பாமா விஜயம் படத்தில், பாலையா, மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், நாகேஷ், சௌகார் ஜானகி, காஞ்சனா, ஜெயந்தி என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கும். இந்த படத்தில் வரும் ”வரவு எட்டணா செலவு பத்தணா” என்ற இந்தப் பாடல் எல்லாக்காலத்திற்கும் பொருந்தும் இல்லையா? நகைச்சுவை கலந்து உண்மையை விளக்கும் இந்தப்பாடல் இதோ உங்களுக்காகக் காணொளியாய். GOOGLE VIDEOS-க்கு நன்றி.
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா..
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா ஆஆஆஆ
1 2 3 4 5 6 7 8 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசுக்கு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொருக்காது
அப்பா வாழ்வது பொருக்காது
வாடகை சோபா
இருவது ரூபா
விலைக்கு வாங்கினா
முப்பதே ரூபா
வாடகை சோபா இருவது ரூபா
விலைக்கு வாங்கினா முப்பதே ரூபா
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பத்துக்காகாது
அய்யா குடும்பத்துக்காகாது
யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது
யானையைப் போலே பூனையும் தின்னா ஜீரணமாகாது
அய்யா ஜீரணமாகாது
பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது
பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
பச்சைக்கிளிகள் பறப்பதை பார்த்தா பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்குப் பிடிக்காது
பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
பணத்தைப் பார்த்தால் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
தங்கச் சங்கிலி இரவல் வாங்கினா
தவறிப் போச்சுன்னா தகிட தந்தனா
ஹேஹேஹே
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக?
அய்யா இங்கே எதற்காக?
மாதர்கள் எல்லாம் கன்னியராக மாறணும் அதுக்காக
அப்பா வேறே எதுக்காக
கன்னியராக மாறணமென்றால் பிள்ளைகள் எதற்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக
காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
அப்பா வேறே எதுக்காக
பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கேட்டால் தெரியும் கேள்வியும் பதிலும்
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
வரவு எட்டணா செலவு பத்தணா அதிகம் ரெண்டணா
கடைசியில் துந்தணா துந்தணா துந்தணா
எப்போது கேட்டாலும் அதே உற்சாகம்..
ReplyDeleteஎந்தக் காலத்திற்கும் ஏத்தப் பாட்டு
ReplyDeleteஅதுவும் அந்த குழந்தைகள் நடனம் சூப்பரா இருக்கும்..:)
ReplyDelete@@ ரிஷபன்: படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் இப்போதும் பொருந்தும் பாடல். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
ReplyDelete@@ எல்.கே.: மிக்க நன்றி.
@@ முத்துலெட்சுமி: குழந்தைகள் நடனம் மட்டுமல்ல, நடிப்பும் அருமை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
நல்ல நல்ல பாடல்களை பதிவாபோடரீங்க. கேக்கவே இனிமை.
ReplyDelete@@ லக்ஷ்மி: மிக்க நன்றிம்மா. உங்கள் கருத்தும், வரவும் என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது.
ReplyDeleteவாழக வலைப்பூ!
ReplyDelete-கவியரசு மின்னஞ்சல்.