Monday 23 December 2013

முதன் முதலாக காதல் டூயட் ....

நிறம் மாறாத பூக்கள் படத்திலிருந்து இந்த பாடலை சமீபத்தில் கேட்டேன். உற்சாகம் தரும் பாடலாக இருக்கிறது.. எனக்கு பிடித்த இந்தப் பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்..

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.
படம் - நிறம் மாறாத பூக்கள்
பாடியவர்கள் - எஸ்.பி.பி, எஸ்.ஜானகி
இசை - இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1979

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா
சீதா என் காதல் கொடியே கண் பாரம்மா
ஆதாரம் நீயில்லாமல் வேறேதம்மா

ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
 உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு

முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ
நீ காதல் மன்மதனோ நான் பறந்து போவேனோ
முதன் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே

ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..
ஜீனத் என் கனவில் வந்தாள் உன் போலவே
சிங்காரப் பாவை உந்தன் வடிவாகவே..

ஜீனத்தமன் போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ... சும்மா தான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.

முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தாயோ.


Saturday 7 December 2013

கண்ணா... என்ன குறையோ!



சற்றே இடைவேளைக்குப் பிறகு நமது ரசித்த பாடலில் ஒரு பகிர்வு. இரண்டு மூன்று நாட்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த பாடல்.... சுதா ரகுநாதன் அவர்களின் குரலில் மெல்லிய இசையாக, மனதிற்கு இதம் தரும் பாடல்....எனக்கு பிடித்த இந்தப் பாடல் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்... கேட்டு ரசியுங்களேன்....

மீண்டும் வேறு ஒரு பாடல் பகிர்வில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

திரைப்படம் : மந்திரப்புன்னகை
இசை : வித்யாசாகர்
பாடல் வரிகள் : அறிவுமதி
பாடியவர் : சுதா ரகுநாதன்

படம் வெளிவந்த வருடம் - 2010




கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில் 
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் விழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை 
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்


உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான் 

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......




Saturday 26 October 2013

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே......

திருவரங்கத்தில் நல்ல மழை இப்போது.... மழையில் நனைந்து விட்டு வந்ததும் நம்ம ராஜா சாரோட இந்தப் பாடல் என்னை முணுமுணுக்க வைத்தது....:) நான் ரசித்த இந்த அருமையான பாடலை, நீங்களும் பார்த்து, கேட்டு ரசியுங்களேன்...

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

படம்: அகல் விளக்கு
இசை: இளையராஜா

பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், ஷைலஜா
பாடல் வரிகள் - கங்கை அமரன்
படம் வெளிவந்த வருடம் - 1967



ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..

மார்பினில் நானும் மாறாமல் சேரும்
காலம் தான் வேண்டும்.. ம்ம்ம்..
வான்வெளி எங்கும் என் காதல் கீதம்
பாடும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
தேவைகள் எல்லாம் தீராத நேரம்
தேவன் நீ வேண்டும்.. ம்ம்ம்..
சேரும் நாள் வேண்டும்.. ம்ம்ம்..
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே

நாடிய சொந்தம் நாம் காணும் பந்தம்
இன்பம் பேரின்பம்.. ம்ம்ம்..
நாளொரு வண்ணம் நாம் காணும் எண்ணம்
ஆஹா ஆனந்தம்.. ம்ம்ம்..
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம்
ஏங்கும் என்னாளும்.. ம்ம்ம்...
ஏக்கம் உள்ளாடும்.. ம்ம்ம்...

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே
தினம் காண்பது தான் ஏனோ..
ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே




Tuesday 10 September 2013

இளைய நிலா பொழிகிறதே



ரசித்த பாடலில் நீண்ட நாட்களாக பதிவிட எண்ணி நினைத்து வெளியிடாமல் இருந்த பாடல் இதோ…. இசைஞானி இளையராஜாவின் இசையிலும் எஸ்.பி.பீயின் குரலிலும் வைரமுத்து அவர்களின் வரிகளிலும் அற்புதமான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். கல்லூரி நாட்களில் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்ட விதத்தை பற்றி என் ஆரம்ப கால பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். இதோ அதன் சுட்டி இளைய நிலா பொழிகிறது

இந்தப் பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

படம்பயணங்கள் முடிவதில்லை
பாடியவர்எஸ்.பி.பீ
இசைஇளையராஜா
பாடல் வரிகள்வைரமுத்து
படம் வெளிவந்த வருடம் – 1982
நடித்தவர்கள் - மோகன், பூர்ணிமா பாக்யராஜ்





இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே

வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும்வரை நடைபழகும்
வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும்வரை நடைபழகும்
வானவீதியில் மேக ஊர்வலம் காணும்போதிலே ஆறுதல் தரும் 
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே 
இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் 
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்


இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே 
இளைய நிலா பொழிகிறதே ….



Tuesday 6 August 2013

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்…..


ரசித்த பாடல் வலைப்பூவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களோடு நான்...

”அழகே உன்னை ஆராதிக்கிறேன்” படத்தில் வாணி ஜெயராம் அவர்களால் பாடப்பெற்ற இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாத வாலி அவர்களின் வரிகளிலும், இளையராஜா அவர்களின் இசையிலும் தங்களின் பார்வைக்கு. நான் ரசித்த இந்த பாடலை நீங்களும் ரசியுங்கள்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம். 


படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்
பாடல் வரிகள்: கவிஞர் வாலி
படம் வெளிவந்த வருடம் - 1979



என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்


Monday 28 January 2013

மௌனமே பார்வையால் ஒரு பாட்டு






பாடல்: மௌனமே பார்வையால்
திரைப்படம்: கொடிமலர்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1966
நடிகர்கள்: முத்துராமன், விஜயகுமாரி, நாகேஷ்.

ரசித்த பாடல் வலைப்பூவில் பாடல்கள் பகிர்ந்து நீண்ட நாட்கள் ஆகின்றன. சக வலைப்பதிவர் ஸ்ரவாணி "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்" பாடல் பகிர்வில் "மௌனமே பார்வையால் ஒரு பாட்டு" வேண்டும் சார். போடுவீர்களா?என்று கேட்டிருந்தார்.  அதனால் இதோ நேயர் விருப்பமாக, கொடி மலர் திரைப்படத்திலிருந்து பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் உங்கள் ரசனைக்கு!






மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்

அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்....
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்....

அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்ம்ம்....

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்

முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
 மொழிகள் பாடம் பெற வர வேண்டும் ம்ம்ம்ம்..

மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..


மீண்டும் வேறொரு பாடலுடன் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.