ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பல பாடல்கள் இயற்றியிருக்கிறார் எனக் கேட்டு இருக்கிறேன். சங்கீத ஞானம் இல்லாத என் போன்ற பாமர ரசிகர்களுக்கு என்ன ராகம், தாளம் என்ன என்பது எல்லாம் தெரியாது. ஆனாலும் சில பாடல்கள் ரசிக்க வைக்கும். சிறு வயதிலேயே என் பள்ளி ஆண்டு விழாவில் இப்பாடலுக்கு ஏற்ப என் சகோதரி நடனம் ஆடியிருப்பதை நான் பார்த்திருப்பதால் இப்பாடல் என் மனதில் இன்றளவும் நிற்கிறது. ”அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட” என்ற வரியில் ”கூட” என்று வருமா அல்லது “கூவ” என்று வருமா என்பது தெரியவில்லை. இப்பாடலை சுதா ரகுநாதன் பாடும்போது, ”கூவ” என்றும், கே.ஜே.யேசுதாஸ் பாடும்போது ”கூட” என்றும் பாடுகின்றனர். ”கூட” என்பது சரியென நினைக்கிறேன். தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். சுதா ரகுநாதன் மற்றும் கே.ஜே. யேசுதாஸ் ஆகிய இருவர் குரலிலும் இப்பாடல் YOUTUBE-இல் உள்ளது. இரண்டுமே கொடுத்திருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்…
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ சகியே
குறையேதும் எனக்கேதடீ சகியே
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ சகியே
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ சகியே
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ இ.இ..இ…..
அழகான மயில் ஆடவும் - மிக
அழகான மயில் ஆடவும் – மிக மிக
அழகான மயில் ஆடவும் காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் மிக மிக
அழகான மயில் ஆடவும் காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும் மிக மிக
அழகான மயில் ஆடவும் காற்றில்
அசைந்தாடும் கொடி போலவும்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிகு என ஒரு பதம்பாட தகிடததிமி என நடம் ஆட
தகுமிகு என ஒரு பதம்பாட தகிடததிமி என நடம் ஆட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ சகியே
குறையேதும் எனக்கேதடீ
மகர குண்டலம் ஆடவும்
மகர குண்டலம் ஆடவும் கண்ணன்
மகர குண்டலம் ஆடவும் கண்ணன்
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மகர குண்டலம் ஆடவும் - அதற்கேற்ப
மகுடம் ஒளி வீசவும்
மிகவும் எழிலாகவும் – காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
மிகவும் எழிலாகவும் – தென்றல் காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
மிகவும் எழிலாகவும் – காற்றில்
மிளிரும் துகில் ஆடவும்
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அகமகிழ்ந்திலகும் நிலவொளி தனிலே தனைமறந்து புள்ளினம் கூட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
அசைந்தாடி மிக இசைந்தோடிவரும் நலம் காண ஒரு மனம் நாட
தகுமிகு எனஒரு பதம்பாட தகிடததிமி என நடம் ஆட
தகுமிகு எனஒரு பதம்பாட தகிடததிமி என நடம் ஆட
கன்று பசுவினமும் நின்று புடைசூழ,
என்றும் மலருமுக..இறைவன் கனிவோடு
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ சகியே
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறையேதும் எனக்கேதடீ இ.இ..இ….
மனமெல்லாம் நிறைந்தது மதுர இசையில்!
ReplyDeleteநல்ல பாடல் வெங்கட்..
ReplyDeleteஎன் மகள் இப்பாடலுக்கு நடனமாடுவாள்..
ரொம்ப புடிச்ச பாட்டு.. ரொம்ப புடிச்ச குரல்ல.. நன்றி தலைநகரத் தல. ;-)
ReplyDeleteஅருமை. இன்ஹ்டப் பாடலுக்கு கே ஜே அட்டகாசமா பாடி இருப்பார்
ReplyDeleteநான் ரசித்த இப்பாடலை ரசித்த திரு கே.பி.ஜனா, முத்துலெட்சுமி, ஆர்.வி.எஸ் மற்றும் எல்.கே [கார்த்திக்] அவர்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஇண்ட்லியில் வாக்கு அளித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு.. ரசிக்க வாய்ப்பளித்த உங்கள் ரசனைக்கு நன்றி.
ReplyDeleteகுலதெய்வமே (வேங்கடவன்) உன்னை கொண்டாடினேன் .குழல் இனிது , யாழ் இனிது என்பர் ஜேசுதாஸ் குரலினிமையை கேட்காதவருக்கு என்பேன் .எவ்வளவு முறை கேட்டாலும் சலிப்பு தோன்றாதய்யா. காம்போதிராகமே பெருமைபெற்றதைய்யா ஜேசுதாஸ் பாடியதால். மன நிம்மதி அடைந்தேன், வேறு எந்த செல்வமும் வேண்டேன் அய்யா.. ( ஆறறிவு உள்ள மனிதர்களே குழல் இனிமையில் தன் நிலை மறக்கும்போது, அந்த புள்ளினங்கள் நிலைமறந்து, சூழல் மறந்து "கூட" என்பதே சாலப் பொருத்தமானது.
ReplyDeleteஅந்த குழலினிமையில் சுதா அவர்கள் தன்னை மறந்து "புள்ளினங்கள் கூவ" என்று பாடியதை மன்னித்து விடலாம்) நன்றி. வாழ்க, வளர்க.
மந்தவெளி நடராஜன்.
எனக்கும் மிகவும் பிடித்தபாட்டு. பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.
ReplyDeletemiga miga arumaiyana pathiyu. thodarattum ..melum melum.
ReplyDeleteதிரு ரிஷபன், திரு நடராஜன், லக்ஷ்மி அம்மா, திரு பாலா - உங்கள் அனைவருக்கும் நன்றி.
ReplyDelete//எனக்கும் மிகவும் பிடித்த பாட்டு.. எங்க வீட்ல எப்பவும் ஓடிட்டு இருக்கற பாடல். ஆனால் சிதரா குரலில். ரசிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.
ReplyDeleteநல்லப் பாடல். இன்று ஜெயா டி.வியில் ஊத்துக்காட் வேங்கட சுப்பையர் பாடல்கள் பாடினார்கள்.
ReplyDeleteஅடிக்கடி பாடாத புதுப் பாடல்கள் பாடினார்கள் அருமையாக.
சுப்பையர் ஒவ்வொரு கோவில்களில் பாடியதை தொகுத்துப் பாடினார்கள்.
புள்ளினம் கூட என்பது தான் சரியாக இருக்கும் வெங்கட், அடுத்தவரியில் மனம் நாட என்று வருவதால் கூட என்று தான் வரும் என நினைக்கிறேன்.
@@ ப. பானுமதி: உங்கள் முதல் வருகைக்கு நன்றி. சித்ரா குரலில் நான் கேட்டதில்லை. முடிந்தால் பகிருங்கள்...
ReplyDelete@@ கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. எனக்கும் “கூட” என்பதே சரி அன்று தோன்றுகிறது.