Thursday, 30 December 2010

அருணமலை குரு ரமணா


ரமண மகரிஷியின் 131-வது பிறந்த நாளான இன்று [30.12.2010] இளையராஜாவின் மனதிற்கு இதமளிக்கும் குரலில் ஒரு அருமையான பாடல்.  இந்த பாடல் ”ராஜாவின் ரமணமாலை” என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.  இனிய காலைப் பொழுதில் அமைதியான சூழலில் மெல்லிய ஒலியில் இப்பாடலை கேட்க ஆனந்தமாய் இருக்கும்.  நான் ரசித்த இந்தப் பாடலின் காணொளியும், பாடல் வரிகளும் உங்களுக்கும் பகிர்கிறேன்.  பாடலை Youtube-இல் தரவேற்றம் செய்து இருக்கும் YOVAN1977 என்ற நண்பருக்கு நன்றி.




அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்

அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா

தனித்திருக்கும் தாகம் கொண்டேன் தயவும் உனக்கு இல்லையோ
     பனித்தவிழி நீரும் எந்தன் நிலையைக் கூறவில்லையோ
இனியும் காலம் தாழ்த்தாமல் கனிவாம் பார்வை தரவேண்டும்
     பெரிதாம் பிறவிநோய் தீர்த்து இனிபிறவா வரமும் பெறவேண்டும்
அந்தம் கடந்த ஆதியே உனைச் சொந்தம் என்று பாடினேன்
     அச்சம் தோற்றும் பூமியில் வினை மிச்சம் தொலைய நாடினேன்
     கோடிக்கோடி அடியவரில் நான் தான் கடைக்கோடி ஐயா

அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா

உன்பெயரை ஓதும் யாரும் உயர்ந்த ஓர் பிறவியே
     தம்துயரைத் தீர்க்க எமக்கு கிடைத்த ஓர் கருவியே
உன்னைத் தொழுதல் பெரும்பேறு செய்வேன் என்ன கைமாறு
     ஐயன் அருளை பெருமாறு செய்தாய் அது என் அருட்பேறு
உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும் நான் காணா நிலையும் மாறுமோ
     என் உடலைத் தீபத் திரியாக்கி அதை எரித்தால் கூடப் போதுமோ
என் பிதற்றல் பிள்ளை மொழியல்ல ரமணன் விளக்கின் ஒளியன்றோ

     அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா



9 comments:

  1. பகிர்விற்கு நன்றி வெங்கட்..

    ReplyDelete
  2. ## முத்துலெட்சுமி: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அன்புள்ளம் கொண்டவரே, கடவுளிடம் கருணையை வேண்டும் போது கூட, தனக்கும், தனது குடும்பத்தாரும் நலம் பெற்றிடவேண்டும் என்று வேண்டிடாமல், எல்லோரும், எல்லா நலமும் பெற்றிடவேண்டும் என்று கேட்கும் தன்னலமற்ற நல்லுள்ளம் கொண்ட வெங்கடராமன் அவர்களே, உமக்கும் உம்முடைய "ப்ளாக்" நண்பர்கள்மீதும், வருகின்ற புத்தாண்டில், அந்த பேரொளியான அருணமலை குருவாகிய ரமணனின் கருணை வதனம் படட்டும், கருணை அருள் பெருகட்டும்.!!

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  4. @@ V.K. Natarajan: தங்கள் வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  5. மிகவும் தரமான பகிர்வு. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இளையராஜாவின் இசையிலும் குரலிலும் உயிர் உருக்கும் பாடல். நல்ல பகிர்வு...

    ReplyDelete
  7. @@: லக்ஷ்மி: மிக்க நன்றி அம்மா.

    @@ பத்மநாபன்: மிக்க நன்றி. நல்ல பாடல். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. இம்முறை வித்தியாசமாய் ஒரு சுகானுபவம்.. இசைக்கு உள்ள சக்தி அபாரம்.

    ReplyDelete
  9. அருமையான பகிர்வுக்கு நன்றி குருரமணரின் பூர்ணஅருளாசி தங்களுக்கு கிடைக்க வேண்டுகின்றேன்..

    ReplyDelete