இந்த பாடல் ஒரு இனிமையான, அருமையான
பாடல். எஸ்.பி.பி அவர்களின் குரலிலும், ஜானகியம்மாவின் குரலிலும் மேலும் இனிக்கிறது.
இளையராஜா அவர்களின் இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம். பிரமாதமாக உள்ளது. நான் கேட்டு
ரசித்த இந்த பாடலை நீங்களும் ரசியுங்களேன்.
மீண்டும் ஒரு நல்ல பாடலுடன் சந்திக்கும்
வரை,
ஆதி வெங்கட்.
படம் – உனக்காகவே வாழ்கிறேன்
இசை – இளையராஜா
பாடியவர்கள் – எஸ்.பி.பாலசுப்ரமணியம்,
எஸ்.ஜானகி
படம் வெளிவந்த வருடம் – 1986
நடித்தவர்கள் – சிவக்குமார், நதியா
கண்ணா….கண்ணா…. கண்ணா….
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
கண்ணீர் இன்னும் ஓயவில்லை
கன்னங்களும் காயவில்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர்க் குயில் பாடுகிறேன் வா
ஏன் இந்த காதல், என்னும் எண்ணம் தடை போடுமா
என் பாடல் கேட்ட பின்னும், இன்னும் பிடிவாதமா
என்ன நான் சொல்வது, இன்று வந்த சோதனை
மௌனமே கொல்வதால், தாங்கவில்லை வேதனை
உன்னைத் தேடி வந்தேன், உண்மை சொல்ல வேண்டும்
இந்த சோகம் கொள்ள என்ன காரணம்?
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
கண்ணீர் குயில் பாடுகிறேன் வா
கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகம் இல்லை
கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
சோகத்தின் பாஷை என்ன சொன்னால், அது தீருமா
கங்கை நீர் காயக்கூடும் கண்ணீர், அது காயுமா
சோதனை நேரலாம் பாசம் என்ன போகுமா
மேகங்கள் போய்விடும், வானம் என்ன போகுமா
ஈரமுள்ள கண்ணில் தூக்கம் இல்லை பெண்ணே
தோகை வந்த பின்னே சோகமில்லையே
கண்ணே உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
உன்னோடு தான் வாழ்க்கை
உள்ளே ஒரு வேட்கை
காதல் என்றும் தீர்வதில்லை
கண்ணே இனி சோகம் இல்லை
கண்ணா உனைத் தேடுகிறேன் வா
காதல் குயில் பாடுகிறேன் வா
அருமையான அழகான பாடல் - பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஇனிமையான பாடல் ஆயிற்றே!
ReplyDeleteஇனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஇனிமையான, அருமையான பாடல். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...
ReplyDeleteஉங்கள் பாடல் பகிர்வும்,சகோ பகிர்வைப் போல சூப்பர் ஆதி.
ReplyDeleteபாடலை ரசித்து கருத்துக்களை தெரிவித்த அன்புள்ளங்கள்,
ReplyDeleteவை.கோபாலகிருஷ்ணன் சார்
கே.பி.ஜனா சார்
லஷ்மிம்மா
இராஜராஜேஸ்வரி மேடம்
ஆசியா உமர் அவர்கள்
அனைவருக்கும் நன்றிகள். உங்களின் தொடரும் ஆதரவுக்கும் நன்றி.
கேள்விப்படாத பாடல். pleasing. நன்றி.
ReplyDelete