Wednesday 31 October 2012

வனக்குயிலே குயில் தரும்……..



பிரியங்கா படத்தில் வரும் இந்த அழகான பாடல் எஸ்.பி.பி அவர்களின் குரலிலும், இளையராஜா அவர்களின் இசையாலும்  மேலும் மெருகேறுகிறது. நான் ரசித்த, அவ்வப்போது முணுமுணுக்கும் இந்தப் பாடலை நீங்களும் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் - பிரியங்கா
பாடியவர்கள்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை – இளையராஜா
நடித்தவர்கள் – ரேவதி, ஜெயராம்


 


வனக்குயிலே குயில் தரும் கவியே

கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோயல்லோ ஹோய ஹோய ஹோயல்லோ
ஹோய ஹோய ஹோய ஹோயே
 
ஹோய ஹோய ஹோய ஹோயே
 

உன் ஞாபகம் நெஞ்சில் வந்தாடுதே
ஓயாமலே என்னைப் பந்தாடுதே
உன் பூமுகம் கண்ணில் நின்றாடுதே
நான் கொஞ்சவே என்னை மன்றாடுதே
படித்தால் இனித்திடும் புதினம்
உனை நான் மறப்பது கடினம்
அலையாய் தொடர்ந்திடும் நினைப்பு
வலைக்குள் தவித்திடும் தவிப்பு
துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

ஆஹா ஒஹோ ஓஹோஹோ
ஓ ஓஹோஹோ ஓஹோஹோ
ஆஹா ஆஹா...

செவ்வாழைகள் பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம் ஆனதே
பூமாலையாய் தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக் கோலங்களே
மணநாள் நினைவுகள் மலரும்
மனதில் மலையென வளரும்
வருவேன் தருவேன் கிளியே
விழிக்குள் இருக்கும் விழியே
இணைந்தால் இருவர் இணைந்தால்
இன்ப வரவும் உறவும் சுகமே

வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
கொடி மலரே மலர் விடும் இதழே
இதழ் தரும் மதுவே..ஏ..ஏ..
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே
மலரிலும் மலையிலும் நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய் தெரிவதென்ன
வனக்குயிலே குயில் தரும் கவியே
கவி தரும் இசையே..யே..யே..யே

Thursday 11 October 2012

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட……..


நான் ரசித்த பாடல்களில் இளையராஜா அவர்களின் இசையில் மனதுக்கு இதமான இந்த பாடல், உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் – உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
பாடியவர்கள் – எஸ்.பி.பி, ஸ்வர்ணலதா
இசையமைத்தவர் – இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1992


என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி…. நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி… நிதமும்

என்னைத் தொட்டு, நெஞ்சைத் தொட்டு
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி
உன்னில் நானடி
என்னில் நீயடி
உன்னில் நானடி
ஓ…. பைங்கிளி…..நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி…. நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி