Wednesday 18 January 2012

நான் தேடும் செவ்வந்திப் பூவிது......


இளையராஜாவின் நிகழ்ச்சியில் அவர் பாடிய இந்த பாடலை நெடுநாட்களுக்குப் பிறகு கேட்டதிலிருந்து மனதில் பாடல் ஓடிக் கொண்டேயிருந்தது. பள்ளி கல்லூரி நாட்களில் ரேடியோவில் பலமுறை கேட்டு சுவைத்த பாடல். இந்த அருமையான இசையும், இளையராஜா அவர்களின் குரலும் ஈடு இணையில்லாதது. இளையராஜாவின் சிறந்த பாடல்களில் நிச்சயம் இந்த பாடல் இடம் பெற்றிற்கும். நீங்களும் கேட்டும், பார்த்தும் ரசியுங்களேன்….

மீண்டும் வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.


படம் – தர்மபத்தினி
இசையமைத்தவர் – இளையராஜா
பாடியவர்கள் – இளையராஜா, ஜானகி
படம் வெளிவந்த வருடம் – 1986
நடித்தவர்கள் – கார்த்திக், ஜீவிதா


நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழியில்லையோ
பருவக் குயில் தவிக்கிறதே
சிறகிரண்டும் விரித்து விட்டேன்
இளம் வயது  தடுக்கிறதே
பொன்மானே என் யோகம் தான்
பெண் தானோ சந்தேகம் தான்
என் தேவி ஆ….ஆ…ஆ…  ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்,
உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ?
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ?
என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம் தான்
எந்நாளும் உன் வானம் நான்
என் தேவா ஆ….ஆ….ஆ….  ஆ…ஆ….ஆ.. ஆ…ஆ….ஆ.
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்?
என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோ இது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்திப் பூவிது
ஒருநாள் பார்த்து அந்தியில் பூத்தது…..

9 comments:

  1. இங்க வந்தாலே நல்ல பாடல்கள் கேக்கமுடியும். நன்றி.

    ReplyDelete
  2. அழகான இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.
    யுடான்ஸ் : 2 இன்ட்லி: 2 vgk

    ReplyDelete
  3. இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கொலைவெறியைக் கேட்டுக் கேட்டு (காதிலே விழுந்து தொலைக்குதே)கொலைவெறியோடு இருந்தேன். நல்லவேளை, அழகான வரிகளுடன் அற்புதமான பாடலைக் கொடுத்து சாந்தப்படுத்தினீர்கள். என் தர்மபத்தினிக்கும் பிடித்த பாடல் இது. வாழ்க! வாழ்க!

    ReplyDelete
  5. ரசித்த பாடல் அருமை..

    ReplyDelete
  6. இனிமையான பாடல்! I like this song very much.

    ReplyDelete
  7. வாங்க லஷ்மிம்மா,

    நன்றி.

    வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,

    நன்றி.

    வாங்க முத்துலெட்சுமி,

    நன்றிங்க.

    வாங்க காஞ்சனா ராதாகிருஷ்ணன்,

    நன்றிங்க.

    வாங்க ஈஸ்வரன் சார்,

    நன்றி.

    வாங்க இராஜராஜேஸ்வரி,

    நன்றிங்க.

    வாங்க கே.பி.ஜனா சார்,

    நன்றி.

    வாங்க அமைதிச்சாரல்,

    நன்றிங்க.

    ReplyDelete