Monday, 6 August 2012

எங்கே நிம்மதி எங்கே நிம்மதி….




ரசித்த பாடல் வலைப்பூவில் இன்று வெளியிடும் பாடல் “எங்கே நிம்மதி எங்கே நிம்மதி” என்ற பாடல். புதிய பறவை படத்தில் சிவாஜி கணேசன் ”ஓவராக” நடித்த பாடல். விஸ்வநாதன் – ராமமூர்த்தி பலவித இசைக்கருவிகளை பயன்படுத்தி இசையில் கலக்கி இருப்பார்கள். அவருடைய நடிப்புக்காக பிடிக்காவிட்டாலும், பாடலின் வரிகளுக்காகவும், இசைக்காகவும் நிச்சயம் பிடிக்கும். உங்களுக்கும் தான். இதோ “எங்கே நிம்மதி… எங்கே நிம்மதி..” பாடல் உங்களுக்காக!

அடுத்த ரசித்த பாடலுடன் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



பாடல் இடம்பெற்ற திரைப்படம்:புதிய பறவை.
பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன்.
பாடலுக்கு இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கண்ணதாசன்.
படம் வெளி வந்த வருடம்: 1964.

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்


எங்கே மனிதர் யாரும் இல்லையோ
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது

என்ன நினைத்து என்னைப் படைத்தான் இறைவன் என்பவனே
கண்ணைப் படைத்து பெண்ணை படைத்த இறைவன் கொடியவனே
ஓ...... இறைவன் கொடியவனே
எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்

பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே
பழைய பறவை போல ஒன்று பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை மறந்து போனதே

என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
ஓ... உறங்குவேன் தாயே...

எங்கே நிம்மதி.... எங்கே நிம்மதி.....
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்




8 comments:

  1. நடிப்பிற்கு எல்லையை வகுத்த நண்பருக்கு வணக்கம்...

    ReplyDelete
  2. எப்ப்ப எங்க கேட்டாலும் ரசிக்கமுடியும். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. ஆல் டைம் பேவரைட்... நன்றி சார்...

    ReplyDelete
  4. என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே
    இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே
    ஓ... உறங்குவேன் தாயே...ஃஃஃஃஃமனதை ஆர்க்கும ;வரிகள்.இந்த தலைமுறையில் கூட இந்த வரிகள் இதமாக இருக்கிறது.வாழ்த்துக்கள் இப்பதிவிற்காய்.

    ReplyDelete
  5. வலது புறம் தாங்கள் அமைத்துள்ள கடிகாரம் அழகாக இருக்கிறது, தங்கள் தொகுப்புகளை போலவே..

    நன்றி!!

    தொழிற்களம் உதவி ஆசிரியர் பணி

    ReplyDelete
  6. கருத்துரைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  7. இந்தப் பாட்டுக்கு ஓவர் ஏக்டிங் தான் பொருத்தம் என்று நினைக்கிறேன். ஓவர் ம்யூசிக் என்று யாருக்கும் தோன்றவில்லையோ?

    ReplyDelete
  8. சிவாஜி தொப்பை தான் பெரிய சங்கடம் பார்த்து ரசிப்பதற்கு.

    ReplyDelete