Wednesday 20 April 2011

மெல்ல… மெல்ல மெல்ல….

கவிஞர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு கே.வி. மகாதேவன் அவர்களின் இசையில் காதலை மிக அழகாய்ச் சொல்லும், காதல் ரசம் ததும்பும் பாடல். ஜெமினி கணேசன், சரோஜா தேவிக்காக, டி.எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா அவர்கள் குரல் கொடுக்க, ”பணமா பாசமா” திரைப்படப் பாடல் நான் மிகவும் ரசித்த பாடல்களில் ஒன்று. YOUTUBE-ல் இதை பார்த்து ரசியுங்கள்.



மெல்ல… மெல்ல மெல்ல….
எந்தன் மேனி நடுங்குது மெல்ல…

சொல்ல... சொல்லச் சொல்ல…
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல….
மெல்ல… மெல்ல மெல்ல….
எந்தன் மேனி நடுங்குது மெல்ல…
சொல்ல… சொல்லச் சொல்ல…
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல….

உச்சி முதற்கொண்டு பாதம் வரை
இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…
உச்சி முதற்கொண்டு பாதம் வரை
இன்று ஓடிடும் மின்னலை என்ன சொல்ல…

மிச்சம் இருப்பதை நாளை என்று…
மிச்சம் இருப்பதை நாளை என்று…
நெஞ்சில் மின்னிடும் ஆசையை என்ன சொல்ல…
மெல்ல.. மெல்ல….

அத்திப் பழத்துக்கு மேலழகு
உந்தன் ஆசைப்பழத்துக்கு உள்ளழகு
அத்திப் பழத்துக்கு மேலழகு
உந்தன் ஆசைப்பழத்துக்கு உள்ளழகு
தத்தித் தவிக்கின்ற பொன் அழகு
தத்தித் தவிக்கின்ற பொன் அழகு
உன்னை தழுவத் துடிக்கின்ற பெண் அழகு
மெல்ல… மெல்ல மெல்ல….
எந்தன் மேனி நடுங்குது மெல்ல…
சொல்ல… சொல்லச் சொல்ல…
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல….

தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக் கொள்ள

தாமரைப் பூவினில் வண்டு வந்து
தேனருந்த மலர் மூடிக் கொள்ள
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்…
உள்ளிருந்தே வண்டு ஆடுதல் போல்
உள்ளத்தில் நின்று ஆடுகின்றாய்…
ஆடுகின்றாய்… ஆடுகின்றாய்… மெல்ல….

மேலைத் திசையினில் போய் உறங்கும்
கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்
மேலைத் திசையினில் போய் உறங்கும்
கதிர் மீண்டும் வரும் வரை நம் உலகம்
காலைப் பொழுதினில் சிந்தனைகள்….
காலைப் பொழுதினில் சிந்தனைகள்….
மறு மாலை வரும் வரை கற்பனைகள்…
மெல்ல… சொல்லச் சொல்ல….

ஒன்றிலிருந்தே ஒன்று வரும்
அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்…
ஒன்றிலிருந்தே ஒன்று வரும்
அந்த ஒன்றுக்குள் ஒன்று உறங்கிவிடும்…
ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை…..
ஒன்று பிரிந்தபின் ஒன்றுமில்லை
நாம் ஒன்று இரண்டென்பது என்றுமில்லை…
மெல்ல… மெல்ல மெல்ல….
எந்தன் மேனி நடுங்குது மெல்ல…
சொல்ல… சொல்லச் சொல்ல…
நெஞ்சம் துள்ளுது துள்ளுது சொல்ல….


7 comments:

  1. அருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. இந்தப்படத்தை ஒரு 25 தடவையாவது பார்த்திருப்பேன்.
    படமும் அருமை, கதையும் அருமை, நகைச்சுவையும் அருமை, பாடல்கள் அனைத்துமே அருமை.

    மாறியது நெஞ்சம் .... மாற்றியது யாரோ, காரிகையின் உள்ளம் ... காணவருவாரோ.

    எலந்தப்பயம்....எலந்தைப்பயம்
    செக்கச்சிவந்தபழம்...இது தேனாட்டம் இருக்கும் பழம்

    கொத்தவரங்கா போல உடம்பு அலேக் etc., etc.,

    காதல் மன்னன் ஜெமினி, அண்ணி சரோஜா தேவி,
    நாகேஷ், நாகைய்யா, வி.எஸ்.ராகவன், வரலக்ஷ்மி? என அனைவருமே சூப்பராக நடித்திருப்பார்கள்.

    1967-68 இல் வந்த படம் என்று நினைக்கிறேன். நினைவூட்டியதற்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பாடல்

    ReplyDelete
  4. நாம் ஒன்று, இரண்டென்பது என்றுமில்லை என்பதை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வாங்கு வாழ்பவர்க்கு என்றும் இன்பமே.!!இனியதொரு பாடல் பகிர்வுக்கு நன்றி, திரு வெங்கட் அவர்களே!!

    மந்தவெளி நடராஜன்.

    ReplyDelete
  5. அருமையான பாடல்
    கண்ணை மூடி சிறிது நேரம் ரசிக்க
    மனம் லேசானது போல் இருந்தது
    பகிர்விக்கு நன்றி

    ReplyDelete