ரசித்த பாடல் வலைப்பூவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பாடலோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் 1976 ஆம் வருடம் வெளிவந்த பத்ரகாளி. இளையராஜா அவர்களின் இசையில் கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பி. சுசீலா அவர்களால் பாடப்பெற்ற இந்த நல்ல பாடலை எழுதியவர் வாலி. படத்தில் நடித்தவர்கள் சிவக்குமார் மற்றும் ராணி சந்திரா.
பாடலைக் கேட்க:
Kannan Oru Kaikkuzhandhai | Online Karaoke
பாடல் வரிகள்:
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ……
மைவிழியே தாலேலோ……
மாதவனே தாலேலோ…….
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை…..
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
உன் மடியில் நானுறங்க
கண்ணிரண்டும் தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளையிது
உன்னருகில் நானிருந்தால்
ஆனந்தத்தின் எல்லையது
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
மஞ்சள் கொண்டு நீராடி
மைக்குழலில் பூச்சூடி
வஞ்சிமகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக் கூடுமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூங்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதை
கொண்டு செல்லும் என் மனதை
கையிரண்டில் நானெடுத்து
பாடுகின்றேன் ஆராரோ……
மைவிழியே தாலேலோ……
மாதவனே தாலேலோ…….
ஆராரிரோ……..ஆராரிரோ…….. ஆராரிரோ………. ஆராரிரோ……. ஆராரிரோ
கோகுலஷ்டமியில் பாடல் இன்னும் ரசிக்கிறது. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>
ReplyDeleteஇது மிகவும் அழகான பாடல். கேட்க இனிமையான பாடல்.
ReplyDelete//ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள்வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா//
மிக அருமையான வரிகள்.
[முதல் முறை படம் பார்க்கும் போது கதை மிகவும் சோகமாக இருந்ததில், நான் கண் க்லங்கி விட்டேன்]
ஸ்ரீஜயந்திக்கு ஏற்ற பாடல் தான். பாரட்டுக்கள்.
3 to 4 in indli-vgk
சிச்சுவேசன் சாங்கா? :) எனக்கும் பிடித்த பாடல்..:)
ReplyDeleteகண்ணன் என்றுமே ஓர் கவிதை
ReplyDeleteகண்கள் பெற்ற தவமே இக்குழந்தை.
வானளவும் பணம் இருந்தும்
வாராத மனவமைதி
வந்திடுமே அக்கணமே = செல்வன்
வந்துவிட்டால் வீட்டினிலே
கண்ணனைப் பாடுவோம்.
காலமெல்லாம் துயரறுப்போம்.
சுப்பு ரத்தினம்.
கேக்க இனிமையான பாடல்..
ReplyDeleteஇனிமையான பாடல்..
ReplyDeleteமிக இனிமை. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteOne of the best hits of Ilayaraja! Sweet melody!
ReplyDeleteபள்ளிக்கு செல்வதற்கு அதிகாலை வேளையில்
ReplyDeleteநான் அவசரமாய் வெளிக்கிடும்போது .அதிகமாக
என் காதுகளில் விழுந்து மனதைக் கவர்ந்த பாடல் இது .அருமையான இந்தப் பாடலின்மூலம் என் கடந்தகாலத்தை நினைத்து மகிழவைத்த தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் ....
வாங்க இராஜராஜேஸ்வரி,
ReplyDeleteநன்றிங்க.
வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
நன்றி சார்.
வாங்க முத்துலெட்சுமி,
நன்றிங்க.
வாங்க சுப்பு ரத்தினம் சார்,
நன்றி சார்.
வாங்க அமைதிச்சாரல்,
நன்றிங்க.
வாங்க மாலதி,
நன்றிங்க.
வாங்க லக்ஷ்மிம்மா,
நன்றி.
வாங்க கே.பி.ஜனா சார்,
நன்றி சார்.
வாங்க அம்பாளடியாள்,
நன்றிங்க.
இந்த பாடலுக்கு இண்ட்லியில் வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடித்த பாடல் பகிரிவுக்கு நன்றி
ReplyDeleteவாங்க ராக்கெட் ராஜா,
ReplyDeleteநன்றிங்க.
எனக்குப் பிடித்த பாடல்.
ReplyDeleteதொடர்ந்து என் வலையில் இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..
ReplyDeletehttp://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html
நன்றி.
வாங்க முனைவர்.இரா.குணசீலன்,
ReplyDeleteநன்றிங்க.