Tuesday, 10 September 2013

இளைய நிலா பொழிகிறதே



ரசித்த பாடலில் நீண்ட நாட்களாக பதிவிட எண்ணி நினைத்து வெளியிடாமல் இருந்த பாடல் இதோ…. இசைஞானி இளையராஜாவின் இசையிலும் எஸ்.பி.பீயின் குரலிலும் வைரமுத்து அவர்களின் வரிகளிலும் அற்புதமான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல். கல்லூரி நாட்களில் இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்ட விதத்தை பற்றி என் ஆரம்ப கால பதிவு ஒன்றில் எழுதியுள்ளேன். இதோ அதன் சுட்டி இளைய நிலா பொழிகிறது

இந்தப் பாடலை நீங்களும் கேட்டு ரசியுங்கள்

மீண்டும் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

படம்பயணங்கள் முடிவதில்லை
பாடியவர்எஸ்.பி.பீ
இசைஇளையராஜா
பாடல் வரிகள்வைரமுத்து
படம் வெளிவந்த வருடம் – 1982
நடித்தவர்கள் - மோகன், பூர்ணிமா பாக்யராஜ்





இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே

இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே
இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே

வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும்வரை நடைபழகும்
வரும் வழியில் பனிமழையில் பருவநிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும்வரை நடைபழகும்
வானவீதியில் மேக ஊர்வலம் காணும்போதிலே ஆறுதல் தரும் 
பருவமகள் விழிகளிலே கனவு வரும்

இளைய நிலா பொழிகிறதே
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே 
இளைய நிலா பொழிகிறதே
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் 
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள்


இளைய நிலா பொழிகிறதே இதயம்வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்காணுமே விழாக்காணுமே வானமே 
இளைய நிலா பொழிகிறதே ….



14 comments:

  1. ரஸித்தேன். நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வை.கோ சார்,

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

      Delete
  2. என்றும் மகிழ்ச்சியால் இதயம் நனைக்கும் பாடல்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன்,

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

      Delete
  3. மறக்க முடியுமா இந்தப் பாட்டை?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கே.பி.ஜனா சார்,

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

      Delete
  4. Nalla paadal eppodhu kettalum inikum

    ReplyDelete
    Replies
    1. வாங்க லதா அக்கா,

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

      Delete
  5. விழாக்காணுமே வானமே --arumai

    ReplyDelete
    Replies
    1. வாங்க மேடம்,

      தங்களின் கருத்துக்களுக்கு நன்றி.

      Delete
  6. அது ஒரு இனிமையான இசைக்கூட்டணி சார்.ஆனால் நாம் கூட்டணி அற்ற மந்துடனும் கேட்கலாம்.மனம் அள்ளும் பாடல் .நன்றி

    ReplyDelete
    Replies
    1. வாங்க விமலன்,

      நன்றிங்க.

      Delete
  7. வணக்கம் _()_ இன்றுதான் இங்கு நான் வருகிறேன்!

    வலைச்சரத்தில் ஆதியின் வலைப்பூ அறிமுகம் கண்டு அங்கு வந்து இங்கும் தொடரவந்தேன்!..

    ஆனால் என்ன ஒரு எதிர்பாராத நிகழ்விது இங்கே.... ஆச்சரியம்தான்!!!...

    இங்கு நீங்கள் பதிந்த பகிர்ந்த பாடலைச் சொல்கின்றேன்..:)

    எனக்குப் பிடித்த்த்த பாடல் இது. அதனாலும் என் வலைப்பூவிற்கும் இளையநிலா ன்னு பெயர். சந்தோஷத்தில் திணறிவிட்டேன்! மிக அருமை.

    நல்ல நல்ல பொக்கிஷப் பாடல்கள் இங்குள்ளனவே.
    அருமையான தளம். இன்று அறியக் கிடைத்தது மகிழ்வே!

    தொடர்கிறேன். மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி,

      நானும் தங்களின் பின்னூட்டங்களை பல தளங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் வர முடிந்ததில்லை. நன்றி.
      தங்களுக்கும் பிடித்த பாடலாக இந்த பாடல் அமைந்ததில் மகிழ்ச்சி.

      தொடர்ந்து வருகைத் தாருங்கள்.

      Delete