”கல்யாண அகதிகள்”
படத்தில் வரும் இந்தப் பாடலை சில நாட்களாக முணுமுணுத்துக் கொண்டே இருந்தேன். கே.பாலச்சந்தர்
அவர்களின் படம் இது. தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் எல்லாம் இந்தப் பாடலை கேட்கும் போது நினைவுக்கு
வரும். அப்போது அது தானே நமக்கான பொழுதுபோக்கு. நான் ரசித்த இந்தப் பாடலை நீங்களும்
கேட்டு ரசியுங்களேன்.
மீண்டும் வேறு ஒரு
பாடலுடன் சந்திக்கும் வரை,
ஆதி வெங்கட்.
படம் – கல்யாண அகதிகள்
பாடியவர்கள் – பி.சுசீலா
இசையமைத்தவர் –
வி.எஸ்.நரசிம்மன்
படம் வெளிவந்த வருடம்
- 1985
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடைகிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா... ஆஆஆஅ. அடடா இது தான் ஆலிங்கனம்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணில் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்... ஆஆஆஆ. விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
nice song..
ReplyDeleteஅருமையான பாடல். பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteசாரங்கா ராகத்தில் அமைந்த பாடல் என்று ஞாபகம். அடிக்கடி ஒளியும் ஒலியுமில் இடம்பெற்ற பாடல்.
ReplyDeleteபாடல் அருமை ;)
ReplyDeleteஅருமையான பாடல் அய்யா
ReplyDelete