Tuesday, 18 January 2011

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

தனிக்காட்டு ராஜா படத்திலிருந்து “ராசாவே உன்ன நான்” பாடல் நான் ரசித்த பாடல்களில் ஒன்று.  ரஜினிகாந்த், ஸ்ரீப்ரியா நடிப்பில் இளையராஜா இசையில் கலக்கியிருப்பார்.  எஸ்.பி. ஷைலஜாவின் இனிய குரலில் ஒலிக்கும் இப்பாடல் அவரது பாடல்களிலேயே மிகவும் பிரபலமான ஒன்று.  ரஜினி, ஸ்ரீப்ரியா கையைப் பிடித்துக்கொண்டு ஒற்றைக்காலில் ஒரு சுற்று சுற்றி நடனம் ஆடுவார் பாருங்கள், சூப்பர் போங்க! ரஜினியின் நடனம் பிடிக்காதவர்கள் [!] கண்ணை மூடிக்கொண்டு ரசிக்கலாம்!  ஆனால் என்ன அருமையான அருவி, நதி போன்ற இயற்கைக்காட்சிகள், அழகிய காட்சியமைப்பு போன்றவற்றை நீங்கள் இழக்க நேரிடும்.  அதற்கு கண்ணைத் திறந்தபடி பாடலை ரசியுங்களேன்.  காணொளியை YOUTUBE-ல் பதிவு செய்து வைத்திருக்கும் ARSARA அவர்களுக்கு நன்றி.


ஆடியோ மட்டும் கேட்க விரும்புவர்களுக்கு:


Get Your Own Hindi Songs Player at Music Plugin

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசாவே…….

ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிருருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி
நீ கெடைக்க நேந்துகிட்டேன்
மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி
நீ கெடைக்க நேந்துகிட்டேன்
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
பாத்தாளே ஆத்தா மனக்குற தீத்தா
கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்
பல ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன் வாழத்தான்
நான் பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசாவே…….18 comments:

 1. ரொம்ப பிடித்த பாடல் போல?

  வரிகளோடு பதிவு............

  ReplyDelete
 2. @@ Thoppithoppi: ரசித்த பாடல் தான். மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 3. எனக்கும் பிடித்த அருமையான பாடல் தான். தகவலுக்கும் பதிவுக்கும் நன்றி.

  ReplyDelete
 4. @@ வை. கோபாலகிருஷ்னன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

  @@ ரிஷபன்: ரசித்தமைக்கு மிக்க நன்றி சார்.

  ReplyDelete
 5. நல்ல பாடல்..

  ஒரு விசயம்.. அந்த காலத்துல பல பாடல்கள் நல்லா இருக்கும் கேக்க , கொடுமையா இருக்கும் பாக்க..
  அதனால் இனி கொஞ்சம் பாட்டோட ஒலிக்கோப்பையும் இணைத்தே ஏற்றினீங்கன்னா.. அதை மட்டும் கேட்டுக்கலாம்..

  ReplyDelete
 6. தலை நகரமாம் புது தில்லியிலிருந்துகொண்டு , தேனினும் இனிய தெவிட்டாத பாடல்களை தேடித் தேடி எமக்கு வழங்கும் வள்ளல்பெருமானே, வணக்கங்கள்.

  பூ வைத்து பொட்டும் வைத்து, மாக்கோலம் போட்டு மாவிளக்கு ஏற்றி பூவோடு நார்போல ,ஆத்தா அருளால் மாலையும் மஞ்சளும் கிடைத்த தென்னவோ உண்மை. ஆனால் மனக்குறை தீர்ந்ததா என்றால் இல்லைதான். பெண்ணாக பிறந்துவிட்டால் (குழந்தைப் பருவத்தில் தூங்கியது தவிர) பல ராத்திரிகள் தூங்காத இரவுகளாகத்தான் கழிகின்றன. இதற்கு மாறாக, கொண்டவன் அன்போடும், அவளின் சுமையை தானும் பங்கு போட்டுக் கொண்டு ஆதரித்து இல்லறத்தை நடத்தும்போதினில் அவ்விடம் நல்லறம் தோன்றுகிறது, இன்ப ஊற்று பெருக்கெடுத்து ஓடுகின்றது. வாழ்வு சிறக்கின்றது. நிம்மதி கிடைக்கின்றது. ஆனால் இந்த பேறு கிட்டுவதேன்னவோ சிலபேருக்குதான்.இது மறுக்க முடியாத உண்மை.

  மந்தவெளி நடராஜன்.

  ReplyDelete
 7. வாவ், எங்க சித்தியோட ஃவேரீட் என்பதால் எனக்கும் ஃபேவரிட்டான பாட்டு. ஷைலஜா குரலில் சூப்பரா இருக்கும். முத்துலட்சுமி சொல்லியிருப்பது போல
  www.esnips.com, www.musicplugin.com போன்ற இடங்களில் ஒலிக்கோப்பை எம்பேட் செஞ்சு பதிவுல போடலாம்.

  ReplyDelete
 8. @@ முத்துலெட்சுமி: மிக்க நன்றி. இப்போது பாடலின் ஆடியோ மட்டும் தனியாக போட்டு இருக்கிறேன்.

  @@ மோகன் குமார்: மிக்க நன்றி நண்பரே.

  @@ வி.கே. நடராஜன்: தங்களது நீண்ட கருத்துரைக்கு மிக்க நன்றி.

  @@ புதுகைத்தென்றல்: மிக்க நன்றி. இப்போது பாடலின் ஆடியோ தனியாக போட்டு விட்டென்!

  ReplyDelete
 9. எனக்கும் பிடித்த அருமையான பாடல்.

  ReplyDelete
 10. நன்றி வெங்கட் அவர்களே, "ராசாவே...." பாட்டினை ஆடியோ வடிவில் தந்தமைக்கு!! பொழுது புலர்ந்த வேளையில் ஸ்வர்ணலதாவின் தேனினும் இனிய குரலை கேட்டு, இன்றைய பொழுதுக்கு தேவையான மனத்திண்மையை பெற்றேன்.

  mandhaveli natarajan.

  ReplyDelete
 11. @@ கே.பி. ஜனா: மிக்க நன்றி.

  @@ வி.கே. நடராஜன்: இரண்டாவது வருகைக்கு மிக்க நன்றி. பாடலைப் பாடியது எஸ்.பி. ஷைலஜா. ஸ்வர்ணலதா அல்ல!

  ReplyDelete
 12. அருமையான பாடல்,ஆகா ப்ளாக் வந்து பாட்டு கேட்பது எத்தனை மனதிற்கு இதமாக இருக்கு.மிக்க நன்றி.

  ReplyDelete
 13. ரொம்ப பிடிச்ச பாடல். பகிர்வுக்கு நன்றிங்க :)

  ReplyDelete
 14. @ ஆசியா உமர்:
  # ஆனந்தி [அன்புடன் ஆனந்தி]:

  தங்களுடைய வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 15. 80- களில் புகழ் பெற்ற மெலடி இளவரசி SP.சைலஜாவின் பல நல்ல பாடல்கள் உண்டு அவற்றை தர முடியுமா ? வானொலிகளில் முன்பு அடிக்கடி ஒலித்த பல சைலஜாவின் பாடலகள் உண்டு ' அன்றைய மென்மையான SP.சைலஜாவின் குரலில் பாடலகள கேட்கும் பொழுது இதமாக இருக்கும்

  ReplyDelete