Saturday 24 December 2011

வந்த நாள் முதல்………


நல்ல பல தத்துவங்கள் நிறைந்த இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து, கேட்டு ரசியுங்களேன்.....


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.


திரைப்படம்: பாவ மன்னிப்பு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1961




ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான்மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான் 
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ

நிலைமாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதியென்றோதுவான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ

பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்
எதனைக் கண்டான் பணம் தனைப் படைத்தான்

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ

இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்றத் தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே

மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

ம்..ம்..ம்..ம்.. ஓஹொஹோ
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை வான்
மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை

மனிதன் மாறிவிட்டான்
....ஓஒஒ ஓஓஓஏ ....ஓஒஒ ஓஓஓஏ



19 comments:

  1. நிலைமாறினால் குணம் மாறுவான்
    பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
    தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
    அது வேதன் விதியென்றோதுவான்

    அருமையான பாடல் வரிகளின்
    பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. மிகவும் அருமையான அழகான அந்தக்காலப் பாடல்.
    கேட்கும் போது எவ்வளவு இனிமையாக இருக்கும்!
    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.
    பகிர்வுக்கு நன்றிகள். vgk

    யூடான்ஸ் 3 இண்ட்லி 2

    ReplyDelete
  3. எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல்
    பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. வருகை தந்து இந்த பாடலை ரசித்து வாக்களித்து, கருத்துரையும் வழங்கிய

    இராஜராஜேஸ்வரி மேடம்
    திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்
    வை.கோபாலகிருஷ்ணன் சார்
    ரமணி சார்
    ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. இந்தப்பாட்டு வந்து இவ்வளவு வருஷங்கள் ஆகியும் கூட இப்பவும் புதுசா கேக்குரமாதிரி ரசிக்க முடியுதே. அதுதான் கண்ணதாசனின் வெற்றி.

    ReplyDelete
  6. லஷ்மிம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  7. வரிக்கு வரி தத்துவங்கள். அதுதான் கண்ணதாசன்.
    சூப்பர் பாட்டு. அதனால்தான் அவரே நிறைய ‘ஓ’ போட்டிருக்கார்.

    ReplyDelete
  8. அருமையான தத்துவ பாடல்.........




    புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!!

    ReplyDelete
  9. ஈஸ்வரன் சார், எனக்கு பிடித்தவை இருவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  10. மனம் கனிந்த புத்தாண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன். வாழ்க வளத்துடன்.

    ReplyDelete
  11. ஹரணி சாருக்கு நன்றிகள்.

    ReplyDelete
  12. மனிதன் தன்னுடைய சுய நலத்திற்காகவே மாறியுள்ளான்.

    ReplyDelete
  13. கந்தசாமி ஐயாவுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. வணக்கம்,
    தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வெங்கட் நாகராஜ்...

    உங்கள் வலைப்பக்கம் வந்து ஒரு பாடலாவது கேட்காமல் போவதில்லை. இப்போதுதான் கருத்துசொல்ல விழைகிறேன். உங்களைப் பார்த்தால் பொறாமையாகத்தான் இருக்கிறது. எப்படியென்றால் ஒவ்வொரு வலைப்பக்கத்தில் அவரவர்கள் (என்னையும் சேர்த்துதான்) எங்களது படைப்புக்களின் பல்வேறு முகங்களைப் பதிவாக இடும்போது தாங்கள் எதற்கும் கவலைப்படாமல் உங்களைக் கவர்ந்த பாடலை ரசித்த பாடலை இடுவது வாழ்க்கையை எத்தனை எளிதாக எடுத்துக்கொண்டு அனுபவிக்கிறீர்கள். பொறாமையாக இருக்காதா? வாழ்க் வளத்துடன். தொடர்ந்து பாடல் கேட்க வருவேன். நன்றிகள். நெஞ்சர்ர்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  16. சி. கருணாகரசு: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நண்பரே....

    ReplyDelete
  17. @ ஹரணி: உங்களது கருத்து மிகவும் மகிழ்ச்சி தருகிறது சார். பிடித்த பாடல்களை சேர்த்து ஒரு இடத்தில் வைப்பதற்காகவே இந்த பக்கத்தினை வைத்திருக்கிறேன்... அது மற்றவர்களுக்கும் பயன்படுமே என்ற நல்லெண்ணமே....

    தொடர்ந்த தங்களது வருகைக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சார்.....

    ReplyDelete