நான் சிறு வயதாக இருக்கும்போது, பக்கத்து வீட்டு குழந்தை அக்க்ஷய் பெரும்பாலான நேரங்களில் எங்கள் வீட்டில் தான் இருப்பான். என் அம்மா, இந்த பாடலை அவனைத் தூங்க வைக்க அடிக்கடிப் பாடுவார். நல்ல தாலாட்டு. சிறுவயதிலேயே அடிக்கடி கேட்டதால் நன்றாக நினைவிலிருக்கும் இப்பாடல் இடம் பெற்ற படம் – வண்ணக்கிளி. பாடியவர்: பி. சுசீலா. எல்லோரும் பி. சுசீலா ஆகிவிடமுடியுமா, அதனால நான் என் குழந்தை சின்னதாய் இருக்கும் போது பேசி[!]ய பாடலும் இதுதான். நான் ரசித்த பாடல் இதோ உங்களுக்கும் காணொளியாய்.
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
அப்போ… கலகலன்னு சிரிச்சுகிட்டு என்ன பாரம்மா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
ஹூஹூம் கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யா பழம் பறிச்சு தாரேன் அழுகக்கூடாது
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
அருமையான பாடல்.
ReplyDeleteஎனக்கு மிகப் பிடித்த பாடல்!
ReplyDeleteபதிவிட்டமைக்கு நன்றி!
எனது வலைப்பூவில் உள்ள பாடல்களைப்
படித்து தங்கள் கருத்துக்களையும்
தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
http://kalaiyanban.blogspot.com/
முதல் முறை கேட்கிறேன் வெங்கட். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteமெல்லிசை மாமேதை கே வி மகாதேவன் இசையமைத்த அழியாப் பாடல்களில் ஒன்று இது. இதே 'வண்ணக் கிளி' படத்தில் தான் பிரபல ''சித்தாடை கட்டிக்கிட்டு...'' & ''அடிக்கிற கை தான் அணைக்கும்...'' பாடல்கள் இடம் பெற்றன. ''சித்தாடை கட்டிக்கிட்டு... '' அப்போதைய மிக அதிகம் விற்ற இசைத் தட்டு என்பது குறிப்பிடத் தக்கது.
ReplyDeleteஇன்றும் புதுமையாக எண்ணத் தூண்டும் பாடல் . பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநானும் இப்பத்தான் கேக்கறேன். நல்லா இருக்கு.. ;-)
ReplyDeleteஆஹா.. அந்த நாள் பாடல்.. கேட்கத் தெவிட்டாத இன்பம். மீண்டும் கேட்க வாய்ப்பு உங்களால்.
ReplyDeleteசினிமாவில் ‘அழ’ என்பது ‘அழுக’ என்றுதான் வசனம். அது ஏன் என்றுதான் புரியவில்லை!
Nice song. Many would have used this song for giving food to their kid or for making them sleep.
ReplyDeleteவருகை தந்து கருத்துரைத்த அனைவருக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteGenerations thaandi nirkum paadal. 1987 la yaarukku idhai paadi sappaadu ootti vitteno ippo aval kuzhandhaikkum adhai paadinen. Innum pala thalaimuraigal thaandum paadal!!
ReplyDelete