பஞ்சவர்ணக்கிளி படத்தில் இருந்து இந்த பாடல். பி. சுசீலா அவர்களின் குரலில், படத்திற்கு இசை அமைத்த ஜாம்பவான்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி. நல்லதோர் தாலாட்டுப் பாடல். என்ன ஒரே பிரச்சனை – அழகான சுட்டிக் குழந்தைக்கு பதிலாய் நடுநடுவே முத்துராமன் – கண்ணன் ஆகி விடுகிறார் – கே.ஆர். விஜயாவின் நினைப்பில். காணொளியில் முதல் சில வரி வசனங்கள் இல்லை. காணொளியை Youtube-ல் பதிந்து இருக்கும் peris0007 அவர்களுக்கு எனது நன்றி.
கண்ணா….
வா வா வா வா வா வா
கண்ணே வாடா கண்மணி வாடா
பொன்னே வாடா பொன்மணி வாடா
புன்னகை புரியும் கண்ணா வாடா…
புல்லாங்குழலின் மன்னா வாடா…
அழகே வாடா அருகே வாடா….
அன்பே வாடா…. முத்தம் தாடா…..
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
பச்சை வண்ணக்கிளி வந்து பழங்கொடுக்க
பட்டுவண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
பச்சை வண்ணக்கிளி வந்து பழங்கொடுக்க
பட்டுவண்ணச் சிட்டு வந்து மலர் கொடுக்க
கன்னங் கருங்காக்கை வந்து மை கொடுக்க
கண்ணன் மட்டும் கன்னத்திலே முத்தம் கொடுக்க
முத்தம் கொடுக்க…
முத்தம் கொடுக்க…
தத்தித்தத்தி நடக்கையில் மயில்போலே
திக்கித்திக்கி பேசுகையில் குயில் போலே
கொஞ்சிக் கொஞ்சி எடுக்கையில் கொடி போலே
அஞ்சி அஞ்சி விழுவான் மடிமேலே
ஆரிரோ…. ஆரி ராரி ராரி ராரி ராராரோ
ஆரிரோ…. ஆரி ராரி ராரி ராரி ராரீரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்…
உனக்கென்றும் எனக்கென்றும் உறவு வைத்தான்
இருவரின் கணக்கிலும் வரவு வைத்தான்
ஒருவரின் குரலுக்கு மயங்க வைத்தான்
உண்மையை அதிலே உறங்க வைத்தான்
உறங்க வைத்தான்…
உறங்க வைத்தான்…
ஆரிரோ…. ஆரி ராரி ராரி ராரி ராராரோ
ஆராரோ…. ஆரி ராரி ராரி ராரி ராரீரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
ஆரி ராரி ராரி ராரி ஆராரோ
கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணமலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
வலம்புரிச் சங்கெடுத்து பாலூட்டுவான்
திருவாளர் வெங்கட் அவர்களே,
ReplyDeleteபுன்னகை அரசியின் நடிப்பில், தேனில் ஊறிய பலா சுளையை மிஞ்சும் சுசீலா அம்மாவின் குரல் இனிமையில் இந்த, காலத்தால் அழியாத பாட்டினை எங்களுக்கு தந்தமைக்கு நன்றி அய்யா. மனைவி என்பவள் முதலில் இளம் பிராயத்தில துணைவியாகவும் , நடு பிராயத்தில் தோழியாகவும் பின்னர் முதுமையில் தாயாகவும் இருந்து கொண்டவனுக்கு தன் வாழ் நாளை தியாகம் செய்யும் பாங்கினை வர்ணிக்கவும் முடியாது அதற்கு அவள் நம்மிடம் எதிர் பார்பதெல்லாம் காலத்தால் அழியாத பேரன்பு ஒனறினைதான்.
மந்தவெளி நடராஜன்.
அருமையான பாடல்.. அடிக்கடி முணுமுணுக்கும் பாடலும் கூட..
ReplyDeleteஎனக்கும் மிக மிகப்பிடித்தமான பாடல் இது வெங்கட்...
ReplyDeleteசுசீலா குரலின் உச்ச ஸ்தாயி எங்கெங்கெல்லாமோ நம்மைச் சஞ்சரிக்கச் செய்து இன்ப போதையில் ஆழ்த்தி விடும்.
@@ V.K. Natarajan: வருகைக்கும் தங்கள் நீண்ட நல் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete@@ முத்துலெட்சுமி: ஓ... நிறைய பேர் முணுமுணுக்கும் பாடல் இது...
@@ எம்.ஏ. சுசீலா: தங்கள் பெயர் கொண்டவரின் எல்லா பாடல்களுமே எனக்கும் பிடிக்கும் அம்மா... மிக்க நன்றி.
அருமையான பாடல்..
ReplyDelete@@ ஆயிஷா: இந்த வலைப்பூவில் உங்கள் முதல் வருகை. மிக்க நன்றி.
ReplyDeleteமிகவும் மென்மையான பாடல் பதிவு.
ReplyDelete@@ லக்ஷ்மி: வருகைக்கும் கருத்திற்கும் நன்றிம்மா.
ReplyDelete