Sunday, 20 February 2011

ஆத்தங்கர மரமே….


கிழக்குச் சீமையிலே…. இந்த படம் 1993-ஆம் வருடம் வெளிவந்தது. ஏ.ஆர். ரகுமான் அவர்களின் இசையில் அமைந்த இந்தப் படத்தினை நான் பிறந்த ஊரான சிவகங்கைக்கு விடுமுறையில் சென்றபோது, அங்கே உள்ள ரவிபாலா திரையரங்கில் என் உறவினர்களுடன் பார்த்தேன். அண்ணன் தங்கை பாசத்தை அருமையாக வெளிப்படுத்தும் இந்த படத்தில் இருக்கும் இந்த பாடலும், அதன் வரிகளும் சிறு வயதிலேயே என் மனதில் பதிந்தவை. இந்த பாடலுக்குக் குரல் கொடுத்தவர்கள் – மனோ மற்றும் சுஜாதா! ரசித்த பாடலாய் இதோ உங்களுக்காக!

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்…

ஆதி.


Aathangara Marame.... | Online Karaoke

அத்தைக்குப் பிறந்தவளே ஆளாகி நின்றவளே
பருவம் சுமந்து வரும் பாவாடைத் தாமரையே
தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்ப
மூன்றாம் பிறையது முழுநிலவு ஆனதெப்போ
மௌனத்தில் நீயிருந்தால் யாரைத்தான் கேட்பதிப்போ

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடக்கரை ஒடவுக் காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சு நீக்குற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா…..
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே

மாமனே உன்னத் தாங்காம வட்டியில் சோறு உங்காம
பாவி நான் பருத்தி நாராப் போனேனே
காகங்தான் கத்திப் போனாலும்
கதவு தான் சத்தம் போட்டாலும்
உன் முகம் பார்க்க ஓடி வந்தேனே
ஒத்தையில் ஓடக்கரையோரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஓடும் ரயிலோரம் கத்தியே
உன் பேர் சொன்னேனே
அந்த ரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும்
கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்ன விட்டுப் போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே

தாவணிப் பொண்ணே சொகந்தானா
தங்கமே தழும்பும் சொகந்தானா
பாறையில் சின்னப் பாதம் சொகந்தானா
தொட்ட பூ என்ன சொகந்தானா
தொடாத பூவும் சொகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சொகந்தானா
அயித்தையும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அயித்தையும் மாமனும் சொகந்தானா
ஆத்துல மீனும் சொகந்தானா
அன்னமே உன்னயும் என்னையும் தூக்கி
வளர்த்த திண்ணையும் சொகந்தானா
மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு
உன் மச்சானுக்கு மயிலுப் பசுவு தோதாச்சு

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடக்கரை ஒடவுக் காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சு நீக்குற பருத்தி தாவி வந்து
சண்டையிடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா…..
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது

ஆத்தங்கர மரமே அரச மர இலையே
ஆலமரக் கிளையே அதில் உறங்கும் கிளியே….16 comments:

 1. முணுமுணுக்க வைக்கும் பாட்டு

  ReplyDelete
 2. உங்க பக்கம் வந்தா அருமையான பாடல்கள் கேக்ககலாம்.

  ReplyDelete
 3. அன்னமே ஒன்னயும் என்னயும் தூக்கி வளத்த திண்ணையும் சொகந்தானா அல்லது சின்னையஞ் சொகந்தானா?

  ReplyDelete
 4. காதுக்கு இனிமையான பாட்டு.
  பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 5. நல்ல பாடல். வைரமுத்துவின் வரிகள் அருமை. பாடியவர்களை பற்றி கூறும் தருணம் கூடுதல் தகவலாக எழுதியவரையும் பற்றியும் பதிவு செய்யுங்கள். பின்னர் தேடுவோர்க்கு உதவியாக இருக்கும்

  ReplyDelete
 6. எனக்கும் மிகப்பிடித்த பாடல் ஆதி..

  ReplyDelete
 7. அருமையான பாடல் ப்கிர்வுக்கு மகிழ்ச்சி.

  ReplyDelete
 8. கருத்துரையிட்ட சகோதரர் எல்.கே, லஷ்மிம்மா, hotsunaaa, வை.கோபாலகிருஷ்ணன் சார், உயிரோடை, முத்துலெட்சுமி, ஆசியா உமர் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

  @உயிரோடை – இனிமே பாடல் வரிகள் எழுதியவர்களை பற்றியும் தெரிவிக்கிறோம். தங்கள் தகவலுக்கு நன்றிகள்.

  @hotsunaaa - திண்ணையும் சொகந்தானா என்று தான் கேட்கிறது சகோ.

  ReplyDelete
 9. பொதுவாகவே எனக்கு மனோவின் குரல் மிக பிடிக்கும்.
  அவர் குரலின் வரிசையில் இந்த பாடலும் பிடித்த பாடலே
  பகிர்வுக்கு நன்றி ஆதி

  ReplyDelete
 10. இனிமையான பாடல்களுள் ஒன்று,நல்ல பகிர்வு,

  ReplyDelete
 11. மனோவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. உங்கள் ரசனை அழகானது வெ.நா!

  ReplyDelete
 12. இன்னும் இந்த பாடலைக் கேட்டால்... மனது ஒரு மாதிரியாகி விடும்.

  ReplyDelete
 13. உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
  அட ஓடத்தண்ணி உப்புத்தண்ணி ஆகாது//
  அர்த்தமுள்ள என்க்குப்பிடித்த வரிகள்.

  ReplyDelete
 14. கருத்துரையிட்ட thirumathi bs Sridhar, மோகன்ஜி சார், ”குறட்டை” புலி, இராஜராஜேஸ்வரி, Pranavam Ravikumar a.k.a. Kochuravi உங்கள் அனைவருக்கும் நன்றி.

  ReplyDelete