பாடல்: மௌனமே
பார்வையால்
திரைப்படம்: கொடிமலர்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1966
திரைப்படம்: கொடிமலர்
பாடியவர்: பி.பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1966
நடிகர்கள்: முத்துராமன், விஜயகுமாரி, நாகேஷ்.
ரசித்த பாடல் வலைப்பூவில் பாடல்கள் பகிர்ந்து நீண்ட நாட்கள் ஆகின்றன. சக
வலைப்பதிவர் ஸ்ரவாணி "ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்" பாடல் பகிர்வில் "மௌனமே பார்வையால் ஒரு பாட்டு" வேண்டும் சார். போடுவீர்களா?” என்று கேட்டிருந்தார். அதனால் இதோ நேயர் விருப்பமாக, கொடி மலர்
திரைப்படத்திலிருந்து பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய இந்த பாடல் உங்கள் ரசனைக்கு!
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தைப் பேச வேண்டும்
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்....
அல்லிக்கொடியே உந்தன் முல்லை இதழும் – தேன்
ஆறு போலப் பொங்கி வர வேண்டும் வரவேண்டும்....
அங்கம் தழுவும் வண்ணத் தங்க நகை போல் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் – என்னை
அள்ளிச் சூடிக்கொண்டு விட வேண்டும் ம்ம்ம்....
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும் மொழி
வேண்டும்
முத்துச் சரமே என் பக்கம் இருந்தால்
வேறென்ன வார்த்தை சொல்ல மொழி வேண்டும்
முன்னம் இருக்கும் இந்த சின்ன முகத்தில் பல
மொழிகள் பாடம் பெற வர வேண்டும் - பல
மொழிகள் பாடம் பெற வர
வேண்டும் ம்ம்ம்ம்..
மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்..
மீண்டும் வேறொரு பாடலுடன் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
எனக்கும் மிக மிகப் பிடித்த பாடல்!
ReplyDeleteஎனக்கும் கிகவும் பிடித்தபாடல்
ReplyDeleteகேட்டு ரசித்தேன்.
நன்றி.
என் வேண்டுகோளை ஏற்று பதிவிட்டதற்கு
ReplyDeleteமிக்க நன்றி . மிக ரசித்தேன்.
அருமையான பாடல் .. கேட்க கேட்க திகட்டாத பாடல்
ReplyDeleteஇன்று
ReplyDeleteஆச்சர்யம் ஆனால் உண்மை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்! பகிர்விற்கு நன்றி நண்பரே!
ReplyDeleteநம்மை தலையசைத்து தன்னிலை மறக்க செய்யும் பாடல்களில் இதுவும் ஓன்று அருமையான வரிகள் குரலும் நம்மை மயங்க வைக்கும் ..பதிவிற்கு நன்றி வெங்கட்
ReplyDeleteமௌனங்கள் பேசும்மொழி பாடலாய் மட்டுமல்ல.பலவாய் இங்கு,,,,/
ReplyDeleteநல்ல பாடல் நல்ல கூட்டணி.