Thursday 16 June 2011

மரகதவல்லிக்கு மணக்கோலம்



ரசித்த பாடல்-இல் அடுத்ததாய் எனக்கு மிகவும் பிடித்த, நதியா நடித்த ”அன்புள்ள அப்பா” படத்தில் இருந்து ஒரு அர்த்தமுள்ள பாடல். மிகவும் பிடித்தது மட்டுமல்ல நான் அவ்வப்போது முணுமுணுக்கும் பாடலும் இது.

பாடல் பற்றிய விவரங்கள்:
படம்: அன்புள்ள அப்பா
பாடகர்: கே.ஜே. யேசுதாஸ்
நடிகர்கள்: சிவாஜி, நதியா, ரகுமான்
பாடல் வரிகள்: வைரமுத்து
இசை: சங்கர் கணேஷ்
படம் வெளிவந்த வருடம்: 1987

பாடலைக் கேட்க:



பாடல் வரிகள்:

மரகதவல்லிக்கு மணக்கோலம்
என் மங்கலச் செல்விக்கு மலர்க்கோலம்.
கண்மணித் தாமரை கால் கொண்டு நடந்தால்
கண்களில் ஏன் இந்த நீர்க்கோலம்
கோலம் திருக்கோலம் (மரகதவல்லிக்கு)

காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
கட்டித் தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ
கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ.
தினந்தோறும் திருநாளோ (மரகதவல்லிக்கு)

மலர் என்ற உறவு பறிக்கும் வரை
மகள் என்ற உறவு கொடுக்கும் வரை
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்
எந்தன் வீட்டு கன்று இன்று
எட்டி எட்டிப் போகிறது
கண்ணின் ஓரம் கண்ணீர் வந்து
எட்டி எட்டிப் பார்க்கிறது
இமைகள் அதை மறைக்கிறது (மரகதவல்லிக்கு)


4 comments:

  1. மலர் என்ற உறவு பறிக்கும் வரை
    மகள் என்ற உறவு கொடுக்கும் வரை...

    நல்ல பாடல்.

    ReplyDelete
  2. Voted 2 to 3

    நல்ல பாட்டு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. நான் ரசித்த பாடலை ரசித்து கருத்திட்டு, வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  4. "காலையில் கதம்பங்கள் அணிந்திருப்பாள்
    மாலையில் மல்லிகை முடிந்திருப்பாள்
    திங்களில் சாமந்தி வைத்திருப்பாள்
    வெள்ளியில் முல்லைகள் சுமந்திருப்பாள்
    கட்டித் தங்கம் இனிமேல் அங்கே என்ன பூவை அணிவாளோ
    கட்டிக் கொண்ட கணவன் வந்து சொன்ன பூவை அணிவாளோ.
    தினந்தோறும் திருநாளோ" --- ஆஹா

    ReplyDelete