Thursday 16 December 2010

ரசித்த பாடல் - குறையொன்றுமில்லை




ரசித்த பாடல் என்ற இப்புதியதொரு வலைப்பூவை இன்று தொடங்கியிருக்கிறேன்.  இதில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் நான் ரசித்த, பலராலும் ரசிக்கப்பட்ட பாடல் வரிகள், மற்றும் பாடலின் காணொளி ஆகியவற்றை பதிய எண்ணியிருக்கிறேன்.  ரசிக்கும் பாடல்களை ஒரு தொகுப்பாக வைக்க வசதியாய் இருக்கும் என்று எண்ணத்தினால் இதைத் தொடங்கினேன்.  முதல் பாடலாக ராஜாஜி இயற்றி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி அம்மாவினால் அற்புதமாகப் பாடப்பெற்ற “குறையொன்றுமில்லை பாடல் வரிகள் மற்றும் காணொளியுடன்.  நான் ரசித்த இந்த பாடலை நீங்களும் ரசிக்க ஏதுவாய் உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்.





பாடல் இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி
ராகம்: ராகமாலிகை [சிவரஞ்சனி, காபி, சிந்துபைரவி ராகங்கள்]

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

குறையொன்றுமில்லை
மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை கண்ணா
குறையொன்றுமில்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை
மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறையொன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இரங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

யாரும் மறுக்காத மலையப்பா
யாரும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்
கருணை கடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை
மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா

23 comments:

  1. இந்தப்பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டதாகுமே! பகிர்வு அருமை.

    ReplyDelete
  2. பதிவுலகிற்கு தங்களை வரவேற்கிறேன் நண்பரே

    ReplyDelete
  3. @@ ஆசியா உமர்: மிக்க நன்றி சகோ. எனது மற்ற வலைப்பூவிற்குத் தரும் ஆதரவினை இங்கும் தொடர்ந்ததற்கு நன்றி. எல்லோர் மனதிலும் ரசித்த பாடல் என்பதால்தான் இப்பாடலுடன் தொடங்கினேன்.

    @@ இரவு வானம்: மிக்க நன்றி. இது எனது இரண்டாம் வலைப்பூ. எனது முதல் வலைப்பூ www.venkatnagaraj.blogspot.com. இந்த வலைப்பூவில் இது வரை 104 இடுகைகள் பகிர்ந்துள்ளேன். முடிந்தால் அதற்கும் வாருங்கள்.

    ReplyDelete
  4. இன்று மார்கழி முதல் நாள்.ரசித்த பாடல் வலைப்பூவை ஆரம்பித்து முதலில் "குறையொன்றுமில்லை" பாடலை எங்கள் செவிக்கு விருந்தாக படைத்ததற்கு நன்றி. விரும்பிக் கேட்டு மகிழ்ந்த பாடல்களை கொடுக்க நீங்கள் இருக்கும்போது எங்களுக்கு இனி குறையொன்றுமில்லை.

    ReplyDelete
  5. அழகான ஆரம்பம்.. தொடரட்டும் இசை வெள்ளம்..

    ReplyDelete
  6. மலையப்பரே, இதுவரை எங்களுக்கு இருந்த ஒரு குறையையும் தீர்க்க வந்த மாமணியே, தங்கள் புதிய முயற்சி எங்கள் காதில் பாலும் தேனுமாய் பாய்கிறது. வாடிய மானுட ஜன்மங்கள் தங்களால் புத்த்துயிர் பெறும் என்பதில் அணுவளவும் சந்தேகமில்லை. வாழ்க. வளர்க உம் சீரிய தொண்டு.

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  7. aarambame super song!!!

    thodarungal,, thodaruven

    ReplyDelete
  8. @@ ரேகா ராகவன்: உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி.

    @@ ரிஷபன்: மிக்க நன்றி.

    @@ மந்தவெளி நடராஜன்: மிக்க நன்றி.

    ReplyDelete
  9. @@ புதுகைத் தென்றல்: மிக்க நன்றி.

    ReplyDelete
  10. நல்ல முயற்சி. புதிய வலைபூவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. @@ கௌசல்யா: மிக்க நன்றி.

    @@ கலாநேசன்: தொடர்ந்த ஆதரவிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. புதிய வலைப்பூ... பாட்டுப்பூவா.. தனது மனைவியின் பிரிவில் ராஜாஜி எழுதியது இந்தப் பாடல் என்று எங்கோ படித்திருக்கிறேன். மிகவும் பிரபலப்படுத்தியது எம்.எஸ் அம்மா தான். அற்புதமான துவக்கம். வாழ்க வளர்க. ;-)

    ReplyDelete
  13. @@ RVS: நன்றி. உங்கள் தொடர் ஆதரவினை இந்த வலைப்பூவிற்கும் தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  14. குறைஎன்று எது இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும்போது குறையொன்றுமில்லாது ஆகிவிடுகிறது!

    ReplyDelete
  15. @@ கே.பி. ஜனா: உண்மைதான் சார். இந்த பாடலைக் கேட்கும்போது நம் மனக் கவலைகள் எல்லாமே மறந்து போகும். மிக்க நன்றி.

    ReplyDelete
  16. என்ப்ளாக் பாத்து ஒருவர் பின்னூட்டத்தில் இதேபெயரில் இன்னொரு ப்ளாக் இருக்குன்னு சொன்னாங்க. நானுமிதேபெயரில்தான் ப்ளாக் வச்சிருக்கேன். ரொம்ப அருமையான பாடல் இது.

    ReplyDelete
  17. @@ லக்ஷ்மி: உங்கள் முதல் வருகைக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  18. @@ Jaleela Kamal: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

    ReplyDelete
  19. Excellent song. Recently this song is used in film Maayaavi also.

    ReplyDelete
  20. @@ மோகன் குமார்: ரசித்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete