Sunday, 27 February 2011

தேன் சிந்துதே வானம்...

பொண்ணுக்குத் தங்க மனசு படத்தில் ஜி.கே.வெங்கடேஷ் இசையில் எஸ்.பி.பி., எஸ். ஜானகி அவர்களால் பாடப்பெற்ற பாடல். பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாடல் வரிகளும், இசையும் நன்றாக இருக்கும் என்பதால் எனக்கு இந்த பாடல் பிடிக்கும். கமல்ஹாசன், சிவகுமார், ஜெயசித்ரா நடிப்பில், 1973-ஆம் வருடம் வெளிவந்த படம் பொண்ணுக்குத் தங்க மனசு. நான் ரசித்த இந்த பாடல் இதோ உங்களுக்காய்!


தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே.....
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க

பன்னீரில் ஆடும் செவ்வாழை கால்கள்
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
பனிமேடை போடும் பால் வண்ண மேனி
கொண்டாடுதே சுகம் சுகம்...பருவங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே......
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க

வைதேகி முன்னே ரகு வம்ச ராமன்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
விளையாட வந்தான் வேறென்ன வேண்டும்
சொர்க்கங்களே வரும் தரும்...சொந்தங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே......
கண்ணோடு கண்கள் கவி பாட வேண்டும்
கையோடு கைகள் உறவாட வேண்டும்
கன்னங்களே இதம் பதம்...காலங்கள் வாழ்க

தேன் சிந்துதே வானம்... உனை... எனை..... தாலாட்டுதே
மேகங்களே தரும் ராகங்களே...... எந்நாளும் வாழ்க


Sunday, 20 February 2011

ஆத்தங்கர மரமே….


கிழக்குச் சீமையிலே…. இந்த படம் 1993-ஆம் வருடம் வெளிவந்தது. ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசையில் அமைந்த இந்தப் படத்தினை நான் பிறந்த ஊரான சிவகங்கைக்கு விடுமுறையில் சென்றபோது, அங்கே உள்ள ரவிபாலா திரையரங்கில் என் உறவினர்களுடன் பார்த்தேன். அண்ணன் தங்கை பாசத்தை அருமையாக வெளிப்படுத்தும் இந்த படத்தில் இருக்கும் இந்த பாடலும், அதன் வரிகளும் சிறு வயதிலேயே என் மனதில் பதிந்தவை. இந்த பாடலுக்குக் குரல் கொடுத்தவர்கள் – மனோ மற்றும் சுஜாதா! ரசித்த பாடலாய் இதோ உங்களுக்காக!

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்…

ஆதி.


Aathangara Marame.... | Online Karaoke

அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்ப
மூன்றாம் பிறையது முழுநிலவு ஆனதெப்போ
மௌனத்தில் நீயிருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடக்கரை ஒடவுக் காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சு நீக்குற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா…..
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே

மாமனே உன்னத் தாங்காம வட்டியில் சோறு உங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகங்தான் கத்திப் போனாலும்
கதவு தான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பார்க்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே

தாவணிப் பொண்ணே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்ட பூ என்ன சொகந்தானா
தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
அயித்தையும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அயித்தையும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னயும் என்னையும் தூக்கி
வளர்த்த திண்ணையும் சொகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலுப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடக்கரை ஒடவுக் காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சு நீக்குற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா…..
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே….Monday, 14 February 2011

வளையோசை கலகல கலவென…

1988-ஆம் வருடம் வெளியிடப்பட்ட சத்யா படத்திலிருந்து அடுத்த ரசித்த பாடல். சுரேஷ் கிருஷ்ணா அவர்களின் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா நடித்த திரைப்படம். படத்திற்கு இசை None Other Than இளையராஜா. பாடலின் ஒலி வடிவமும், ஒளி வடிவமும் கீழே உங்களுக்காய்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்.

வெங்கட்.Get Your Own Hindi Songs Player at Music Plugin


வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக் கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண்பட்ட காயம்
கை வைக்க தானாக ஆரும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்..

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது

உன்னைக் காணாதுருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான் தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளந்தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கலகல கலவென கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலு சிலு என சிறகுகள் பட படத்
துடிக்குது எங்கும் தேகம் கூசுது
Thursday, 10 February 2011

மாசிலா உண்மை காதலே


மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில், டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் 1956-ல் வெளிவந்த படம் அலிபாபாவும் 40 திருடர்களும். எம்.ஜி.ஆர்., பானுமதி, பி.எஸ். வீரப்பா ஆகியோர் நடித்து வெளிவந்த இந்த படத்தில் நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்றான ”மாசிலா உண்மைக்காதலே”. எம்.ஜி.ஆர்., பானுமதி இருவரும் போட்டு இருக்கும் தொளதொளவென்று இருக்கும் உடைகள் – ”வாவ்” சொல்ல வைக்கும் :) KETHIRAPALU என்கிற நபரால் இந்த ரசித்த பாடலின் காணொளி  YOUTUBE-இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எனது வணக்கங்கள். இந்த பாடலைப் பாடியவர்கள் ஏ.எம்.ராஜா மற்றும் பானுமதி. இசையமைப்பாளர் – எஸ். தக்ஷிணாமூர்த்தி. நான் ரசித்த பாடல் இதோ உங்கள் ரசனைக்கு…..ஏ.எம். ராஜா:

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பானுமதி:

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா
பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

ஏ.எம். ராஜா:

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

பானுமதி:

நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

ஏ.எம். ராஜா:

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே

பானுமதி:

நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே

பேசும் வார்த்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா

மாசிலா உண்மை காதலே
மாறுமா செல்வம் வந்த போதிலே

ஏ.எம். ராஜா:

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பானுமதி:

இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஏ.எம். ராஜா:

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே

பானுமதி:

இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

ஏ.எம். ராஜா, பானுமதி:

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லை காணுவோம்

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே… மாறுமோ….Saturday, 5 February 2011

மண்ணில் வந்த நிலவே…


மண்ணில் வந்த நிலவே என்ற இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் - நிலவே மலரே. ரகுமான், நதியா, ராஜேஷ் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை அமைத்தது திரு எம்.எஸ். விஸ்வநாதன். பாடலுக்குக் குரல் கொடுத்தவர் பி. சுசீலா. நான் சிறு வயதில் ரேடியோவில் நிறைய முறை கேட்ட, ரசித்த பாடல் இது. நீங்களும் ரசிப்பதற்காய் உங்களுடன் அதன் காணொளியைப் பகிர்கிறேன். பாடலை YOUTUBE-ல் பதிவேற்றம் செய்திருக்கும் SAVISA09 அவர்களுக்கு மிக்க நன்றி.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்.


ஆதி.மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா

நிலவே… மலரே….
நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர்த் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர்த் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு

நிலவே… மலரே….
நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே

புன்னை இலை போலும்
சின்ன மணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது

புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது

மயில்களின் இறகினில்
அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணிக் குயில் படித்திடும்
கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ

நிலவே… மலரே….
நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா


நிலவே…. மலரே….

Thursday, 3 February 2011

ஏரிக்கரையின் மேலே…

1957-ஆம் வருடம் வெளி வந்த படம் முதலாளி.  இந்தப் படத்தில் நடித்தவர்கள் எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் தேவிகா.  முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் வெளி வந்த இந்தப் படத்தின் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன்.  நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன் வந்த இந்த படத்தின் பாடலை நான் ரசிப்பதற்குக் காரணம் உண்டு.  என் சிறு வயதில் என் அம்மாவின் அத்தை இந்த பாடலை மட்டும் முணுமுணுத்துக்கொண்டே இருப்பார்.  அதனால் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த, நினைவில் நின்ற பாடல். நீங்களும் ரசிக்க CRAMSINGAPORE என்ற நபர் YOUTUBE-இல் பதிவேற்றம் செய்து வைத்து இருக்கும் காணொளி கீழே.  CRAMSINGAPORE அவர்களுக்கு எனது நன்றி.


ஏரிக்கரையின் மேலே… ஆ….
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
என்னருமைக் காதலியே என்னைக் கொஞ்சம் பாரு நீயே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே…

தென்னை மரச் சோலையிலே
சிட்டு போல போற பெண்ணே…. ஏ….. ஏ…. ஏ….. ஏ….
தென்னை மரச் சோலையிலே சிட்டு போல போற பெண்ணே
சிட்டு போல போற பெண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே
நில்லு கொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசி போவோம் கண்ணே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே…

மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே..
     மச்சான் வரும் வேளையிலே
மாமரத் தோப்பினிலே மச்சான் வரும் வேளையிலே..
கோபம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண் மயிலே
கோபம் கொண்ட மானைப் போலே ஓடலாமோ பெண் மயிலே

அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
அன்னம் போல நடை நடந்து சென்றிடும் மயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே
ஆசை தீர நில்லு கொஞ்சம் பேசுவோம் குயிலே…..