Thursday, 17 March 2011

தென்றல் என்னை முத்தமிட்டது…


படம்: ஒரு ஓடை நதியாகிறது
பாடகர்: கிருஷ்ணசந்தர், பி.எஸ். சசிரேகா.
நடிகர்கள்: ரகுவரன், சுமலதா
இசை: இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1983.

கிருஷ்ணசந்தர் அவர்களின் வித்தியாசமான குரலில் அமைந்த இந்த பாடல் எனக்குப் பிடிக்கும். இந்த படத்தில் உள்ள பாடல்களில் மற்றொன்றான “தலையைக் குனியும் தாமரையே” என்ற பாடலும் நான் ரசித்த பாடல் தான். அதனை பிறிதொரு சமயம் பகிர்கிறேன். இதோ நான் ரசித்த இந்த பாடலின் காணொளி கீழே….


தென்றல் என்னை முத்தமிட்டது……
தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....

தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....
தென்றல் என்னை முத்தமிட்டது……

நீண்ட நாளாய் பூக்கள் சேர்த்தேன்
உன்னை எண்ணி மாலை கோர்த்தேன்….
தூரம் இன்று நானும் பார்த்தேன்
என்னை நானே காவல் காத்தேன்
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
ஆ... ஆ... ஆ.... ஆ.... ஆஆஆ
கனவில் ஏதோ கோலம் போட்டேன்
காதல் மேளம் நானும் கேட்டேன்

தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....
தென்றல் என்னை முத்தமிட்டது……

காமன் தோட்டம் பூத்த நேரம்
நாணம் வந்து வேலி போடும்…
ஊடல் என்னை தீண்டச் சொல்லும்
வேலி உன்னை மேயச் சொல்லும்
காத்துக் கிடந்த சோலையோரம்
ஆ... ஆ... ஆ.... ஆ....ஆஆஆ
காத்துக் கிடந்த சோலையோரம்
கங்கை வந்து பாயும் நேரம்

தென்றல் என்னை முத்தமிட்டது……
இதழில் இனிக்க… இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க.....
தென்றல் என்னை தென்றல் என்னை
தென்றல் என்னை முத்தமிட்டது……

9 comments:

  1. தென்றலின் முத்தம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இந்தப்பாடல் இதுவரை கேட்டதில்லை. இப்பதான் கேட்டேன். நல்லா இருக்கு,

    ReplyDelete
  3. அருமையான பகிர்வுங்க...

    சில நல்ல வரிகளும் கூட..

    /// என்னை நானே காவல் காத்தேன் ///

    பாடலாசிரியர் யாரென்று தெரியுமா வெங்கட் சார்.

    ReplyDelete
  4. தென்றலின் முத்தம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ரகுவரன் இப்படியெல்லாம் நடிச்சாரா?!

    ReplyDelete
  6. பாடல் ஆசிரியர் யார்?

    ReplyDelete
  7. மனதை தாலாட்டும் பாடல் எத்தனை முறை கேட்டாலும்...........

    ReplyDelete