Saturday 7 December 2013

கண்ணா... என்ன குறையோ!



சற்றே இடைவேளைக்குப் பிறகு நமது ரசித்த பாடலில் ஒரு பகிர்வு. இரண்டு மூன்று நாட்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த பாடல்.... சுதா ரகுநாதன் அவர்களின் குரலில் மெல்லிய இசையாக, மனதிற்கு இதம் தரும் பாடல்....எனக்கு பிடித்த இந்தப் பாடல் நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்... கேட்டு ரசியுங்களேன்....

மீண்டும் வேறு ஒரு பாடல் பகிர்வில் சந்திப்போம்,

ஆதி வெங்கட்
திருவரங்கம்.

திரைப்படம் : மந்திரப்புன்னகை
இசை : வித்யாசாகர்
பாடல் வரிகள் : அறிவுமதி
பாடியவர் : சுதா ரகுநாதன்

படம் வெளிவந்த வருடம் - 2010




கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில் 
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் விழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை 
தினம் பாடி வா மனமே

என்ன குறையோ எந்த நிறையோ 
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்


உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான் 

பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......




16 comments:

  1. கண்ணன் மேல் அருமையான பாடல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..

      Delete
  2. நேர்கோடு வட்டம் ஆகலாம்
    நிழல் கூட விட்டுப் போகலாம்
    தாளாத துன்பம் நேர்கையில்
    தாயாக கண்ணன் மாறுவான்


    அருமையான கண்ணன் பாடல் ..!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்...

      Delete
  3. இனிமையான பாடல்... வரிகளுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..

      Delete
  4. அருமையான பாடல்.!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்...

      Delete
  5. பாடலை முன்பும் கேட்டிருக்கிறேன். நீண்ட நாட்களின் பின்னர் இன்று மீண்டும் உங்கள் தயவால் கேட்கக் கிடைத்தது மகிழ்வே.

    கூடவே கண்களில் இருந்து பெருகிய கண்ணீரைக் கட்டுப்படுத்த வெகு நேரமாயிற்றுத் தோழி!

    அந்தக் கண்ணன் அனைவருக்கும் நல்லருள் தரட்டும்.
    உங்கள் பகிர்விற்கு என் நன்றியும் வாழ்த்துக்களும்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி..

      Delete
  6. Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்..

      Delete
  7. பனிமூட்டம் மலையை மூடலாம்
    வழி கேட்டுப் பறவை வாடலாம்
    புதிரானக் கேள்வி யாவிலும்
    விடையாகக் கண்ணன் மாறுவான்
    // வரிகளும் வருடும் இசையும் அருமை! பகிர்விற்கு மிக்க நன்றி!//

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி சார்..

      Delete
  8. சகோதரி இந்த பாடலுக்கான பின்னணி சுவாரசியமானது .
    கண்ணன் எனும் இடத்தில் எல்லாம் அண்ணன் (தம்பி)என்று போட்டால் தமிழ் தலைவன் பிரபாகரன் அவர்களுக்கு பாடப்பட்டதாய் இருக்கும் .இது அறிவுமதி அவர்களில் சாமர்த்தியத்துக்கு ஒரு சான்று

    ReplyDelete
  9. இனிமையான பாடல்....

    ReplyDelete