Thursday 6 October 2011

இலக்கணம் மாறுதோ..




படம்:                      நிழல் நிஜமாகிறது
பாடகர்:                    எஸ்.பி.பி, வாணி ஜெயராம்.
நடிகர்கள்:                 கமல்ஹாசன், சுமித்ரா
பாடல் வரிகள்:            கண்ணதாசன்
இசை:                     எம்.எஸ். விஸ்வநாதன்
படம் வெளிவந்த வருடம்: 1978

என்னுடைய ரசித்த பாடல் வலைப்பூவில் பாடல் பகிர்ந்து ரொம்ப நாட்கள்  ஆகிறது.  நிழல் நிஜமாகிறது படத்திலிருந்து எஸ்.பி.பி மற்றும் வாணி ஜெயராம் பாடிய இந்த பாடல் நான் ரசித்த பாடல்களுக்குள் ஒன்று.  பாடலை கேளுங்களேன்.


Ilakkanam Marutho | Online Karaoke

பாடல் வரிகள் கீழே….

இலக்கணம் மாறுதோ..
இலக்கணம் மாறுதோ.. இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது என்ன பாடம் இதுவரை நடித்தது
அது என்ன வேடம் இது என்ன பாடம்
இலக்கணம் மாறுதோ.. ஓ….

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார் மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ
பெண்மை தந்தானோ

இலக்கணம் மாறுதோ....

என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
என் வாழ்க்கை நதியில் கரை ஒன்று கண்டேன்
உன் நெஞ்சில் ஏனோ கறை ஒன்று கண்டேன்
புரியாததாலே திரை போட்டு வைத்தேன்
திரை போட்டபோதும் அணை போட்டதில்லை
மறைத்திடும் திரைதனை விலக்கி வைப்பாயோ
விளக்கி வைப்பாயோ


தள்ளாடும் பிள்ளை உள்ளமும் வெள்ளை
தாலாட்டுப் பாட ஆதாரம் இல்லை
தெய்வங்களெல்லாம் உனக்காக பாடும்
பாடாமல் போனால் எது தெய்வமாகும்
மறுபடி பிறக்கும் உனக்கொரு பாதை
உரைப்பது கீதை


மணியோசை என்ன இடியோசை என்ன
எதுவந்த போதும் நீ கேட்டதில்லை
நிழலாக வந்து அருள் செய்யும் தெய்வம்
நிஜமாக வந்து எனை காக்கக் கண்டேன்
நீ எது நான் எது ஏன் இந்த சொந்தம்
பூர்வ ஜென்ம பந்தம் ..........

இலக்கணம் மாறுதோ.. இலக்கியம் ஆனதோ
இதுவரை நடித்தது அது என்ன வேடம்
இது.. என்ன.. பாடம்



20 comments:

  1. மீண்டுமோர் அருமையான படலத் தெரிவு .மிக்க நன்றி பகிர்வுக்கு ......

    ReplyDelete
  2. தெய்வங்களெல்லாம் உனக்காக பாடும்
    பாடாமல் போனால் எது தெய்வமாகும்

    அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. @ அம்பாளடியாள்:
    # இராஜராஜேஸ்வரி:

    தங்களது வருகைக்கும் பாடலை ரசித்து கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. பாடல் அருமையாக அர்த்தம் உள்ளதாக உள்ளது.

    ReplyDelete
  5. @ வை. கோபாலகிருஷ்ணன்: பழைய பாடல்களில் பல அர்த்தம் பொதிந்ததாக இருந்தது இல்லையா.... இப்போதைய பாடல்களில் பல பாடல்கள் புரிவதில்லை... :)

    தங்களுடைய வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  6. வாணி ஜெயராமின் இனிமையான குரலின் ரசிகை நான்.இந்த பாடலும் எனக்குப் பிடித்த பாடலே.பகிர்விற்கு நன்றி :-))

    ReplyDelete
  7. # ராஜி: வாணி ஜெயராம் - குரல் வளமை அவருக்கு அதிகம்....

    உங்களது வருகைக்கும் கருத்திற்கும், பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  8. ரொம்ப நாளா ரசித்தபாடல் எதுவும் வல்லியேன்னு பாத்தேன். இந்தப்படலும் அருமைதான்.

    ReplyDelete
  9. அருமையான பாடல் கேட்ட்டு ரசித்தேன்
    பதிவிட்டமைக்கு நன்றி

    ReplyDelete
  10. பாலச்சந்தரின் படங்களின் பாடல்கள் எப்போதும் கதையோடு ஒன்றியே இருக்கும். படத்தைப் பார்த்தவர்கள் இந்தப் பாடலைக் கேட்டால் அதன் இனிமை இரட்டிப்பாகும். அற்புதமான பாடல்.

    (கண்ணனை கைக்குழந்தையாகவே ரொம்ப நாளாகவே விட்டு வைத்திருக்கிறீர்களே என்று நினைத்தேன். ஒரு வழியாக ஸ்ஸகூலுக்கு அனுப்பி விட்டீர்களா? அடம் பிடிக்காமல் போனானா?)

    ReplyDelete
  11. @ லக்ஷ்மி: கொஞ்ச நாளா பிசி.... இந்தப் பக்கத்தில் பாடல்கள் பதிய முடியவில்லை...

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும், பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றிம்மா....

    ReplyDelete
  12. # ரமணி: தங்களது வருகைக்கும் இந்த பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  13. @ ஈஸ்வரன்: கண்ணனை ஒருவழியா ஸ்கூலுக்கு அனுப்பிட்டு தான் இந்த பாடலைப் போட்டு இருக்கிறேன் அண்ணாச்சி....! ரொம்பவே குசும்புதான் உங்களுக்கு :)

    தங்களது வருகைக்கும் கருத்திற்கும் பாடலை ரசித்தமைக்கும் மிக்க நன்றி அண்ணாச்சி...

    ReplyDelete
  14. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. @ சித்ரா: தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  16. @ அம்பாளடியாள்: தங்களது வருகைக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.....

    ReplyDelete
  17. @ என் ராஜபாட்டை ராஜா - தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  18. நல்ல பாடல் கேட்க இனிமை ,நிறைய தடவை கேட்டுள்ளேன் ,எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று

    ReplyDelete
  19. @ M.R. : தங்களது வருகைக்கும் பாடலை ரசித்தமைக்கும் நன்றி நண்பரே...

    ReplyDelete
  20. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete