Thursday, 11 October 2012

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட……..


நான் ரசித்த பாடல்களில் இளையராஜா அவர்களின் இசையில் மனதுக்கு இதமான இந்த பாடல், உங்களுக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.

படம் – உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
பாடியவர்கள் – எஸ்.பி.பி, ஸ்வர்ணலதா
இசையமைத்தவர் – இளையராஜா
படம் வெளிவந்த வருடம் - 1992


என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
கண்ணன் ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி…. நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மன்னன் பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

சொந்தம் பந்தம் உன்னைத் தாலாட்டும் தருணம்
சொர்க்கம் சொர்க்கம் என்னை சீராட்ட வரணும்
பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்
பெண் மனசு காணாத இந்திர ஜாலத்தை
அள்ளித் தர தானாக வந்து விடு
என்னுயிரை தீயாக்கும் மன்மத பாணத்தை
கண்டு கொஞ்சம் காப்பாற்றி தந்து விடு
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி… நிதமும்

என்னைத் தொட்டு, நெஞ்சைத் தொட்டு
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி

மஞ்சள் மஞ்சள் கொஞ்சும் பொன்னான மலரே
ஊஞ்சல் ஊஞ்சல் தன்னில் தானாடும் நிலவே
மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கன்னல் கன்னல் மொழி நீ பாடு குயிலே
கட்டுக்குள்ள நிற்காது திரிந்த காளையை
கட்டி விட்டு கண் சிரிக்கும் சுந்தரியே
அக்கரையும் இக்கரையும் கடந்த வெள்ளத்தை
கட்டி அணைகட்டி வைத்த பைங்கிளியே
என்னில் நீயடி
உன்னில் நானடி
என்னில் நீயடி
உன்னில் நானடி
ஓ…. பைங்கிளி…..நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
நெஞ்சைத் தொட்டு பின்னிக் கொண்ட
நங்கை ஊரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி
அன்பே ஓடி வா
அன்பால் கூடவா
ஓ.. பைங்கிளி…. நிதமும்

என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
மங்கை பேரும் என்னடி
எனக்குச் சொல்லடி விஷயம் என்னடி



10 comments:

  1. பிடித்த பாடல் பகிர்விற்கு நன்றி! சந்தமும் நிறைந்த வரிகள்!

    ReplyDelete
  2. அருமையான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. மிக அருமையான அழகான எனக்கும் மிகவும் பிடித்ததோர் பாடல். பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. நானும் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று. எஸ் பி பியின் குரலில் இருக்கும் குழைவு அருமையாக இருக்கும். உடன் பாடியது ஸ்வர்ணலதாவா ? கார்த்திக்கும் அழகு. அந்த நடிகை பெயர் என்ன?!

    ReplyDelete
  5. நாய‌கியின் அந்த‌த் துடிப்பும் துள்ள‌லும்,
    க‌விதைக்கு மேலும் அழ‌கி கோர்க்கிற‌து.

    ReplyDelete
  6. உண்மை சொல்லனும்னா இதுவரை இந்தப்பாடல் கேக்கவே கிடைத்ததில்லே இப்பதான் கேட்கிரேன் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. பிடித்த பாடல் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  8. மிகச் சிறப்பு.

    இத்தனை தரமான வரிகளை கொடுத்த

    பாடலாசிரியர் பிறைசூடனின் பெயரை குறிப்பிடலாம்.

    எப்போதும் பாடலாசிரியர் பெயரை இசையமைப்பாளருக்கு அடுத்த நிலையில் குறிப்பிடுவது நன்றாக இருக்கும்.

    நன்றி.

    ReplyDelete