Monday, 21 November 2011

தொடு தொடுவெனவே....

படம் – துள்ளாத மனமும் துள்ளும்
பாடல் வரிகள் – வைரமுத்து
இசையமைத்தவர் – எஸ்.ஏ.ராஜ்குமார்
பாடியவர்கள் – ஹரிஹரன், சித்ரா
வெளிவந்த வருடம் - 1999.

இந்த பாடலின் வரிகளுக்காகவும், ஹரிஹரனின் குரலுக்காகவும் நான் ரசித்த பாடல் இது.....  நீங்களும் ரசியுங்களேன்....

பாடலைப் பார்க்க:



பாடல் வரிகள்:

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே
இந்த ஆலயம் உனக்காக

வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்கனம் காப்பாய்
கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்….

இந்த பூமியே தீர்ந்து போய்விடில்
என்னை எங்கு சேர்ப்பாய்
நட்சத்திரங்களை தூசி தட்டி
நான் நல்ல வீடு செய்வேன்
நட்சத்திரங்களின் சூட்டில் நான்
உருகி போய் விடில் என் செய்வாய்
உருகிய துளிகளை ஒன்றாக்கி
என் உயிர் தந்தே உயிர் தருவேன்
ஹேய் ராஜா! இது மெய் தானா
ஹே பெண்ணே! தினம் நீ செல்லும் பாதையில்
முள் இருந்தால் நான் பாய் விரிப்பேன் என்னை
நான் நம்புகிறேன் உன்னை.

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்…

நீச்சல் குளம் இருக்கு நீரும் இல்லை
இதில் எங்கு நீச்சல் அடிக்க
அத்தர் கொண்டு அதை நிரப்ப வேண்டும்
இந்த அல்லிராணி குளிக்க
இந்த ரீதியில் அன்பு செய்தால்
என்னவாகுமோ என் பாடு
காற்று வந்து உன் குழல் கலைத்தால்
கைது செய்வதென ஏற்பாடு
பெண் நெஞ்சை அன்பால் வென்றால்
ஹே ராணி! அந்த இந்திர லோகத்தில்
நான் கொண்டு தருவேன்
நாளொரு பூ வீதம் உன் அன்பு அது போதும்

தொடு தொடுவெனவே வானவில் என்னை
தூரத்தில் அழைக்கின்ற நேரம்
விடு விடு வெனவே வாலிப மனது
விண்வெளி விண்வெளி ஏறும்

மன்னவா ஒரு கோயில் போல்
இந்த மாளிகை எதற்காக
தேவியே என் ஜீவனே இந்த ஆலயம் உனக்காக
வானில் ஒரு புயல் மழை வந்தால்
அழகே என்னை எங்கனம் காப்பாய்

கண்ணே உன்னை என் கண்ணில் வைத்து
இமைகள் என்னும் கதவுகள் அடைப்பேன்
சாத்தியமாகுமா? நான் சத்தியம் செய்யவா…..


4 comments:

  1. ஹரிஹரன் குரலில்கேட்க எல்லாபாடல்களுமே சுகமான அனுபவம்தான் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

    ReplyDelete
  2. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். உங்களின் இரண்டு தளத்தைப் போலவே இந்த தளமும் அருமை. எனக்கு பிடித்த பாடல்கள். வாழ்த்துக்கள். நன்றி..!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  3. நல்ல ரசிக்க முடிகிற வ்ரிகள் .

    ReplyDelete
  4. எனக்கு பிடித்த பாடல் இது...
    வாழ்த்துகள்...

    ReplyDelete