சிவாஜி கணேசன் மற்றும் மஞ்சுளா விஜயகுமார் நடிப்பில் 1975-ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் Dr. சிவா. திரு ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய இந்த படத்திற்கு இசை அமைத்தது எம்.எஸ். விஸ்வநாதன். இந்த படத்திலிருந்து ஒரு நல்ல பாடல் உங்கள் ரசனைக்காய்….
பாடலின் விவரங்கள் கீழே.
படம்: Dr. சிவா பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ், பி. சுசீலா. நடிகர்கள்: சிவாஜி கணேசன், மஞ்சுளா விஜயகுமார். பாடல் வரிகள்: வாலி இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் படம் வெளிவந்த வருடம்: 1975
கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு கே.வி. மகாதேவன் அவர்களின் இசையில் காதலை மிக அழகாய்ச் சொல்லும், காதல் ரசம் ததும்பும் பாடல். ஜெமினி கணேசன், சரோஜா தேவிக்காக, டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா அவர்கள் குரல் கொடுக்க, ”பணமா பாசமா” திரைப்படப் பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று. YOUTUBE-ல் இதை பார்த்து ரசியுங்கள்.
உச்சி முதற்கொண்டு பாதம் வரை
இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
உச்சி முதற்கொண்டு பாதம் வரை
இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
மிச்சம் இருப்பதை நாளை என்று…
மிச்சம் இருப்பதை நாளை என்று…
நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன சொல்ல…
மெல்ல.. மெல்ல….
அத்திப் பழத்துக்கு மேலழகு
உந்தன் ஆசைப்பழத்துக்கு உள்ளழகு
அத்திப் பழத்துக்கு மேலழகு
உந்தன் ஆசைப்பழத்துக்கு உள்ளழகு
தத்தித் தவிக்கின்ற பொன் அழகு
தத்தித் தவிக்கின்ற பொன் அழகு
உன்னை தழுவத் துடிக்கின்ற பெண் அழகு
மெல்ல… மெல்ல மெல்ல….
எந்தன் மேனி நடுங்குது மெல்ல…
சொல்ல… சொல்லச் சொல்ல…
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல….
தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக் கொள்ள
தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக் கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்…
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளத்தில் நின்று ஆடுகின்றாய்…
ஆடுகின்றாய்… ஆடுகின்றாய்… மெல்ல….
மேலைத் திசையினில் போய் உறங்கும்
கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்
மேலைத் திசையினில் போய் உறங்கும்
கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்
காலைப் பொழுதினில் சிந்தனைகள்….
காலைப் பொழுதினில் சிந்தனைகள்….
மறு மாலை வரும் வரை கற்பனைகள்…
மெல்ல… சொல்லச் சொல்ல….
ஒன்றிலிருந்தே ஒன்று வரும்
அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்…
ஒன்றிலிருந்தே ஒன்று வரும்
அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்…
ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை…..
ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை
நாம் ஒன்று இரண்டென்பது என்றுமில்லை…
மெல்ல… மெல்ல மெல்ல….
எந்தன் மேனி நடுங்குது மெல்ல…
சொல்ல… சொல்லச் சொல்ல…
சிவாஜி கணேசன், சுஜாதா நடித்த அந்தமான் காதலி படம். படம் வெளிவந்து 33 வருடங்கள் கழிந்தாலும் இன்னமும் பசுமையாய் நினைவில் நிற்கும் பாடல். கவிஞர் கண்ணதாசனின் பாடல் வரிகள் தேனினும் சுவையாக இனிக்கும். பாடலின் விவரங்கள் கீழே.
படம்: அந்தமான் காதலி பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம். நடிகர்கள்: சிவாஜி கணேசன், சுஜாதா பாடல் வரிகள்: கவிஞர் கண்ணதாசன் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் படம் வெளிவந்த வருடம்: 1978