Tuesday 28 February 2012

ஒருத்தி ஒருவனை நினைத்து…..


இந்த பாடல் ஒரு இனிமையான பாடல். பாடல் வரிகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நான் ரசித்த பாடலை நீங்களும் பார்த்தும், கேட்டும் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் – சாரதா
இசை – கே.வி.மஹாதேவன்
பாடியவர்கள் – P.சுசீலா, P.B ஸ்ரீனிவாஸ்
பாடல் வரிகள் – கவிஞர் கண்ணதாசன்
படம் வெளிவந்த வருடம் – 1962


ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்

அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? - குடும்பம்

நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? - துயரம்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? - மெளனம்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம்அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம்அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்

மறைக்க முயன்றேன் முடியவில்லைஉன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

மறைக்க முயன்றேன் முடியவில்லைஉன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

நினைக்கும் நிலையிலும் நான் இல்லைஉன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை

வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை

கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி

கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி

சொன்னேன் பல முறை யாசிக்கிறாய்நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்….

Saturday 25 February 2012

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு……….




இளையராஜா அவர்களின் இனிமையான இசையிலும், புலமைப்பித்தன் அவர்களின் உற்சாகமூட்டும் பாடல் வரிகளாலும், எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் அபாரமான குரலாலும் இந்த பாடல் இனிமையானதாக அமைந்திருக்கிறது. நீங்களும் கேட்டு, பார்த்து ரசியுங்களேன்…..

மீண்டும் வேறு ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,


ஆதி வெங்கட்.

படம்  - உன்னால் முடியும் தம்பி
இசை  - இளையராஜா
பாடல்வரிகள்  - புலமைப்பித்தன்
பாடியவர் - S.P.பாலசுப்ரமணியம்
நடித்தவர்கள் – கமல்ஹாசன்
படம் வெளிவந்த வருடம் – 1988


புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை
வீதிக்கொரு கட்சி உண்டு 
சாதிக்கொரு சங்கம் உண்டு
நீதி சொல்ல மட்டும் இங்கே நாதி இல்லை
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை
இது நாடா இல் வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
இது நாடா இல்ல வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது?
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ
வீடின்றி வாசலின்றித் தவிக்குது
எத்தனை காலம் இப்படிப் போகும்?
என்றொரு கேள்வி நாளை வரும்
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம் 
என்றிங்கு மாறும் வேளை வரும்
ஆயிரம் கைகள் கூடட்டும், ஆனந்த ராகம் பாடட்டும்
நாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு!
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு!

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை

ஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது?
தானாகப் பாதை கண்டு நடக்குது
காற்றுக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது?
தானாகப் பாட்டு ஒன்னு படிக்குது
எண்ணிய யாவும் கைகளில் சேரும்
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே!
காலையில் தோன்றும் சூரியன் போலே 
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே!
சேரியில் தென்றல் வீசாதா? ஏழையை வந்து தீண்டாதா?
கங்கையும் தெற்கே பாயாதா? காவிரியோடு சேராதா?
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா?

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு
பொங்கி வரும் கங்கை உண்டு
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லை
எங்க பாரதத்தில் சோத்துச்சண்டை தீரவில்லை
இது நாடா இல் வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!
இது நாடா இல்ல வெறும் காடா?
இதைக் கேட்க யாரும் இல்லை தோழா!