட்டதிலிருந்து மனதில் பாடல் ஓடிக் கொண்டேயிருந்தது. பள்ளி கல்லூரி நாட்களில் ரேடியோவில் பலமுறை கேட்டு சுவைத்த பாடல். இந்த அருமையான இசையும், இளையராஜா அவர்களின் குரலும் ஈடு இணையில்லாதது. இளையராஜாவின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இந்த பாடல் இடம் பெற்றிற்கும். நீங்களும் கேட்டும், பார்த்தும் ரசியுங்களேன்….

மீண்டும் வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.


படம் – தர்மபத்தினி
இசையமைத்தவர் – இளையராஜா
பாடியவர்கள் – இளையராஜா, ஜானகி
படம் வெளிவந்த வருடம் – 1986
நடித்தவர்கள் – கார்த்திக், ஜீவிதா


நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது  தடுக்கிறதே
பொன்மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி ஆ….ஆ…ஆ…  ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்,
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ?
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ?
என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம் தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா ஆ….ஆ….ஆ….  ஆ…ஆ….ஆ.. ஆ…ஆ….ஆ.
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது…..