Friday 1 July 2011

ஈரமான ரோஜாவே




இளமைக்காலங்கள் படத்தில் வரும் இந்தப் பாடல் எனக்குப் பிடிக்கும். முழு பாடலிலும் கொட்டும் மழையிலேயே மோகனை விட்டு விட்டார்கள்... பாவம். கடைசியில் வரும் குழந்தையில் குரலாக எஸ். ஜானகி அவர்கள் பாடியிருப்பது எவ்வளவு பொருத்தம். நான் ரசித்த பாடல் இதோ உங்களுக்காய்...

பாடல் பற்றிய விவரங்கள்:

படம்: இளமைக் காலங்கள்.
பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ், எஸ். ஜானகி.
நடிகர்கள்: மோகன், சசிகலா.
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: வைரமுத்து.
வெளியான வருடம்: 1983

பாடலின் காணொளி:



பாடல் வரிகள்:

ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே

ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்
என்னைப் பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டுப் போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லை என்றால் ஒரு சாபமிடு
பொன்னாரமே……
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து

ஈரமான ரோஜாவே
என்னைப் பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம்
போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே

நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை..
என் காதலி………
உன் போல என்னாசை தூங்காது ராணி
கண்ணீரில் தள்ளாடுதே தோணி

ஈரமான ரோஜாவே
ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே

11 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த அருமையான பாடல். நன்றி.
    Voted 2 to 3 in Indli

    ReplyDelete
  2. அருமையான பாடல். கடைசியில் பாட்டி பாடுவது எதிர்பாராத திருப்பம்.

    ReplyDelete
  3. மனதுக்கிசைந்த பாடல் மீண்டும் கேட்க
    செய்தமக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. இந்த பகிர்வினை படித்து, கருத்து அளித்த அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete
  5. அருமையான பாடல் .. எபொழுது வேண்டுமானாலும் ரசிக்கலாம்


    வலைசரத்தில் இன்று

    வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

    ReplyDelete
  6. அருமையான பாடல்

    ReplyDelete
  7. @ என் ராஜபாட்டை ராஜா: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே...

    # மாலதி: ரசித்தமைக்கு மிக்க நன்றி சகோ...

    ReplyDelete
  8. என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
    கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை..

    ReplyDelete
  9. @ மாய உலகம்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  10. பாஸ்........ சூப்பர் பாடல்...

    எனக்கு மிகவும் பிடித்த இனிய பாடல்களில் இந்த பாடலுக்கும் ஒரு இடமுண்டு...

    நேரம் கூடி வந்த வேளை
    நீ நெஞ்சை மூடி வைத்த கோழை

    வாவ்... அருமையான வரிகள்...

    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  11. @ R. கோபி: தங்களது வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபி...

    ReplyDelete