Tuesday, 20 November 2012

சிறு பொன்மணி அசையும்……



கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் வரும் இந்த பாடல். எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. இளையராஜாவின் இசையிலும், அவரின் குரலிலும் அருமையானதொரு பாடல். நான் ரசித்த பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்களேன்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்.

படம்: கல்லுக்குள் ஈரம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: இளையராஜா, எஸ்.ஜானகி
படம் வெளிவந்த வருடம் - 1980


சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

விழியில் சுகம் பொழியும்
இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும்
இனி புலரும் பொழுதும்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்

தெளியாதது எண்ணம்
கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது
அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது
கிளி பாடுது உன் நினைவினில்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்

நதியும் முழு மதியும்
இரு இதயம்தனில் பதியும்
ரதியும் அதன் பதியும்
பெரும் சுகமே உதயம்

விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்

விதை ஊன்றிய நெஞ்சம்
விளைவானது மஞ்சம்
கதை பேசுது கவி பாடுது
கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம்
பயிரானது உன் நினைவுகள்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல
நானும் நீயும் சேர வேண்டும்

சிறு பொன்மணி அசையும்
அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்

6 comments:

  1. எனக்கு மிகவும் பிடித்த சந்தமுள்ள பாடல்! பகிர்விற்கு நன்றி! இது போன்று சங்கத்தில் பாடாத கவிதை, மெட்டி ஒலி காற்றோடு, பூமாலையே இரு தோள்சேர வா, பொன்னோவியம் கண்டேனம்மா போன்ற பாடல்களும் கேட்க மிக இனிமையானவை!

    ReplyDelete
  2. பிடித்த பாடல்... பாடல் வரிகளுக்கு நன்றி...

    ReplyDelete
  3. ரசித்த பாடல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. அருமையானதொரு இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. இந்த பாடலை கேட்டு ரசித்து கருத்துரையிட்டுள்ள,

    சேஷாத்ரி சார்
    திண்டுக்கல் தனபாலன் அவர்கள்
    லஷ்மிம்மா
    இராஜராஜேஸ்வரி மேடம்

    அனைவருக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete
  6. கல்லுக்குள் ஈரம் படத்தின் ஒரே அருமையான பாடல் இதுதான். சந்த வரிகளுக்கும், டியூனுக்கும் அருமையாக அமைந்த பாடல்.

    ReplyDelete