Friday, 28 January 2011

காஞ்சி பட்டுடுத்தி…..

எனக்கு 7 வயசு இருக்கும்போது வந்த படம் வயசு பொண்ணு [1978]. ஆனாலும் இந்த பாடல் நான் முதலில் கேட்டது ஒன்பதாவது-பத்தாவது படிக்கும்போது இருக்கலாம். ஆனாலும் இப்பவும் இந்தப் பாடல் எனக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. பாடலாசிரியர்: நா. முத்துலிங்கம். பாடலுக்கு இசை: எம்.எஸ். விஸ்வநாதன். பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ், சாவித்ரி/வாணி ஜெயராம். மிகவும் ரசித்த பாடல்களில் இதுவும் ஒன்று. YOUTUBE-ல் தரவேற்றம் செய்து இருக்கும் CRAMSINGAPORE என்ற நண்பருக்கும் நன்றி!



காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
ஆ…..ஆ….ஓஹோ ஓஹோ ஓஹோஹோ…

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
நா..நா…நன நன நனன ந….

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்…
திருமகளும் உன் அழகை பெறவேண்டும்

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
ஆ…ஆ… ஆ….ஆ…..

தென் குமரி கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே
பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம்
அங்கு பேசாத கதைகள் எல்லாம் பேசுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தனம் பூசுவோம் செந்தமிழ் பாடுவோம்
சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
நாம் சந்தோஷ ஊஞ்சலிலே ஆடுவோம்
காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்….

தேனருவி கரையினிலே திருக்குற்றால மலையினிலே
நீரருவி உடல் தழுவ குளிக்கணும்
நான் நெருங்கி வந்து உன் அழகை ரசிக்கணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
குங்குமம் போலவே உன் முகம் மாறணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்
பொய் கோபம் கொண்டு நீ விலகிப் போகணும்

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்
ஆ… ஆ…ஆ…ஆஆ…

பூம்புகாரின் நாயகியாம் புனிதமுள்ள குணவதியாம்
கண்ணகி போல் நீ வாழ நினைக்கணும்
உன் கணவனுக்கு பெருமைகளைச் சேர்க்கணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாமியார் வாழ்த்தணும் மற்றவர் போற்றணும்
மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்
இந்த மாநிலமே உன் புகழைப் பாடணும்

காஞ்சி பட்டுடுத்தி கஸ்தூரி பொட்டு வைத்து
தேவதைபோல் நீ நடந்து வரவேண்டும்
அந்த திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்…
திருமகளும் உன் அழகைப் பெறவேண்டும்


12 comments:

  1. அருமையான பாடல்,நினைவு படுத்தி அதனை கேட்கும் சந்தர்ப்பமும் அமைத்த்மைக்கு மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. நல்லா பாடல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. @@ ஆசியா உமர்: அருமையான இந்த பாடலை நீங்களும் ரசித்தீர்களா? மிக்க நன்றி.

    @@ உயிரோடை: வருகைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. ஊர்ல கஸ்துரி ன்னு ஒரு பொண்ணைப் பார்த்து நண்பன் ஒருத்தன் இந்தப் பாட்டை பாடிட்டான்... அப்புறம் அவன் பட்ட பாடு... ( நம்புங்க.. நண்பன் தாங்க... ;-) ) ;-)

    ReplyDelete
  5. பார்த்தேன், படித்தேன், கேட்டேன், ரஸித்தேன்.

    ReplyDelete
  6. நல்லப் பாடல் வெங்கட்

    ReplyDelete
  7. வந்தேன் .... பார்த்தேன் .....கேட்டேன்..... ரசித்தேன் .........தேன் ........ தெவிட்டாத தேன் இசை. அருமையான் பாடல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. @@ RVS: நம்பிட்டேன்! :) வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.

    @@ வை.கோபாலகிருஷ்ணன்: தேன்..தேன்.தேன்…தேன்… நான்கிற்கும் நன்றி.

    @@ எல்.கே.: ரசித்தமைக்கு நன்றி.

    @@ நிலாமதி: ரசித்தமைக்கு நன்றி நிலாமதி.

    @@ டக்கால்டி: மிக்க நன்றி!

    ReplyDelete
  9. என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த பாடலை பாடியது ஜெயச்சந்திரன். ஜேசுதாஸ் அல்ல.

    ReplyDelete
  10. ஜேசுதாஸ் அவர்கள் தான்

    ReplyDelete
  11. இன்று
    சமண தமிழ் சங்க விழா நடைபெற்றது.
    இந்த பாடலின் ஆசிரியர் திரு.முத்துலிங்கம் வந்திருந்தார். என்னேயொரு அடக்கமான அற்புதமான மனிதர் இவர்.
    மிக சரளமாக தமிழ்
    பல திரைப்படங்களிலும் பிரபலமான பாடல்கள்
    கொஞ்சமும் ஆணவம் இல்லாத மனிதராக இருந்தார்.

    சிறிது நேரம் அவருடன் பேச வாய்ப்பு கிடைத்தது.

    ReplyDelete