Thursday 28 April 2011

மலரே குறிஞ்சி மலரே….




சிவாஜி கணேசன் மற்றும் மஞ்சுளா விஜயகுமார் நடிப்பில் 1975-ஆம் வருடம் வெளிவந்த திரைப்படம் Dr. சிவா. திரு ஏ.சி. திருலோகசந்தர் இயக்கிய இந்த படத்திற்கு இசை அமைத்தது எம்.எஸ். விஸ்வநாதன். இந்த படத்திலிருந்து ஒரு நல்ல பாடல் உங்கள் ரசனைக்காய்….

பாடலின் விவரங்கள் கீழே.

படம்: Dr. சிவா
பாடகர்கள்: கே.ஜே. யேசுதாஸ், பி. சுசீலா.
நடிகர்கள்: சிவாஜி கணேசன், மஞ்சுளா விஜயகுமார்.
பாடல் வரிகள்: வாலி
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
படம் வெளிவந்த வருடம்: 1975

பாடலைக் கேட்க:


Malare Kurinji Malare | Musicians Available

பாடலைக் காண:



பாடல் வரிகள்:

மலரே குறிஞ்சி மலரே…..
மலரே குறிஞ்சி மலரே….

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே…..

யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
தாய் மடி மறந்து தலைவனைச் சேரும்
பெண்ணெனும் பிறப்பல்லவோ

கொடியரும்பாக செடியினில் தோன்றி
கோவிலில் வாழும் தேவனைச் சேரும்
மலரே நீ பெண்ணல்லவோ

நாயகன் நிழலே நாயகி என்னும்
காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
மகளே உன் திருமாங்கல்யம்

தாய் வழிச் சொந்தம் ஆயிரம் இருந்தும்
தலைவனின் அன்பில் விளைவதுதானே
உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்
மலரே குறிஞ்சி மலரே…..

பாடிடும் காற்றே பறவையின் இனமே
பனி மலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே
ஓடோடி வாருங்களேன்…

பால் மணம் ஒன்று பூ மனம் ஒன்று
காதலில் இன்று கலந்தது கண்டு

நல்வாழ்த்து கூறுங்களேன்
தலைவன் சூட நீ மலர்ந்தாய்
பிறந்த பயனை நீ அடைந்தாய்

மலரே குறிஞ்சி மலரே…..
மலரே குறிஞ்சி மலரே…..


8 comments:

  1. அருமையான பாடல். மீண்டும் கேட்டேன். ரசித்தேன்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. கேட்கத் தெவிட்டாத பாடல்..

    ReplyDelete
  3. வரிவடிவில் பாடலைப் பார்க்கும்போதுதான்
    அதன் மேன்மை புரிகிறது
    நல்ல பாடல்களாகத் தேர்ந்தெடுத்து தருகிறீர்கள்
    நன்றி

    ReplyDelete
  4. மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.

    //Ramani said...
    வரிவடிவில் பாடலைப் பார்க்கும்போதுதான்
    அதன் மேன்மை புரிகிறது
    நல்ல பாடல்களாகத் தேர்ந்தெடுத்து தருகிறீர்கள்
    நன்றி//

    ReplyDelete
  5. வழக்கம் போல் அருமையான பாடல் சகோ.

    ReplyDelete
  6. lady voice is suseela or janaki ??? like janaki voice !!!

    ReplyDelete