Tuesday 28 February 2012

ஒருத்தி ஒருவனை நினைத்து…..


இந்த பாடல் ஒரு இனிமையான பாடல். பாடல் வரிகளும் அர்த்தமுள்ளதாக இருக்கும். நான் ரசித்த பாடலை நீங்களும் பார்த்தும், கேட்டும் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம் – சாரதா
இசை – கே.வி.மஹாதேவன்
பாடியவர்கள் – P.சுசீலா, P.B ஸ்ரீனிவாஸ்
பாடல் வரிகள் – கவிஞர் கண்ணதாசன்
படம் வெளிவந்த வருடம் – 1962


ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்

அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்கு பெயர் என்ன ? - குடும்பம்

நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன? - துயரம்

பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன? - மெளனம்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? - காதல்

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்

இரவும் பகலும் உன்னுருவம் – அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம்அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்

அடக்கம் என்பது பெண்ணுருவம்அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்

மறைக்க முயன்றேன் முடியவில்லைஉன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

மறைக்க முயன்றேன் முடியவில்லைஉன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை

நினைக்கும் நிலையிலும் நான் இல்லைஉன்னை
நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை

வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை

கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி

கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி

சொன்னேன் பல முறை யாசிக்கிறாய்நீ
சொன்னதை நானும் யோசிக்கிறேன்

ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்கு பெயர் என்ன ? – காதல்….

8 comments:

  1. இனிமையான அர்த்தமுள்ள பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. மிகவும் இனிமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. எத்தனை கால ஆனாலும் மறக்க முடியாத
    எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத
    அருமையான பாடலை பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்ல பாடல்,எங்க வீட்ல அடிக்கடி கிண்டலாகவும் பாடப்படும் பாடல்.

    ReplyDelete
  5. டெம்ப்ளேட் நல்லாருக்கு

    ReplyDelete
  6. ரொம்ப இனிமையான மெட்டு.. எங்கம்மா ஹம் பண்ணிகிட்டே இருப்பாங்க.

    ReplyDelete
  7. பாடலை ரசித்து கருத்துக்களை தெரிவித்த,

    இராஜராஜேஸ்வரி மேடம்
    வை.கோபாலகிருஷ்ணன் சார்
    ரமணி சார்
    ஆச்சி
    அப்பாதுரை சார்

    அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  8. தேனமுதப் பாடல். அர்த்தமுள்ள வரிகள்.
    "மௌனமே பார்வையால் ஒரு பாட்டு" .......
    வேண்டும் சார். போடுவீர்களா ?

    ReplyDelete