Saturday 25 December 2010

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

கல்யாணப் பாடல்கள் பல உண்டு.  அந்தப் பாடல்களில் மாம்பலம் சகோதரிகள், விஜயலக்ஷ்மி மற்றும் சித்ரா அவர்களால் பாடப்பெற்ற “சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்” என்ற பாடலின் வரிகள் மிகவும் நகைச்சுவையாக இருக்கும். சம்மந்தியா இல்லை சம்பந்தியா?  விஜய் டீவியில் ஒரு நாள் தேச மங்கையர்க்கரசியின் மீனாக்ஷி திருமண வைபவத்தினைப் பற்றிய சொற்பொழிவில் ”சம்பந்தி” என்பதுதான் சரி எனச் சொல்லி அதற்கு அருமையான விளக்கமும் சொன்னார்.  சமஸ்கிருதத்தில் ”சம்” என்றால் ”நல்ல”; ”பந்தி” என்றால் ”பந்தம், உறவு” எனவும் பொருளாம்.  சம்மந்தி என்று சொல்லும் போது பொருளே மாறி விடுகிறது.  சம் என்றால் நல்ல, மந்தி என்றால் குரங்கு, ஆகவே சம்மந்தி என்றால் நல்ல குரங்கு என்று ஆகிவிடுகிறது எனச் சொன்னார்.  இந்தப் பாடலில் மாம்பலம் சகோதரிகளும் சம்மந்தி என்றே பாடுகின்றனர்.  தமிழ் அறிந்த அறிஞர்கள் சம்மந்தியா, சம்பந்தியா என்று சொல்லுங்களேன்….  Youtube-இல் இப்பாடலை தரவேற்றம் செய்திருக்கும் ROOCHISBLOG என்ற நண்பருக்கு நன்றி.

 
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
     எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் 
வெகு சங்கோஜக்காரி எங்கள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,
மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்
     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்
     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்
     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்
தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி
     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை
குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை
குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்
தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்
கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்
ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்
புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்
சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி
எங்கள் சம்மந்தி
ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்
            எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

20 comments:

  1. வெங்கட் இந்தப் பாடல் நான் மிகவும் ரசித்தப் பாடல் பகிர்வுக்கு நன்றி. எனக்கும் உங்களுக்கு இருக்கும் அதே சந்தேகம் உண்டு

    ReplyDelete
  2. பாக்யதலக்ஷ்மி பாரம்மா ராகத்தில் அமைந்த பாடல் நான் முதல் முறையாக கேட்கிறேன் .... வித்யாசமாக இருந்தது...

    ReplyDelete
  3. இதெல்லாம் சாப்பிடுவாங்களா இல்ல சாப்பிட மாட்டாங்களா?

    ReplyDelete
    Replies
    1. They will have everything but act as if they don't have anything

      Delete
  4. சம்பந்திதான் சரி. இங்கே பார்க்க:http://www.agaraadhi.com/dict/OD.jsp?w=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+&Submit.x=10&Submit.y=9&Submit=Search&ln=ta

    ReplyDelete
  5. நல்ல பாடல். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  6. இதுபோல பாடல்கள் ப்ளாக்ல மட்டும்தான் பாக்க முடிகிரது.

    ReplyDelete
  7. மிகவும் ரசித்தேன். நல்ல பாடல்.
    ஒவ்வொருவரும் மற்றவருக்கு சம்பந்திதானே? அப்படி நினைத்தால் பாடலை ரசிக்க முடியாதுதானே?!

    ReplyDelete
  8. நல்லா இருக்கு ! பாடல் நகைச்சுவையா இருக்கு! .
    மௌனமே மௌனமே என்னுடன் பாடவா!!!

    ReplyDelete
  9. கல்யாணங்களில் இந்தப் பாடலைப் பாடுவார்கள். ஆனால் முழு வடிவம் இப்போதுதான் படிக்கக் கிடைத்தது. நன்றி.
    சம்பந்தி தான் சரி. ஆனால் பேச்சு வழக்கில் சம்மந்தி என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். சில ‘சம்மந்தி’பண்ணுகிற சேஷ்டைகளைப் பார்த்தால் அப்படியும் சொல்லலாம்.

    ReplyDelete
  10. மிகவும் ரசித்தேன்...

    ReplyDelete
  11. இது எனக்குமிகப் புதிய பாடல்ங்க..நல்லா இருக்கு :)

    ReplyDelete
  12. பாடல் அருமை வெங்கட்.

    நானும் தேச.மங்கையர்க்கரசியின் சம்பந்தி விளக்கம் கேட்டேன் நன்றாக விளக்கம் சொன்னார்கள்.

    இரண்டு நல்ல பந்தத்தை உருவாக்குவதால் சம்பந்தம் என்பது தான் சரியான வார்த்தையாக இருக்கும்.
    பெரியவர்கள் சம்பந்தம் கொண்டாச்சா என்று தான் கேட்ப்பார்கள்.

    அரிதான பாடல்களை அடிக்கடி தாருங்கள்.

    ReplyDelete
  13. இந்த மாதிரி கலாட்டா பாடல்கல் கல்யாணங்களில் நிறைய்ய உண்டு. தெலுங்கில் கூட பல பாடல்கள். என் கணவரின் அண்ணன் மகன் கல்யாணத்தின் போது மருமகள் பாடினாள். அருமையான பகிர்வு

    ReplyDelete
  14. நல்லாருக்கு வெங்கட் பாட்டு. இப்போ தான் கேக்கறேன். :)

    ReplyDelete
  15. @@ LK: நன்றி கார்த்திக். சம்பந்தி தான் சரி. பேச்சுவழக்கில் சம்மந்தி என்றே ஆகிவிட்டது போல்!

    ** C. குமார்: மிக்க நன்றி குமார். கல்யாணப் பாடல்களில் நிறைய இது போல் இருக்கின்றது…

    ## கலாநேசன்: சாப்பிடுவாங்க, ஆனா சாப்பிடாதது போல சொல்லுவாங்க :)

    @@ ரேகா ராகவன்: மிக்க நன்றி. அகராதி தளம் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன். உபயோகமான தளம்.

    ** உயிரோடை. மிக்க நன்றி.

    ## லக்ஷ்மி: உண்மைதான் அம்மா. மிக்க நன்றி.

    @@ அமைதி அப்பா: நன்றி சார்.

    @@ கலையன்பன்: நன்றி. உங்கள் வலைப்பூ நன்றாக இருக்கிறது.

    ## ரிஷபன்: வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சேஷ்டை – இருக்கலாம்….:)

    ** கே.பி.ஜனா: மிக்க நன்றி.

    @@ முத்துலெட்சுமி: நன்றி.

    ## கோமதி அரசு: மிக்க நன்றிம்மா. சம்பந்தி விளக்கம் நன்று.

    @@ புதுகைத்தென்றல்: மிக்க நன்றி சகோ.

    @@ விக்னேஷ்வரி: நன்றி. கல்யாணப் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல் இது.

    ReplyDelete
  16. http://blogintamil.blogspot.com/2011/01/blog-post_22.html

    ReplyDelete
  17. திருமணம் முடிந்த அடுத்த நாளன்று கட்டு சாத கூடை என்று கட்டி, புறப்படும்பொழுது
    எல்லா வகையான கேலி விளையாட்டுக்களும் அந்தக்காலத்தில் இருந்தன.
    அதில் ஒன்று தான் நீங்கள் போட்டிருக்கும் பாடல். நான் இதை பல முறை எங்கள்
    கிராம மண விழாக்களில் கேட்டிருக்கிறேன். கூட்டம் கூட்டமாக இதை கேட்டு
    ரசித்து கை தட்டி, ஒன்ஸ் மோர் கேட்பார்கள்.

    இது போல மாமியாரை மருமகள் பாடும் பாடல் ஒன்றினை இங்கே கேளுங்கள்.
    http://www.youtube.com/watch?v=1osK2PUfDcw

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  18. ரொம்ப நாளாக தேடிய பாடல் நன்றிங்க

    ReplyDelete
  19. நானும் இதப் பாடலை சீபத்து இசைவிழாக் கச்சேரியில் இதே மாம்பலம் சகோதரிகள் பாடிக் கேட்டேன்.

    ReplyDelete