Monday 18 June 2012

தனிமையிலே இனிமை காண...




ரசித்த பாடல் வலைப்பூவில் ஐம்பதாவது பாடலாக ”தமிழுக்கும் அமுதென்று பேர்” பதிவிட்ட பிறகு நீண்ட இடைவெளி. “மன்னிக்க வேண்டுகிறேன்” என்று பாடலாகவே போடலாமா என யோசித்தேன்… இருந்தாலும், “தனிமையிலே இனிமை காண முடியுமா?” என்ற இந்த பாடலுடன் மீண்டும் உங்களனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. பாடல் ”தனிமையிலேயே..” எனத் தொடங்கினாலும் நான் உங்களோடு சேர்ந்துதான் கேட்கப்போகிறேன்….

அடுத்த ரசித்த பாடலுடன் சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


பாடல் இடம்பெற்ற திரைப்படம்: ஆடிப் பெருக்கு.
பாடியவர்கள்: ஏ.ஏம். ராஜா, பி. சுசீலா.
பாடலுக்கு இசை: ஏ.ஏம். ராஜா
பாடல் வரிகள்: கே.டீ. சந்தானம்.
படம் வெளி வந்த வருடம்: 1962.




தனிமையிலே….  தனிமையிலே…
இனிமை காண முடியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே….  தனிமையிலே…
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
அதைச் சொல்லிச் சொல்லித் திரிவதனால் துணை வருமா?
துணையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா?
அதைச் சொல்லிச் சொல்லித் திரிவதனால் துணை வருமா?

மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா?
மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா?
வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா?

தனிமையிலே…
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை
மலர் இருந்தால் மணம் இருக்கும் தனிமையில்லை
செங்கனி இருந்தால் சுவை இருக்கும் தனிமையில்லை

கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
கடல் இருந்தால் அலை இருக்கும் தனிமையில்லை
நாம் காணும் உலகில் ஏதும் தனிமை இல்லை

தனிமையிலே…. 
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?

பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
பனி மலையில் தவமிருக்கும் மா முனியும்
கொடி படையுடனே பவனி வரும் காவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
கவிதையிலே நிலை மறக்கும் பாவலரும்
இந்த அவனியெல்லாம் போற்றும் ஆண்டவனாயினும்

தனிமையிலே…. 
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நல் இரவினிலே சூரியனும் தெரியுமா?
தனிமையிலே இனிமை காண முடியுமா?



16 comments:

  1. மிகவும் அருமையான பாடல் ;)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. சார்.

      Delete
  2. எனக்கு மிகவும் பிடித்த பாடல்
    ஏ எம் ராஜா அவர்கள் குரலில்
    அவர் இசையில் விளைந்த அருமையான
    பாடல்களில் இதுவும் ஒன்று
    காணொளியுடன் பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஏ.எம். ராஜாவின் பல பாடல்களில் இந்தப் பாடலும் எனக்குப் பிடித்த ஒன்று.

      தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

      Delete
  3. அருமையான பாடல் பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

      Delete
  4. இரவின் மடியில் இது மாதிரிப் பாடல்கள் கேட்க ரொம்பவும் இனிமையாக இருக்கும். ஏ எம் ராஜா பாடல்கள் இனிமைதான். ஆனால் அவர் பொய்க் குரல் மன்னர்!

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பிற்கு மிக்க நன்றி ஸ்ரீராம்....

      ஏ.எம். ராஜா பொய்க்குரல் மன்னர்? :))))

      Delete
  5. அருமையான பாடல்.. என்றும் இனிமை

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் இனிய கருத்திற்கும் மிக்க நன்றி ஆதிரா.

      Delete
  6. தனிமை என்பது சாபமாய் வாய்க்கப்பெற்ற உலகில் நல்லதொரு பாடல்.சில வேளைகளில் சில பாடல்கள் மனதிற்குமருந்திடும்.இதுவும் அது மாதிரி ஒன்றே/

    ReplyDelete
    Replies
    1. //சில வேளைகளில் சில பாடல்கள் மனதிற்குமருந்திடும்.இதுவும் அது மாதிரி ஒன்றே///

      உண்மை விமலன். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      Delete
  7. அருமையான பாடல்.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    ReplyDelete
  8. அருமையான அறிமுகமில்லாத பாடல் பகிர்வு..:)
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இன்றுதான் உங்கள் தளத்துக்கு வருகிறேன். பாடல்களை இவ்வாறு தொகுத்து வைப்பது புது முயற்சி. இனி உங்கள் பாடல்களைத் தொடரப் போகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் தளத்துக்கும் வாருங்கள். என் பதிவுகளோடு என் தளத்தில் இணைந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். என் புதிய முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருப்பீர்கள் என நம்புகிறேன்.
    http://varikudhirai.blogspot.com/2012/08/tamils-wer-separated-by-caste.html

    ReplyDelete