படம்: மூன்றாம் பிறை
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
நடிகர்கள்: கமல்ஹாசன், ஸ்ரீதேவி
பாடல் வரிகள்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1983
இன்று கமலஹாசன் அவர்களுடைய பிறந்த நாள். அதை முன்னிட்டு அவருடைய மூன்றாம் பிறை படத்திலிருந்து நான் ரசித்த பாடலாய் கண்ணே கலைமானே பாடல் உங்களுடன் பகிர்கிறேன். பாடியவர் கானகந்தர்வன் கே.ஜே.யேசுதாஸ். பாடலை கேட்டு நீங்களும் ரசிங்களேன்.
பாடல் கேட்க:
பாடல் வரிகள்:
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
கண்ணே கலைமானே
கன்னி மயிலென
கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
ஊமை என்றால் ஒரு வகை அமைதி
ஏழை என்றால் அதிலொரு அமைதி
நீயோ கிளிப் பேடு பண்பாடும் ஆனந்த குயில் பேடு
ஏனோ தெய்வம் சதி செய்தது
பேதை போல விதி செய்தது
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…
காதல் கொண்டேன் கனவினை வளர்த்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைப்பேன்
உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
நீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி
கண்ணே கலைமானே
கன்னி மயிலென கண்டேன்
உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத்தான் கேட்கிறேன்
ராரிரோ... ஓராரிரோ…
ராரிரோ… ஓராரிரோ…
ராரிரோ.. ஓராரிரோ…
ராரிரோ.. ஓராரிரோ…
எப்போதும் கேட்கக் கூடிய இனிமையான இடைக்காலப் பாடல் கண்ணே கலை மானே.......
ReplyDeleteபாடல் வரிகள் இசை ஒளிப்பதிவு நடிப்பு என
ReplyDeleteஅத்தனையும் மிகச் சரியாகச் சேர்ந்த அருமையான பாடல்
கமல ஹாசன் அவர்களில் பிறந்த நாளில்
பதிவிட்டுக் கொடுத்தமைக்கு நன்றி
வாழ்த்துக்கள்
மிகவும் அருமையான படம். அருமையான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். பகிர்வுக்கு மிக்க நன்றி.
ReplyDelete@ ஈழவன்: தங்களது முதல் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே....
ReplyDelete@ ரமணி: கமலின் படங்களில் எனக்கும் பிடித்த படங்களில் ஒன்று....
ReplyDeleteதங்களது தொடர் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
@ வை. கோபாலகிருஷ்ணன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ReplyDeleteமிகவும் அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி
ReplyDelete@ லக்ஷ்மி: தங்களது வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா...
ReplyDelete//ஏனோ தெய்வம் சதி செய்தது
ReplyDeleteபேதை போல விதி செய்தது//
அது “பேதை கோலம் விதி செய்தது” என்று நினைக்கிறேன்
@ வேங்கட ஸ்ரீனிவாசன்: வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சீனு.
ReplyDeleteஅருமையான பாடல் தேர்வு மிக்க நன்றி பகிர்வுக்கு ........
ReplyDelete@ அம்பாளடியாள்: தங்களது வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.
ReplyDelete"உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே
ReplyDeleteநீ இல்லாமல் எது நிம்மதி நீதான் என்றும் என் சன்னிதி "
அருமையான வரிகள்
செம
ReplyDeleteசெம
ReplyDelete