Saturday, 22 January 2011

காதல் மயக்கம்…..

புதுமைப் பெண் படத்தில் இருந்து இந்தப் பாடல். இளையராஜாவின் இன்னிசையில், பி. ஜெயச்சந்திரன் மற்றும் சுனந்தா ஆகியோரால் பாடப்பெற்றது இந்த இனிய பாடல்.  பாடலின் வரிகள் கவிஞர் வாலி அவர்கள் எழுதப்பெற்றது. அழகான ஒரு காதல் கவிதையாய் இருக்கும் இந்தப் பாடல் நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.  ஜெயச்சந்திரன் அவர்கள் பாடிய பாடல்களில் இதுவும் எனக்குப் பிடித்த ஒன்று.  இந்தப் பாடலை YOUTUBE-ல் பகிர்ந்த ஜெகன்1987 அவர்களுக்கு நன்றி.

மீண்டும் வேறு ஒரு பாடலோடு சந்திக்கும் வரை…

ஆதி


 
காதல் மயக்கம்…. அழகிய கண்கள் துடிக்கும்
இது ஒரு காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்

தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே ஒரு
காதல் மயக்கம் அழகிய கண்கள் துடிக்கும்

நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை……
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா?
மெய்தான் அய்யா
நான் தூங்க வில்லை கனவுகள் இல்லை
மெய்யா பொய்யா?
மெய்தான் அய்யா
பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே
மார்பினை தீண்டு மார்கழியே
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
என் பெண்மை திண்டாடும் உன்னோடு மன்றாடும்

காதல் மயக்கம்…. அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்

தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
ஒரு காதல் மயக்கம்
அழகிய கண்கள் துடிக்கும்

உன் வார்த்தைதானே நான் சொல்லும் வேதம்…….
உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி
வா வா தேவி
உன் பேரை சொன்னால் ஆயுளும் கூடும்
போதும் கேலி
வா வா தேவி
கண்களில் ஒன்று பார்க்கின்றது
உன்னிடம் தேதி கேட்கின்றது
மாலை வழங்கும் நேரம் நெருங்கும்
நான் வந்து பெண் பார்க்க
நீ அன்று மண் பார்க்க
காதல் மயக்கம்…. அழகிய கண்கள் துடிக்கும்
ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு அனுமதி இலவசம்
தன்னை மறந்த அனுபவம் ரெண்டு கண்களின் அபிநயம்
தேகம் கொஞ்சம் சிலிர்க்கின்றதே
மேகம் போல மிதக்கின்றதே
மெழுகாய் உருகும் அழகே
ஒரு காதல் மயக்கம்

அழகிய கண்கள் துடிக்கும்….

11 comments:

  1. அருமையான தேர்வு வெங்கட்..இந்த பாடல் மிக இனிமையானது..
    ராஜாவின் அற்புத இசை. மெட்டியில் வரும் 'சந்த கவிகள் பாடிடும்' பாடலின் இசைக்கோர்வையின் தொடர்ச்சி இது என்று சொல்லலாம்..

    ReplyDelete
  2. ஓ.. இது திருமதி வெங்கட்டின் தேர்வா..கவனிக்கவில்லை..உங்கள் ரசனைக்கு வாழ்த்துகள்..

    ReplyDelete
  3. அருமையான பாடல் வரிகள். படித்து முடித்தேன். இனி கேட்டு மகிழ்ந்து காதல் மயக்கத்தில் மூழ்கப் பார்க்கிறேன். மின்னஞ்சல் மூலம் கொடுத்த தங்கள் தகவலுக்கு நன்றி !

    ReplyDelete
  4. நிஜமாகவே மயக்கம் தரும் பாடல். என் காதுகள் இதைக் கேட்டு காதல் பழகியது. இத்தோட நிறுத்திக்கிறேன். ;-) ;-)

    ReplyDelete
  5. மிக நல்லதொரு பாடல். பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  6. அருமையான பாடல்,ரேவதி,பாண்டியன்,வெள்ளுடை தேவதைகளுடன் இப்போதும் இந்த பாடல் புதுமை தான்.

    ReplyDelete
  7. இதுவும் இப்பதான் கேள்விப் படறேன். நன்றி mr&Mrs வெங்கட்

    ReplyDelete
  8. மிக நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  9. மிக நல்ல பாடல்,பாட்டுக்கு மெட்டா அல்லது மெட்டுக்கு பாடலா என்று விவாதம் வந்த போது இளையராஜா வைரமுத்துவை முதலில் பாடல் எழுத கூறி பின்பு மெட்டு அமைத்தது. வைரமுத்துவே இளையராஜாவிடம் தனக்கு பாடல் எழுத நிறைய சுகந்திரம் இருந்த்து என்று பேட்டி கொடுத்து இருந்தார்............வாலி பாடல் எழுத வில்லை

    ReplyDelete