Thursday, 27 September 2012

தேவனின் கோவில் மூடிய நேரம்……..




இந்த பாடல் என் மனதுக்குள் சில நாட்களாக ரீங்காரமிட்டு கொண்டிருந்தது. இளையராஜாவின் இசையில் மனதை வருடும் அருமையான பாடல். இதை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்…
 


மீண்டும் சந்திப்போம்,
ஆதி வெங்கட்.

படத்தின் பெயர் – அறுவடை நாள்
பாடியவர்கள் – இளையராஜா, கே.எஸ்.சித்ரா
இசையமைத்தவர் – இளையராஜா
பாடல் வரிகள் – கங்கை அமரன்
படம் வெளிவந்த வருடம் – 1986

 
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி
நானொரு சோக சுமைதாங்கி
துன்பம் தாங்கும் இடிதாங்கி

பிரிந்தே வாழும் நதிக்கரை போல
தனித்தே வாழும் நாயகி
இணைவது எல்லாம் பிரிவதற்காக
இதயங்கள் எல்லாம் மறப்பதற்காக
மறந்தால் தானே நிம்மதி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே

ஒருவழிப் பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்
ஒருவழிப் பாதை என் பயணம்
மனதினில் ஏனோ பல சலனம்

கேட்டால் தருவேன் என்றவன் நீயே
கேட்டேன் ஒன்று தந்தாயா
ஆறுதல் தேடி அலையுது நெஞ்சம்
அழுதிட கண்ணில் நீருக்கு பஞ்சம்
நானோர் கண்ணீர் காதலி

தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே
இன்று என் ஜீவன் தேயுதே
என் மனம் ஏனோ சாயுதே
தேவனின் கோவில் மூடிய நேரம்
நான் என்ன கேட்பேன் தெய்வமே



5 comments:

  1. இளையராஜாவின் இசையில் மனதை வருடும் அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. மிகவும் இனிமையான பாடல்...

    நன்றி...

    ReplyDelete

  3. அப்போதும் இப்போதும் முதலில் இந்தப் பாடலில் கவர்வது இளையராஜாவின் ஆரம்ப வரிகள். அந்த வரிகள் பாடலாக்கப் பட்டிருக்கும் விதம். தொடர்வது 'சட்'டென மாறிய மூடில் இனிமையான சித்ராவின் குரல். நானும் மிகவும் ரசிக்கும், எனக்கும் பிடித்த பாடல்.

    ReplyDelete
  4. நல்ல படல்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. எனக்கு மிகவும் பிடித்த பாடல்! பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete