Monday 18 June 2012

தனிமையிலே இனிமை காண...




ரசித்த பாடல் வலைப்பூவில் ஐம்பதாவது பாடலாக ”தமிழுக்கும் அமுதென்று பேர்” பதிவிட்ட பிறகு நீண்ட இடைவெளி. “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று பாடலாகவே போடலாமா என யோசித்தேன்… இருந்தாலும், “தனிமையிலே இனிமை காண முடியுமா?” என்ற இந்த பாடலுடன் மீண்டும் உங்களனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாடல் ”தனிமையிலேயே..” எனத் தொடங்கினாலும் நான் உங்களோடு சேர்ந்துதான் கேட்கப்போகிறேன்….

அடுத்த ரசித்த பாடலுடன் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பாடல் இடம்பெற்ற திரைப்படம்: ஆடிப் பெருக்கு.
பாடியவர்கள்: ஏ.ஏம். ராஜா, பி. சுசீலா.
பாடலுக்கு இசை: ஏ.ஏம். ராஜா
பாடல் வரிகள்: கே.டீ. சந்தானம்.
படம் வெளி வந்த வருடம்: 1962.




தனிமையிலே….  தனிமையிலே…
இனிமை காண முடியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே….  தனிமையிலே…
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
அதைச் சொல்லிச் சொல்லித் திரிவதனால் துணை வருமா?
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
அதைச் சொல்லிச் சொல்லித் திரிவதனால் துணை வருமா?

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா?
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா?
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா?

தனிமையிலே…
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே…. 
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே…. 
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?