Tuesday, 27 March 2012

தமிழுக்கும் அமுதென்று பேர்…50வது பாடல்


பாரதிதாசன் அவர்களின் வரிகளில் தமிழின் சிறப்பை எடுத்து சொல்லும் இந்த அழகிய பாடல், ரசித்த பாடல் வலைப்பூவின் 50 வது பாடல். இதுவரை இந்த வலைப்பூவுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றி. இந்தப் பாடலை நீங்களும் பார்த்தும், கேட்டும் ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் – பஞ்சவர்ணக்கிளி
பாடியவர் – பி.சுசீலா
இசை – எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி
பாடல் வரிகள் – பாரதிதாசன்
படம் வெளிவந்த வருடம் – 1965


தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழுக்கு நிலவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின்
விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணம் என்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு
நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்
தமிழுக்கு மதுவென்று பேர்
இன்பத் தமிழ் எங்கள் உரிமைச் செம்
பயிருக்கு வேர்… பயிருக்கு வேர்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்
இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க
புலவர்க்கு வேல்… புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்… சுடர் தந்த தேன்

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்
இன்பத் தமிழ் எங்கள் அசதிக்கு
சுடர் தந்த தேன்… சுடர் தந்த தேன்…
சுடர் தந்த தேன்

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்
இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு
வைரத்தின் வாள்… வைரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்
இன்பத் தமிழ் எங்கள் வளம் மிக்க
உளமுற்ற தீ

தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள்
உயிருக்கு நேர்… உயிருக்கு நேர்
தமிழுக்கும் அமுதென்று பேர்


17 comments:

  1. அருமையான அமுதான பாடல் பகிர்வுக்குப் பராட்டுக்கள்..

    ReplyDelete
  2. அமுதம் போன்ற இனிமையான மிகவும் அழகிய அருமையான பாடல்.
    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. பாரதிதாசனை நினைவு கூறவைத்த பதிவு.. அருமை..

    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  4. மறக்க முடியுமா அந்தப் பாட்டை?

    ReplyDelete
  5. Theninum Iniya suseela kuralil arumaiyaana pagirvu. Vazhangiyamaikku nanri, Kovai Arasiye!!

    natarajan.vk

    ReplyDelete
  6. வாழ்த்துகள். தொடருங்கள்...!

    ReplyDelete
  7. அந்தப்பாட்டு மறக்க முடியுமா? இனிமையான பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  8. இந்த பாடலை ரசித்து பின்னூட்டமிட்ட

    இராஜராஜேஸ்வரி மேடம்
    வை.கோபாலகிருஷ்ணன் சார்
    கவிதை காதலன்
    கே.பி.ஜனா சார்
    V.K.நடராஜன் அவர்கள்
    அமைதி அப்பா
    லஷ்மிம்மா
    அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  9. மிக மிக மிக மிகப் பிடித்த பாடல்.முதல் வருகையிலேயே மனம் கவர்ந்து விட்டது உங்கள் தளம்.நன்றி !

    ReplyDelete
  10. இந்த வலையில் பாடல்களும் அதன் வரிகளும் இடம் பெறுவது போன்று அதனை டவுன்லோட் செய்து கொள்வது போல் ஏதேனும் லிங்க் தர இயலுமா? அப்படி செய்வது பல பேருக்கு பாடலை எளிதில் டவுன்லோட் செய்து கொள்ள ஏதுவாக இருக்குமே.அதே போல் பாடல் பற்றிய விவரங்களில் அதன் ராகத்தின் பெயர் பற்றிய குறிப்பும் போட்டால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றுகிறது.இது ஒரு யோசனைதான்.தவறாக எண்ண வேண்டாம்.

    ReplyDelete
  11. தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பி சுசீலா அவர்கள் ஆரம்பிக்கையிலேயே பாடல் அமுதமாக காதில் கசியும்.பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  12. @ஹேமா: முதல் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிங்க.

    @ராஜி: நீங்கள் சொல்வது சரி தான். லவுன்லோட் லிங்க் தர முயற்சி செய்கிறேன். ராகங்களை பற்றி அவ்வளவு ஞானம் எனக்கு கிடையாது. இருந்தாலும் தகவலை திரட்டி தர முயற்சி செய்கிறேன். யோசனைகளுக்கும், கருத்துக்களுக்கும் நன்றிப்பா.

    ReplyDelete
  13. சுடர் தந்த தேன்… சுடர் தந்த தேன்…
    சுடர் தந்த தேன்//தேனினும் இனிய மொழி அல்லவா நம் தமிழ் மொழி . அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி .

    ReplyDelete
  14. வாங்க சசிகலா,

    தங்களின் முதல் வருகைக்கும், பாடலை ரசித்ததற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  15. மிக மிக மிக அருமையான பாடல்....இதே படத்தில் இந்தப் பாடலைத் தழுவி 'அவளுக்கும் தமிழ் என்று பேர்' என்ற டி எம் எஸ் ஸின் பாடலும் ரசிக்கக் கூடியது.

    ReplyDelete
  16. வாங்க ஸ்ரீராம்,

    ஆமாம். அந்தப் பாடலும் நன்றாக இருக்கும்.

    தங்களின் முதல் வருகைக்கும், பாடலை ரசித்ததற்கும் நன்றிங்க.

    ReplyDelete
  17. நமது தாய் மொழியாம் தமிழ் மொழியை பற்றி பதிவு எழுதிய உங்களுக்கு என் நன்றிகள்

    ReplyDelete