Saturday 5 February 2011

மண்ணில் வந்த நிலவே…


மண்ணில் வந்த நிலவே என்ற இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் - நிலவே மலரே. ரகுமான், நதியா, ராஜேஷ் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இசை அமைத்தது திரு எம்.எஸ். விஸ்வநாதன். பாடலுக்குக் குரல் கொடுத்தவர் பி. சுசீலா. நான் சிறு வயதில் ரேடியோவில் நிறைய முறை கேட்ட, ரசித்த பாடல் இது. நீங்களும் ரசிப்பதற்காய் உங்களுடன் அதன் காணொளியைப் பகிர்கிறேன். பாடலை YOUTUBE-ல் பதிவேற்றம் செய்திருக்கும் SAVISA09 அவர்களுக்கு மிக்க நன்றி.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கிறேன்.


ஆதி.







மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா

நிலவே… மலரே….
நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர்த் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்

எட்டி நிற்கும் வானம்
உன்னைக் கண்ட நேரம்
பக்கம் வந்து தாலாட்டும்
அந்தி மழை மேகம் இந்த மலர்த் தேகம்
தொட்டு தொட்டு நீராட்டும்

விழிகளில் கவிநயம்
விரல்களில் அபிநயம்
கண்ணே நீ காட்டு
விடிகிற வரையினில்
மடியினில் உறங்கிடு
பாடல் நீ கேட்டு

நிலவே… மலரே….
நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே

புன்னை இலை போலும்
சின்ன மணிப் பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது

புன்னை இலை போலும்
சின்ன மணி பாதம்
மண்ணில் படக் கூடாது
பொன்னழகு மின்னும்
முன்னழகு பார்த்து
கண்கள் படக் கூடாது

மயில்களின் இறகினில்
அழகிய விழிகளை
நீ தான் தந்தாயோ
மணிக் குயில் படித்திடும்
கவிதையின் இசையென
நீ தான் வந்தாயோ

நிலவே… மலரே….
நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே

மண்ணில் வந்த நிலவே
என் மடியில் பூத்த மலரே
அன்பு கொண்ட செல்லக் கிளி
கண்ணில் என்ன கங்கை நதி சொல்லம்மா


நிலவே…. மலரே….

9 comments:

  1. நதியா அலை அடித்த நேரம் அது.
    இந்தப் பாடல் அப்போது கிறங்க அடித்தது.
    மறுபடி கேட்கும்போதும்

    ReplyDelete
  2. நிலவே மடியில் பூத்த மலராக அருமையானதொரு பாடல். கேட்டு ரசித்தோம். இண்ட்லியிலும் 4 ஐ 5 ஆக மாற்றி விட்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. இனிய பாடல்...

    ReplyDelete
  4. இது வரைக் கேட்டது இல்லை

    ReplyDelete
  5. தாங்கள் கிடைக்கும் நேரத்தில் சிறப்பான பதிவுகளைத் தருகிறீர்கள்.தொடரட்டும் இந்த தம்பதியரின் பதிவுகள்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. பாடல் மட்டுமல்ல . இந்த படம் , பந்தம் போன்ற படங்களில் ஷாலினியின் நடிப்பு அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. மறந்து போயிருந்த இந்த பாடலை மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி வெ.நா!

    ReplyDelete
  8. இந்தப் பாட்டை பல நேரம் நிஜத்தில் ஜுஜ்ஜூவிற்கு தாலாட்டாய் பாடியுள்ளேன். நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete