Thursday 30 December 2010

அருணமலை குரு ரமணா


ரமண மகரிஷியின் 131-வது பிறந்த நாளான இன்று [30.12.2010] இளையராஜாவின் மனதிற்கு இதமளிக்கும் குரலில் ஒரு அருமையான பாடல்.  இந்த பாடல் ”ராஜாவின் ரமணமாலை” என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது.  இனிய காலைப் பொழுதில் அமைதியான சூழலில் மெல்லிய ஒலியில் இப்பாடலை கேட்க ஆனந்தமாய் இருக்கும்.  நான் ரசித்த இந்தப் பாடலின் காணொளியும், பாடல் வரிகளும் உங்களுக்கும் பகிர்கிறேன்.  பாடலை Youtube-இல் தரவேற்றம் செய்து இருக்கும் YOVAN1977 என்ற நண்பருக்கு நன்றி.




அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்

அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா

தனித்திருக்கும் தாகம் கொண்டேன் தயவும் உனக்கு இல்லையோ
     பனித்தவிழி நீரும் எந்தன் நிலையைக் கூறவில்லையோ
இனியும் காலம் தாழ்த்தாமல் கனிவாம் பார்வை தரவேண்டும்
     பெரிதாம் பிறவிநோய் தீர்த்து இனிபிறவா வரமும் பெறவேண்டும்
அந்தம் கடந்த ஆதியே உனைச் சொந்தம் என்று பாடினேன்
     அச்சம் தோற்றும் பூமியில் வினை மிச்சம் தொலைய நாடினேன்
     கோடிக்கோடி அடியவரில் நான் தான் கடைக்கோடி ஐயா

அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா

உன்பெயரை ஓதும் யாரும் உயர்ந்த ஓர் பிறவியே
     தம்துயரைத் தீர்க்க எமக்கு கிடைத்த ஓர் கருவியே
உன்னைத் தொழுதல் பெரும்பேறு செய்வேன் என்ன கைமாறு
     ஐயன் அருளை பெருமாறு செய்தாய் அது என் அருட்பேறு
உன் கடனைத் தீர்க்கும் வழி ஒன்றும் நான் காணா நிலையும் மாறுமோ
     என் உடலைத் தீபத் திரியாக்கி அதை எரித்தால் கூடப் போதுமோ
என் பிதற்றல் பிள்ளை மொழியல்ல ரமணன் விளக்கின் ஒளியன்றோ

     அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
மனது ஒன்று இருக்கிறதே எனது என்று தவிக்கிறதே
எனது மனம் அழிந்திடவே அருள் புரிவாய் அருள் புரிவாய்
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா
அருணமலை குரு ரமணா கருணை அருள் விழிவதனா



Saturday 25 December 2010

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

கல்யாணப் பாடல்கள் பல உண்டு.  அந்தப் பாடல்களில் மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்ற “சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்” என்ற பாடலின் வரிகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். சம்மந்தியா இல்லை சம்பந்தியா?  விஜய் டீவியில் ஒரு நாள் தேச மங்கையர்க்கரசியின் மீனாக்ஷி திருமண வைபவத்தினைப் பற்றிய சொற்பொழிவில் ”சம்பந்தி” என்பதுதான் சரி எனச் சொல்லி அதற்கு அருமையான விளக்கமும் சொன்னார்.  சமஸ்கிருதத்தில் ”சம்” என்றால் ”நல்ல”; ”பந்தி” என்றால் ”பந்தம், உறவு” எனவும் பொருளாம்.  சம்மந்தி என்று சொல்லும் போது பொருளே மாறி விடுகிறது.  சம் என்றால் நல்ல, மந்தி என்றால் குரங்கு, ஆகவே சம்மந்தி என்றால் நல்ல குரங்கு என்று ஆகிவிடுகிறது எனச் சொன்னார்.  இந்தப் பாடலில் மாம்பலம் சகோதரிகளும் சம்மந்தி என்றே பாடுகின்றனர்.  தமிழ் அறிந்த அறிஞர்கள் சம்மந்தியா, சம்பந்தியா என்று சொல்லுங்களேன்….  Youtube-இல் இப்பாடலை தரவேற்றம் செய்திருக்கும் ROOCHISBLOG என்ற நண்பருக்கு நன்றி.

 
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
     எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
எங்கள் சம்மந்தி
ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
            எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

Wednesday 22 December 2010

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

நான் சிறு வயதாக இருக்கும்போது, பக்கத்து வீட்டு குழந்தை அக்க்ஷய் பெரும்பாலான நேரங்களில் எங்கள் வீட்டில் தான் இருப்பான்.  என் அம்மா, இந்த பாடலை அவனைத் தூங்க வைக்க அடிக்கடிப் பாடுவார்.  நல்ல தாலாட்டு. சிறுவயதிலேயே அடிக்கடி கேட்டதால் நன்றாக நினைவிலிருக்கும் இப்பாடல் இடம் பெற்ற படம் – வண்ணக்கிளி.  பாடியவர்: பி. சுசீலா.  எல்லோரும் பி. சுசீலா ஆகிவிடமுடியுமா, அதனால நான் என் குழந்தை சின்னதாய் இருக்கும் போது பேசி[!]ய பாடலும் இதுதான்.   நான் ரசித்த பாடல் இதோ உங்களுக்கும் காணொளியாய்.

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
அப்போ…  கலகலன்னு சிரிச்சுகிட்டு என்ன பாரம்மா

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு
கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
ஹூஹூம் கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யா பழம் பறிச்சு தாரேன் அழுகக்கூடாது

சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா

Monday 20 December 2010

பட்டு வண்ணச் சேலைக்காரி…

ரஜினிகாந்த், அம்பிகா-ராதா சகோதரிகளுடன் சேர்ந்து நடித்த ”எங்கேயோ கேட்ட குரல்” என்ற நல்லதொரு படத்திலிருந்து இந்த பாட்டு.  கிராமத்துக் காட்சிகளுடன் அம்பிகாவின் நிழலான தோற்றம் தெரிய அவரைப் பார்த்து பாடுவது போன்ற பாடல் – ரஜினியின் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.  இசை – இளையராஜா.  குரல் – மலேசியா வாசுதேவன்.  ரஜினியின் மாறுபட்ட படங்களில் ஒன்று – பட்டு வண்ணச் சேலைக்காரி - எங்கேயோ கேட்ட குரலாய்.    





பட்டு வண்ணச் சேலைக்காரி…
எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி.. ஹோய்.
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…

பட்டு வண்ணச் சேலைக்காரி…
எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…

பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு...

பூவாய் மலர்ந்த முகத்தின் அழகு
தேனாய் வளர்ந்த அகத்தின் அழகு
பார்த்தால் இனிக்கின்ற பருவம்
     பாலில் மிதக்கின்ற உருவம்
மாலை வெய்யில் பழகும்
     மேனி கண்ட மயக்கம்
வா தென்றலே சொர்க்கத்தின் பக்கத்தில் வா…
பட்டு வண்ணச் சேலைக்காரி…

காலம் கனிந்து வளரும் உறவு
     மேளம் முழங்க தொடரும் உறவு
தாய்மை கொடுக்கின்ற அம்சம்
     வாழை வளர்க்கின்ற வம்சம்
வாழுகின்ற வரைக்கும் பாசம் தந்து தழைக்கும்
வா சொந்தமே உள்ளத்தில் என்றென்றும் வா…

பட்டு வண்ணச் சேலைக்காரி…
எனைத் தொட்டு வந்த சொந்தக்காரி..
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…
ஒரு பெண்ணிடத்தில் என்ன என்ன பொறுமை…
     அவள் புன்னகையில் தொட்டில் கட்டும் இளமை…



Thursday 16 December 2010

ரசித்த பாடல் - குறையொன்றுமில்லை




ரசித்த பாடல் என்ற இப்புதியதொரு வலைப்பூவை இன்று தொடங்கியிருக்கிறேன்.  இதில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் ரசித்த, பலராலும் ரசிக்கப்பட்ட பாடல் வரிகள், மற்றும் பாடலின் காணொளி ஆகியவற்றை பதிய எண்ணியிருக்கிறேன்.  ரசிக்கும் பாடல்களை ஒரு தொகுப்பாக வைக்க வசதியாய் இருக்கும் என்று எண்ணத்தினால் இதைத் தொடங்கினேன்.  முதல் பாடலாக ராஜாஜி இயற்றி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாவினால் அற்புதமாகப் பாடப்பெற்ற “குறையொன்றுமில்லை பாடல் வரிகள் மற்றும் காணொளியுடன்.  நான் ரசித்த இந்த பாடலை நீங்களும் ரசிக்க ஏதுவாய் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.





பாடல் இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி
ராகம்: ராகமாலிகை [சிவரஞ்சனி, காபி, சிந்துபைரவி ராகங்கள்]

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா