இயக்குனர் சிகரம் திரு கே. பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம் உன்னால் முடியும் தம்பி. அவரது படங்களில் வந்த பல பாடல்களில் நான் ரசித்த பாடல்கள் ஏராளம். அவருக்கு தாதா சாஹேப் பால்கே விருது வழங்குவதாக அறிவிப்பு வந்திருக்கும் இந்த சமயத்தில் நான் ரசித்த பாடலாய் இந்த பாடலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி. தொடரட்டும் அவரது புகழ்…
பாடலின் விவரங்கள் கீழே.
படம்: உன்னால் முடியும் தம்பி
பாடகர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
நடிகர்கள்: கமல் ஹாசன், சீதா.
பாடல் வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
படம் வெளிவந்த வருடம்: 1988
பாடலைக் கேட்க:
Akkam Pakkam Paarada | Musicians Available
பாடலைக் காண:
பாடல் வரிகள்:
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
அம்மா பசி என்றொரு கூக்குரல்
அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப் பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி ஹே..
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு
சொல்லாதே சாமி
நம்ம பூமியோ எப்போதும்
தர்மம் செஞ்ச பூமி
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
தேசமிது செஞ்சது உனக்கு
ஏராளம் இங்கே உண்டு
நீ என்ன செஞ்ச அதுக்கு
ஒன்னக் கேட்டு நீ பதில் சொல்லு
நமக்கென்ன போடா போன்னு நழுவுறே
நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது ஹே..
நமக்கென்ன போடா போன்னு நழுவுற
நேரம் பார்த்து
நாடு முழுதும் தீயாப் போனா
வீடு மட்டும் ஏது
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
வாயில் என்ன மந்திரமா
மனசு என்ன எந்திரமா
சாமியிடம் பேசுது புள்ள
தாயழுகை கேட்கவுமில்லை
அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா
ஆகாசப் பார்வை என்ன சொல்லு ராசா
மிகவும் அருமையான பாடல்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிகள்.
பகிர்வுக்கு நன்றி வெங்கட்
ReplyDeleteஅருமையான பாடல்.
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
Lyrics cannot be by Vairamuththu. The relationship between Vairamuththu and Ilayaraja ended in 1986 - the last film being 'punnagai mannan'.
ReplyDeleteஅருமையான பாடல்
ReplyDeleteஅருமை அய்யா
இந்தப் பாடலுக்கும் இந்தப் படத்துக்கும் என் சமுக உணர்வைக் கட்டமைத்ததில் முக்கியப் பங்குண்டு! இதன் இரண்டாம் சரணத்தில் வரும் கடைசி அடி பத்துப் பக்கம் கட்டுரையாக எழுத வேண்டியதை இரண்டே வரியில் சொல்லிப் போகும்! இதைப் பகிர்ந்தமைக்கு நன்றி! ஆனால் ஒரு சிறு திருத்தம். இதை எழுதியவர் வைரமுத்து இல்லை; புலமைப்பித்தன் அவர்கள். சொல்லப் போனால் இந்தப் படத்தில் வைரமுத்து அவர்கள் எந்தப் பாடலும் எழுதவில்லை.
ReplyDelete