Tuesday, 6 August 2013

என் கல்யாண வைபோகம் உன்னோடு தான்…..


ரசித்த பாடல் வலைப்பூவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களோடு நான்...

”அழகே உன்னை ஆராதிக்கிறேன்” படத்தில் வாணி ஜெயராம் அவர்களால் பாடப்பெற்ற இந்த பாடல் காலத்தால் அழிக்க முடியாத வாலி அவர்களின் வரிகளிலும், இளையராஜா அவர்களின் இசையிலும் தங்களின் பார்வைக்கு. நான் ரசித்த இந்த பாடலை நீங்களும் ரசியுங்கள்.

மீண்டும் வேறு ஒரு பாடலுடன் சந்திக்கும் வரை,

ஆதி வெங்கட்
திருவரங்கம். 


படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்: வாணி ஜெயராம்
பாடல் வரிகள்: கவிஞர் வாலி
படம் வெளிவந்த வருடம் - 1979



என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இளவேனிற் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்

உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சங்கீதம் தான்

என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடுதான்


6 comments:

  1. அழகான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. அருமையான பாடல் ஐயா. நிண்ட நாட்களுக்கப் பிறகு வாய்ப்பு தந்தமைக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  3. ;) அருமையான அழகான பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  4. எனக்கும் பிடித்த அருமையான பாடல்
    பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அழகான பாடல்... நன்று.

    ReplyDelete
  6. எனக்குப் பிடித்த இளையராஜா பாடல்களில் ஒன்று!

    ReplyDelete