நாளை இந்தியாவின் குடியரசு தினம். 1950-ல் குடியரசு நாடாகிய இந்தியா இன்று 2011-ல் எப்படி இருக்கிறது என்பதை நாம் அறிவோம். பெரும்பாலான அரசியல்வாதிகள் பித்தலாட்டமும் சுரண்டல்வாதிகளுமாய் இருக்கின்றனர். பாரதி இன்று இருந்தால் என்ன பாடி இருப்பாரோ தெரியவில்லை. குடியரசு தினம் முன்னிட்டு இந்த வலைப்பூவில் பாரதி படத்தில் இருந்து கானகந்தர்வன் கே.ஜே. யேசுதாஸ் அவர்களின் குரலில் இசைஞானி இளையராஜாவின் இசையில் “பாரத சமுதாயம் வாழ்கவே” நான் ரசித்த பாடல் உங்களுக்காய்!
Get Your Own Hindi Songs Player at Music Plugin
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
பாரத சமுதாயம் வாழ்கவே
மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ – புலனில்
வாழ்க்கை இனியுண்டோ – நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானியங்களும்
கணக்கின்றித் தரு நாடு – இது
கணக்கின்றித் தரு நாடு –
நித்த நித்தம் கணக்கின்றித் தரு நாடு
இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
இனியொரு விதிசெய் வோம் –
அதை எந்த நாளும் காப்போம்,
தனியொருவனுக் குணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடு வோம்
ஜகத்தினை அழித்திடு வோம்
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத்துக்கொரு புதுமை
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே – ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்கவே – வாழ்க வாழ்க
பாரத சமுதாயம் வாழ்கவே
குடியரசு தின வாழ்த்துக்கள்..:)
ReplyDeleteபாடல் அருமை தான். பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅரசாங்கம் மற்றும் இத்ர நிறுவனங்கள் விடுமுறை அளிப்பதாலும், உங்களைப் போன்ற நாட்டுப் பற்றுள்ள ஒரு சிலர், பாரதியை நினைவு படுத்தி, ஒரு பாட்டை நினைவுக்குக் கொண்டு வருவதாலும் மட்டுமே, நாளைக்கு “குடியரசு தினம்” என்பது நினைவுக்கு வருகிறது, பொது ஜனங்களுக்கு, என்பதே ஒரு கசப்பான உண்மை.
மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
ReplyDeleteவழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ – புலனில்
வாழ்க்கை இனியுண்டோ – நம்மிலந்த
வாழ்க்கை இனியுண்டோ
இன்று பாரதி இருந்தால் இப்படி எழுதிய தன் கற்பனை
பொய்த்து போனதற்காக துடிதுடித்து உயிர் விட்டிருப்பார்
புண்ணியம் செய்தவர் பாவக் காட்சிகளை கண்ணால் காணாது சென்றார்
கே ஜே யேசுதாஸ் அவர்களின் குரலுக்கு நான் என்றுமே ரசிகைதான்
நல்ல பதிவு
உங்க ப்ளாக் வந்தா அருமையான் பாடல்கள்கேட்க்கக்கிடைக்குது. இதுபோல பாடல்களை குடியரசு தினத்தில் மட்டும்தான் கேட்கமுடிகிறது.
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்
ReplyDeleteகுடியரசு தின நல்வாழ்த்துகள்
ReplyDeleteஎன்னதான் நமது நாட்டை பிரச்னைகள் சூழ்ந்தாலும் இறுதியில் மீண்டு உன்னத நிலையை தக்க வைத்துக் கொள்வோம்.. பாரதி போல தேசபக்தர்கள் உழைப்பு வீண் போகாது
குடியரசு தினத்தில் சரியான பாடல் வெளியிட்டுள்ளீர்கள்
ReplyDelete@@ முத்துலெட்சுமி: மிக்க நன்றி. உங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
ReplyDelete@@ வை. கோபாலகிருஷ்ணன்: மிக்க நன்றி சார்.
@@ ராஜி: உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி. நானும் யேசுதாஸ் ரசிகன் தான்.
@@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா.
@@ எல்.கே.: மிக்க நன்றி கார்த்திக். உங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
@@ ரிஷபன்: மிக்க நன்றி சார். உங்கள் நம்பிக்கை எனக்கும் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டு உள்ளது.
@@ மோகன்குமார்: மிக்க நன்றி மோகன்குமார்.
இண்ட்லியில் வாக்களித்து இந்த இடுகையை பிரபலமாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.
ReplyDeleteநல்ல பாடலை எங்களோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க
ReplyDelete@@ அரசன்: உங்கள்து முதல் வருகை? உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
ReplyDelete>>>பெரும்பாலான அரசியல்வாதிகள் பித்தலாட்டமும் சுரண்டல்வாதிகளுமாய் இருக்கின்றனர்.
ReplyDeletevengkat சார்.. அரசியல்வாதிகளுக்கான அடியாளமே அதுதானே
அரசியல் வாதிகளுக்கான அடையாளமே அதானே
ReplyDelete@@ சி.பி. செந்தில்குமார்: உண்மைதான் நண்பரே. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி!
ReplyDelete